இலவச எண்: 1800-425-31111

ஒரு முனையில் தெய்வீக வழிபாட்டுத் தலங்களும் மறுபுறம் உங்களை மதிமயக்கக்கூடிய மலைவாசஸ்தலங்களும் கொண்ட தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம் திண்டுக்கல்; மையத்தில் ஒரு பரபரப்பான, அழகான நகரத்துடன், அதன் உள்ளூர்வாசிகளால் அன்பாக நேசிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பலதரப்பட்ட அற்புதமான முகங்களுடன் உங்களை ஆச்சரியப்படுத்தும் ஓர் மாவட்டம்.

ஒரு காலத்தில் பல்வேறு ராஜ்ஜியங்கள் மற்றும் பேரரசுகளின் ஆட்சிகளைக் கண்ட ஒரு பண்டைய குடியேற்றம்; இப்போது வளர்ந்து வரும் தொழில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுடன் ஒரு பரபரப்பான வணிக மாவட்டமாக உள்ளது. 

திண்டுக்கல் நீங்கள் விரும்பும் எல்லா வகையான அனுபவத்தையும் ஒருங்கே பெறக்கூடிய இடமாகும். இப்பகுதி பெரும் வரலாற்று முக்கியத்துவத்தையும், ஒரு மூலோபாய இடத்தையும் கொண்டுள்ளது.

இது சேரர்கள், சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரையிலான பேரரசுகளை தங்கள் அரசிற்கு சாதகமாக பயன்படுத்த அனுமதித்தது. இன்று, திண்டுக்கல் தொழில்துறைகளின் சொர்க்கமாக உள்ளது. மாவட்டத்தின் பாரம்பரிய சிறப்பம்ச தொழில்களில் ஒன்று பூட்டு தொழில். இங்கு கூட்டுறவு உற்பத்தி நிலைய முறையில் இரும்பு பூட்டுகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்கப்படுகின்றன. 

தோல் மற்றும் கைத்தறி தொழில்களும் திண்டுக்கல்லில் உறுதியான அடித்தளத்தைக் கொண்டுள்ளன. திண்டுக்கல் பிரியாணி - உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தியான ருசி மற்றும் புகழ்பெற்ற ஒன்று. இதன் ஆரம்பப்புள்ளியாக இம்மாவட்டம் உள்ளது. ஒரு இனிமையான சுவை மற்றும் மென்மையான இறைச்சி நிறைந்த, நிச்சயமாக ருசிக்க வேண்டிய ஒரு சுவையாக இருக்கிறது.

திண்டுக்கல் ஒரு புகழ்பெற்ற ஆன்மிக சுற்றுலா தலமாகவும் உள்ளது. முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழனி கோயில் உலகப் புகழ்பெற்ற யாத்திரை மையமாகவும், பூமியில் உள்ள 6 முக்கியமான முருகன் கோயில்களான அறுபடை வீடுகளில் ஒன்றாகும். கோவில் நகரமான திண்டுக்கல்லில் மேலும் பல கோவில்கள் உள்ளன. 

மட்டுமன்றி பல்வேறு மலை வாசஸ்தலங்கள் உள்ளன - இவை முழுமையான அழகு மற்றும் மகிழ்ச்சி ததும்பும் இடங்கள். 'மலைவாசஸ்தலங்களின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானல், உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் ஒரு ஸ்தலமாகும். திண்டுக்கல் உண்மையில் பயணிகளுக்கு சிறந்த இயற்கை காட்சிகளையும் அனுபவங்களையும் வழங்கும் மாவட்டமாகும், இது அவர்களின் அடுத்த பயணத்தின் போது வரவேண்டும் என்று அவர்கள் மனதை திரும்பத் திரும்பக் கேட்கும்.

DINDIGUL
WEATHER
Dindigul Weather
29.2°C
Mist

பயண ஸ்தலங்கள்

தலையாறு அருவி

தடிமனான மினுமினுக்கும் வெள்ளிக் கதிர் பச்சை பசுமையை வெட்டும் காட்சி, ஒரு சாலைப் பயணத்தில் இந்த அழகான தரிசனத்தை விட சிறந்த காட்சி எதுவும் இருக்க முடியாது. தலையார் நீர்வீழ்ச்சி என்பது தமிழ்நாட்டின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.

