இலவச எண்: 1800-425-31111

மிகப்பெரிய பாரம்பரியங்களின் நகரம், அதன் வசீகரமான பழமையின் அழகை வெளிப்படுத்துகிறது; அதே நேரத்தில் பார்வையாளர்கள் தங்கள் விடுமுறையைக் கழிக்க சுவாரஸ்யமான இடங்களுடன் நிறைந்திருக்கிறது. காஞ்சிபுரம் அதன் புகழ்பெற்ற கடந்த காலத்தை ஒரு உயிர்ப்பான தன்மையுடன் ஒருங்கிணைத்து வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத அனுபவங்களை உங்களுக்கு வழங்குகிறது

தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட 163 மெகாலிதிக் பண்டைய பகுதிகளில் 70% க்கும் அதிகமான பகுதிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளன. அவை எருமையூர், நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், சிக்கராயபுரம், அய்யஞ்சேரி, கிளாம்பாக்கம் மற்றும் நன்மங்கலம் ஆகிய இடங்களில் உள்ளன. 

காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. கிழக்கில் செங்கல்பட்டு மாவட்டமும், வடகிழக்கில் சென்னை மாவட்டமும், மேற்கில் ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களும், வடக்கே திருவள்ளூர் மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

இந்தியாவின் ஏழு புனித நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரம். இது பின்னர் சோழர்கள், விஜயநகர மன்னர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் கோட்டையாக மாறியது. தனித்துவமான கட்டிடக்கலை அழகுடன் கூடிய பல அற்புதமான கோவில்களை அதன் புகழ்பெற்ற திராவிட பாரம்பரியத்திற்கு ஒரு செழுமையான சாட்சியத்தை நாம் காணலாம். வரதராஜப் பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், குமார கோட்டம், கச்சபேஸ்வரர் கோயில் மற்றும் கைலாசநாதர் கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இப்பகுதி நாட்டிலேயே சிறந்த பட்டுப் புடவைகளின் நன்கு அறியப்பட்ட மையமாகும். பட்டுப் புடவைகள் கைமுறையாக நெய்யப்பட்டு, 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தொழில் வாழ்வாதாரமாக உள்ளது. 16 ஆம் நூற்றாண்டிலிருந்து, இங்குள்ள பட்டு நெசவாளர்கள் அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்தின் உயர்தர மல்பெரி பட்டுகளைப் பயன்படுத்தினர். அவர்களின் கைத்தறியில் சுத்தமான தங்க நூல் அழகிய வண்ணங்களிலும் வடிவங்களிலும் நெய்யப்பட்டுள்ளது.

இப்பகுதி கற்றல், கலாச்சாரம் மற்றும் தத்துவத்தின் மையமாக இருந்தது. சங்கராச்சாரியாரும் புத்த துறவி போதிதர்மாவும் இங்கு வாழ்ந்து பணிபுரிந்தனர்.

KANCHEEPURAM
WEATHER
Kancheepuram Weather
25.9°C
Clear

பயண ஸ்தலங்கள்

காஞ்சிபுரம்

மிகப்பெரிய பாரம்பரியங்களின் நகரம், அதன் வசீகரமான பழமையின் அழகை வெளிப்படுத்துகிறது; அதே நேரத்தில் பார்வையாளர்கள் தங்கள் விடுமுறையைக் கழிக்க சுவாரஸ்யமான இடங்களுடன் நிறைந்திருக்கிறது. காஞ்சிபுரம் அதன் புகழ்பெற்ற கடந்த காலத்தை ஒரு உயிர்ப்பான தன்மையுடன் ஒருங்கிணைத்து வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத அனுபவங்களை உங்களுக்கு வழங்குகிறது.

