சைலண்ட் வேலி வியூ நீலகிரியின் முடிவில்லாத மடிப்புகள் மற்றும் அவற்றுக்கிடையே பரந்த பசுமையான பள்ளத்தாக்குகளின் தனித்துவமான மயக்கும் காட்சிகளை வழங்குகிறது. பெரிஜாம் ஏரி சாலையால் நன்கு இணைக்கப்பட்டுள்ள சைலண்ட் வேலி வியூ கொடைக்கானலில் எளிதில் அணுகக்கூடிய மற்றும் பிரபலமான ஓர் இடமாகும். நீலகிரியின் நீல மலைகளின் மயக்கும் காட்சிகள் எல்லாம் மலைவாசஸ்தலங்களின் இளவரசியின் அடையாளமாகும்.
காடுகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் வழியாக படிப்படியாக வளைந்து செல்லும் காட் சாலைகள், இறுதியில் உங்களை மலையுச்சிக்கு அழைத்துச் செல்லும். இது அருகிலுள்ள நிலப்பரப்பின் மயக்கும் காட்சியை வழங்குகிறது. மலைகளில் வீசும் புத்துணர்ச்சியூட்டும் குளிர்ந்த காற்று உங்களை இப்பகுதிக்கு வரவேற்கும். எப்போதும் படர்ந்து இருக்கும் மூடுபனியானது மலை உச்சியின் குளிர்ந்த காற்றில் ஒரு மர்மமான வெள்ளை நிறத்தை வரைகிறது.
மலைவாசஸ்தலங்களின் இளவரசியான கொடைக்கானலை இங்குதான் நீங்கள் முழுமையாக பார்க்கிறீர்கள். சைலண்ட் வேலி வியூவின் அழகிய நிலப்பரப்பும் அமைதியான சூழ்நிலையும் மலைச் சரிவுகளில் உள்ள யூகலிப்டஸ் மரங்களின் வாசனையால் நிரப்பப்படுகின்றன. சூரிய உதயத்தையோ, சூரிய அஸ்தமனத்தையோ ரசிக்க கொடைக்கானலில் இதைவிட சிறந்த இடம் இல்லை. சாலையிலிருந்து குறுகிய பாதை உங்களை மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறது, இது உண்மையிலேயே கண்கவர் காட்சிக்கு வழி திறக்கிறது. கீழே உள்ள பள்ளத்தாக்கின் செழுமையான பசுமையும் மேலே வானத்தின் அழகிய நீலமும் சந்திக்காமல், தொடர்வது போல் தெரிகிறது. காலையிலோ அல்லது பிற்பகலிலோ சிறந்த முறையில் பார்வையிடப்படும் வகையிலான சைலண்ட் வேலி வியூ, சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்தின் போது வண்ணங்களின் பெருவெடிப்பைக் கண்டு மகிழும் ஒரு அழகிய இடமாகும்.
சைலண்ட் வேலி வியூவில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் எண்ணற்ற பல மணிநேரம் செலவிடலாம். அலை அலையான நிலப்பரப்பின் பிரமாண்டமான காட்சியில் நீங்கள் மெய் மறந்து, மனம் தொலைந்து போகலாம். கடந்து செல்லும் மேகங்களின் இனிமையான கிசுகிசுக்களைக் கேட்கலாம்.