மேலும் வாசிக்க

கொடைக்கானல்

இளவரசியை வணங்குங்கள்!
மூடுபனியின் புதிரான அணைப்பினால் நிரம்பிய மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள், பார்வையாளர்களுக்கு அன்பான வரவேற்பை வழங்கும். பசுமையான மலைத்தொடர்கள், வாழ்நாள் முழுவதும் அழகான நினைவுகளை வழங்கும்.குடும்ப இன்பம் மற்றும் அனுபவங்கள் முதற்கொண்டு கொடைக்கானல் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் ஒரு அதிசயம்.

மேலும் வாசிக்க

குணா குகை

2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குணா குகை, கூட்டம் கூட்டமாக பயணிகளை ஈர்க்கும் மர்மமான மற்றும் அதிசயத்தக்க பகுதியாகும். முன்னதாக 'டெவில்ஸ் கிச்சன்' என்று அழைக்கப்பட்ட இந்த இடத்திற்கு 1992 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றத் திரைப்படமான குணா, இங்கு படமாக்கப்பட்டதால் 'குணா' என்ற பெயரே பொருத்தமாகி விட்டது

மேலும் வாசிக்க

தேவதாரு வனம்

கொடைக்கானலில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றான தேவதாருகாடுகளில், நூற்றுக்கணக்கான தேவதாரு மரங்கள் நிறைந்துக்கிறது, இது பயணிகள் உலா செல்வதற்கு ஏற்ற இடமாக அமைகிறது.

மேலும் வாசிக்க

பேரிஜம் ஏரி

வனப் பாதுகாப்புப் பகுதியில் அமைந்துள்ள பேரிஜம் ஏரி, அனைத்து இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு பிரியர்களின் புகலிடமாக உள்ளது. பசுமையான காடுகளால் சூழப்பட்ட ஏரிக்கரையில் ஒரு அமைதியான காலை அல்லது மாலை வேளையில் ஓய்வெடுக்க ஒரு இடத்தை நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்களா, பேரிஜம் ஏரி உங்களுக்கு சரியான இடமாகும்.

மேலும் வாசிக்க

பூம்பாறை

கொடைக்கானலின், அழகின் ரகசியமாக அறியப்படும் பூம்பாறை, கொடை மலையிலுள்ள மற்றொரு அழகிய கிராமமாகும், இது பச்சை போர்த்தியா மலைகள் மற்றும் பசுமை பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட பிரமிப்பூட்டுகிற அடுக்கடுக்கான நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க

ஏலக்காய் மலை - கொடைக்கானல்

ஏலக்காய் மலை, பால்காடு கணவாய்க்கு தெற்கே அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களின் ஒரு அடையாளமாக இருக்கிறது. கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் அமைந்துள்ள மலைகளின் முகடு, இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லையை உருவாக்குகிறது.

மேலும் வாசிக்க

சிறுமலை

நீங்கள் அந்த ஹேர்பின் வளைவுகளை விரும்பும் ஒருவரா? சிறுமலையில் பசுமையான காடுகளின் அமைதியை ஆராய 18 ஹேர்பின் டிரைவில் செல்லுங்கள். திண்டுக்கல் மற்றும் மதுரையில் உள்ள மக்களுக்கு ஒரு வார இறுதி விடுமுறை இடமாக அடர்ந்த காடுகளுடன் அதன் புராண தொடர்பு உள்ளது.

மேலும் வாசிக்க

சௌந்தரராஜப் பெருமாள் கோவில்

திண்டுக்கல் - சேலம் நெடுஞ்சாலையில், திண்டுக்கல் - கரூர் வழித்தடத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் பிரார்த்தனை செய்யத் தவறாதீர்கள். இக்கோயில் கட்டிடக்கலை மதிப்பை அதிகம் கொண்டது மற்றும் ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கொண்டுள்ளது. மதுரை கள்ளழகருடன் வலுவான தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

மேலும் வாசிக்க

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இந்தியாவிலேயே மிகவும் செல்வச் செழிப்பு மிக்க கோவில்களில் ஒன்றாகும். கோயம்புத்தூருக்கு தென்மேற்கே 100 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரைக்கு வடமேற்கிலும் அமைந்துள்ள இக்கோயில் முருகப்பெருமானின் ஆறு சிலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கோயிலுக்குச் செல்ல மலைகளின் கீழ்நோக்கி 670 படிகள் உள்ளன. பக்தர்கள் யானைப்பாதை, வின்ச் மற்றும் ரோப்வே மூலம் இறைவனின் இருப்பிடத்தை அடையலாம்.

