இலவச எண்: 1800-425-31111

ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில்

தென்னாடுடைய சிவபெருமானின் பிரம்மாண்ட உறைவிடம். இங்கு அமைந்துள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள், தாழ்வாரங்கள், தூண்கள் - இவை அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு அற்புதமான மற்றும் தெய்வீகக் கதையைச் சொல்லும் இடமாக உள்ளன. இத் திருத்தலத்தின் மிகச்சிறந்த அமைதி மற்றும் புனிதம் நிறைந்த ஓர் அக புறச்சூழ்நிலையானது உங்களை ஒரு உயர்ந்த சக்தி நிலைக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவரும்.

ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் ஒருவர் நுழைந்தால், அந்த வளாகத்தை ஒரு தலைசிறந்த படைப்பாக மாற்றும் கட்டடக்கலை தனித்தன்மையைக் கண்டு வியந்து போவார். 

25 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில் இந்தியாவின் மிகப்பெரிய கோயில் வளாகங்களில் ஒன்றாகும். இங்கு சிறப்பு என்னவென்றால் ஏகாம்பரேஸ்வரர் என்ற திருப்பெயரால் போற்றப்படும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உள்ளது.

நான்கு கம்பீரமான நுழைவாயில் கோபுரங்கள் கோவில் வளாகத்திற்கு வருபவர்களை வரவேற்கின்றன. தெற்கு கோபுரம் 11 மாடிகள் உயரமானது மற்றும் நம் பாரத நாட்டிலேயே மிக உயரமான ஒன்றாகும். இந்த வளாகத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன.

மேலும் நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த பழமையான கோவில் கிறித்துவுக்கு பிறகு 600 CE முதல் இருந்ததாக நம்பப்படுகிறது. இது மட்டுமின்றி பாரம்பரிய தமிழ் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 9 ஆம் நூற்றாண்டில் சோழ வம்சத்தினர் கோயிலின் தற்போதைய கொத்து அமைப்பைக் கட்டினார்கள். பின்னர் விஜயநகர மன்னர்களால் இது விரிவாக்கம் செய்யப்பட்டது.

கோயிலின் கருவறையில் ஒரு ‘லிங்கம்’ வடிவிலான சிவபெருமானின் உருவம் உள்ளது. கோவிலின் உள் பிரகாரம் பல்வேறு சிறு சிவலிங்கங்களின் வரிசையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சஹஸ்ர லிங்கம். அதன் மீது 1,008 சிவலிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

கோயிலுடன் தொடர்புடைய பல திருவிழாக்கள் உள்ளன. அவை ஆண்டு முழுவதும் நிகழ்கின்றன. மிக முக்கியமான பங்குனி பிரம்மோற்சவம் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் 10 நாட்கள் நீடிக்கும்.

KANCHEEPURAM
WEATHER
Kancheepuram Weather
26.1°C
Mist

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

Hotel Tamilnadu - Kancheepuram

Kamatchi Amman Sannathi Street

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...