மேலும் வாசிக்க

ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில்

தென்னாடுடைய சிவபெருமானின் பிரம்மாண்ட உறைவிடம். இங்கு அமைந்துள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள், தாழ்வாரங்கள், தூண்கள் - இவை அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு அற்புதமான மற்றும் தெய்வீகக் கதையைச் சொல்லும் இடமாக உள்ளன. இத் திருத்தலத்தின் மிகச்சிறந்த அமைதி மற்றும் புனிதம் நிறைந்த ஓர் அக புறச்சூழ்நிலையானது உங்களை ஒரு உயர்ந்த சக்தி நிலைக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவரும்.

மேலும் வாசிக்க

கைலாசநாதர் கோயில்

இக்கோயிலின் புனிதத்தின் மகத்துவம் இங்கு நீங்கள் உணரும்போது இது வெறும் கோயில் மட்டும் அல்ல. ஒரு உன்னதமான இடம் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இது ஒரு நினைவுச்சின்னத்தை விட அதிகம் புகழ் கொண்டது. கடந்த காலத்திலிருந்து பல கதைகளை நம் வருங்கால சந்ததியினருக்கு உரக்கச் சொல்லும் வரலாற்று கட்டிடக்கலையின் மகத்துவத்திற்கு இது ஒரு வாழும் சாட்சியம். கல்வெட்டுகள் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கைலாசநாதர் கோயில் நம் இதயத்தில் நிச்சயம் இடம் பிடிக்கும்.

மேலும் வாசிக்க

ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில்

அருமையான புனிதத் திருத்தலமான உலகளந்த பெருமாள் திருக்கோயிலின் கோபுர நுழைவாயில் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. மேலும் இதன் தாழ்வாரங்கள் புனிதமான பாடல்களின் சிம்பொனியுடன் வசீகரிக்கின்றன. மட்டுமன்றி இங்குள்ள கருவறையில் விவரிக்க முடியாத பிரகாசம் உள்ளது. அது உங்களை பக்தி மார்க்கத்தில் அசையாமல் நிற்க வைக்கும். ஸ்ரீ உலகளந்தப் பெருமாள் கோயில் என்பது பக்தர்கள் காணக் கிடைப்பதற்கரிய கண்கொள்ளாக் காட்சிகள் கொண்ட புனிதத்தலமாகும்.

மேலும் வாசிக்க

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில்

இக் கோயிலானது,தெய்வீகத்தின் உச்சம். இந்த திருத்தலம் அதி அற்புதமானது, நேர்த்தியானது மற்றும் புனிதமானது. அதுவும் அனைத்தும் ஒரே நேரத்தில்! இங்கே நீங்கள் உள் அமைதியையும், ஒரு உன்னதமான பேரின்பத்திற்கான மகத்துவ தொடர்பையும் உணரலாம். ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயிலில் நேரில் மட்டுமே அனுபவிக்கக்கூடிய தெய்வீகமான விஷயங்கள் நிறைய உள்ளன.

மேலும் வாசிக்க

ஆலம்பரை கோட்டை

கடந்த காலத்தின் கம்பீரமும் நிகழ்காலத்தின் சிறப்பும் இணைந்திருக்கும் ஆலம்பரை கோட்டையின் கடற்கரைக்கு வாருங்கள். வங்காள விரிகுடாவின் அலைகளுக்கு நடுவே பசுமையான வயல்களால் சூழப்பட்ட இந்த பிரமாண்டமான கட்டிடம், கடந்த காலங்களின் பெருமைக்கு சான்றாகவும், தமிழ்நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் செழுமையின் கொண்டாட்டமாகவும் உள்ளது.

மேலும் வாசிக்க

Kanchi Kudil, Kancheepuram

A quaint, elegant home that takes you back in time, showcasing the way people lived back in the day; letting you muse on the inherent cultural richness of the destination and fascinating you with its simple charm. Kanchi Kudil welcomes you.

மேலும் வாசிக்க

செய்ய வேண்டியவை

உறைவிடம்

Hotel Tamilnadu - Kancheepuram

Kamatchi Amman Sannathi Street

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...