மேலும் வாசிக்க

கொடைக்கானல் ஏரி

கொடைக்கானல் ஏரி அல்லது கொடை ஏரியின் புகழ் மாநிலங்கள் முழுவதும் பயணித்து, பாலிவுட்டில் கூட பிடித்த புகைப்பட இடங்கள் மற்றும் திரைப்பட இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஏரியைச் சுற்றி ரிசார்ட்டுகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளன, அங்கு நீங்கள் ஏரியின் அமைதியையும் அதைச் சுற்றியுள்ள கவர்ச்சிகரமான நிலப்பரப்பையும் அனுபவிக்கலாம்.

மேலும் வாசிக்க

கோக்கரின் நடை

கொடைக்கானல் ஏரிக்கு அருகில் உள்ள கோக்கர்ஸ் வாக்கில் மேகங்களுக்கு இடையே ஒரு மர்ம நடையை அனுபவிக்கவும். இயற்கை ஆர்வலர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்கள் அது வழங்கும் காட்சி மற்றும் சுற்றுப்புறத்திற்கான இடத்தை ஒருபோதும் தவறவிடக்கூடாது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும் இந்த நடைபாதை கொடைக்கானல் ஏரிக்கு மிக அருகில் உள்ளது.

மேலும் வாசிக்க

தூண் பாறைகள்

நீங்கள் ஒரு சாகசப் பிரியர் மற்றும் மலையேற்றம், மலை ஏறுதல் மற்றும் பாறை ஏறுதல் ஆகியவற்றை முயற்சிக்க விரும்புகிறீர்களா?! தூண் பாறைகளை அடைவதற்கு முன் அடர்ந்த மூடுபனிகள் மற்றும் காடுகளின் வழியாக மூன்று முதல் நான்கு மணிநேரம் மலையேற்றம் செய்வது, ஒரு வியப்பூட்டும் சாகச அனுபவத்தைத் தவிர வேறொன்றுமில்லை!

மேலும் வாசிக்க

செம்பகனூர் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

கொடைக்கானலில் உள்ள அழிந்துபோன விலங்குகள் மற்றும் பறவை இனங்களைப் பார்க்க வேண்டுமா? 127 ஆண்டுகள் பழமையான செம்பகனூர் அருங்காட்சியகத்திற்குச் செல்லுங்கள், அங்கு கொடைக்கானலில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாக்கப்படுகின்றன. விரிவான ஆய்வகம் போன்ற அருங்காட்சியகத்தில் எண்ணிக்கையில் சிறந்த ஆர்க்கிடேரியம் ஒன்று உள்ளது வன உயிரினங்களின் புதைபடிவங்கள் உள்ளது.

மேலும் வாசிக்க

டெவில்ஸ் கிச்சன்

குணா குகைகள் என்றும் அழைக்கப்படும் இந்த அழகிய பாரம்பரிய தளம், கொடைக்கானலின் புறநகரில் அமைந்திருந்தாலும், மலை வாசஸ்தலத்திற்கே உரிய பசுமையான இயற்கை அழகைக் கொண்டுள்ளது. டெவில்ஸ் கிச்சன் மலையேறுபவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு இடம். இதுமட்டுமின்றி மோயர் பாயின்ட்டுக்கு மிக அருகிலும் இது அமைந்துள்ளது. பயமுறுத்தும் குகைகளின் இந்த குழுவானது "டெவில்ஸ் கிச்சன்" என்று பெயர் பெற்றது. ஏனெனில் இந்த கட்டமைப்புகளின் அரவணைப்பில் வசிக்கும் பல வெளவால்கள் பயணிகளை ஆனந்த மிரட்சிக்குள்ளாக்குகின்றன.

மேலும் வாசிக்க

டால்பின் மூக்கு

குன்னூரின் வளைந்து நெளிந்து செல்லும் மலைவழிச் சாலைகளின் ஊடே மேற்கொள்ளும் இயற்கை எழில் கொஞ்சும் பயணமானது, நீலகிரியின் நீல மலைகள் மற்றும் அதன் சரிவுகளில் உள்ள பசுமையான தேயிலை தோட்டங்களின் வசீகரமான காட்சியை வழங்கும் டால்பின் நோஸுக்கு உங்களை அழைத்துச் செல்லும். டால்பின் நோஸ் வழங்கும் இந்த இடத்திலிருந்து முடிவற்ற சமவெளிகள் மற்றும் பசுமையான மலைகளின் அற்புதமான உண்மைக் காட்சியில் உங்கள் கண்களும் மனமும் சுதந்திரமாக அலையட்டும்.

மேலும் வாசிக்க

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி

கொடைக்கானல் ஏரியிலிருந்து ஒரு கல் எறியும் அளவு தூரத்தில் பியர் ஷோலா நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது. இது ஓர் பருவகால நீர்வீழ்ச்சியாகும். இது பெரும்பாலும் மழைக்காலங்களில் மட்டுமே அதன் உண்மையான அழகை வெளிப்படுத்துகிறது. பசுமைக்கு மத்தியில் அமைந்துள்ள பியர் ஷோலா நீர்வீழ்ச்சியானது, காடுகளில் நீங்கள் உங்கள் மனம் தொலைந்து போகவும், அருவியின் ரம்மிய சூழலால் வழங்கப்படும் அமைதியை அனுபவிக்கவும் ஒரு பிரபலமான இடமாகும்.

மேலும் வாசிக்க

பிரையன்ட் பூங்கா

ஒவ்வொரு கோடை காலத்திலும், பிரையன்ட் பூங்காவில் வருடாந்திர மலர் கண்காட்சி தொடங்கும் போது, ​​கொடை ஏரியின் கரைகள் வண்ணம் மற்றும் நறுமணத்தின் வெடிப்பில் திளைக்கும். பிரையண்ட் பூங்கா, கொடை ஏரியின் கிழக்குக் கரையில், இந்த மலைவாசஸ்தலத்தைப் போலவே பழமையான,அரிய கவர்ச்சியான தாவரங்கள் மற்றும் மரங்களின் தொகுப்பைக் கொண்ட ஒரு அழகிய தாவரவியல் பூங்காவாக உள்ளது.

மேலும் வாசிக்க

தேவதை(ஃபேரி) நீர்வீழ்ச்சி

கொடை ஏரிக்கு அருகில், பருவமழை மாதங்களில் பாம்பார் நதியை இயற்கை ஒரு உண்மையான மாயாஜால நீர்வீழ்ச்சியாக மாற்றுகிறது. அதற்கு ஃபேரி ஃபால்ஸ் என்று பெயரிடப்பட்டது. நகரத்தின் ஆரவாரத்திலிருந்து மறைந்து, மேற்குத் தொடர்ச்சி மலையின் அருமையான பசுமைக்கு மத்தியில் அமைந்துள்ள ஃபேரி ஃபால், அழகிய கோதை ஏரியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள ஒரு அமைதியான சுற்றுலாத் தலமாகும்.

மேலும் வாசிக்க

சில்வர் கேஸ்கேட் நீர்வீழ்ச்சி

வளைந்து செல்லும் காட் சாலையில் உங்கள் நீண்ட பயணத்தில், கம்பீரமான நீர்வீழ்ச்சியைக் காட்டிலும் சிறந்த இடம் எதுவுமில்லை. கொடைக்கானலில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள நளினமான காட் சாலைகளில் பயணம் செய்தால், மலைவாசஸ்தலங்களின் இளவரசியின் மிக அழகான பொக்கிஷங்களில் ஒன்றான சில்வர் கேஸ்கேட் நீர்வீழ்ச்சியைக் காணலாம்.

மேலும் வாசிக்க

பாம்பார் அருவி

கொடைக்கானலில் உள்ள பாம்பார் நீர்வீழ்ச்சி பூமியின் சொர்க்கமாக விளங்குகிறது. கொடைக்கானலில் நேரம் மறந்து தொலைந்து போவதற்கும், இயற்கையில் இடையூறு இல்லாத, அமைதியான, அழகிய ஸ்தலத்தைத் தேடும் பெரும் ஆர்வலராக நீங்கள் இருந்தால், பாம்பார் நீர்வீழ்ச்சி உங்களுக்கு ஆகச் சிறந்த ஓர் இடமாகும்.

மேலும் வாசிக்க

மன்னவனூர் ஏரி

பூம்பாறை கிராம சாலைகளில் இயற்கை எழில் கொஞ்சும் பயணத்தின் போது, ​​நீல வானத்தின் ஒரு துண்டு நீலகிரியின் சரிவுகளில் விழுந்துவிட்டதாக நினைத்தால் நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள். மன்னவனூர் ஏரியின் அழகிய படிக நீல வண்ணத்தில் தோற்றமளிக்கும் நீர் மற்றும் அதன் அமைதியான சுற்றுப்புறங்கள் குடும்பங்களோடு மற்றும் நண்பர்களுடன் விடுமுறைக்கு வருபவர்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலா இடமாகும்.

மேலும் வாசிக்க

பசுமை பள்ளத்தாக்கு காட்சிப்புள்ளி

இங்குள்ள சிகரத்திலிருந்து 5000 அடி ஆழத்தில் உள்ள பள்ளத்தாக்கின் அற்புதமான காட்சியை வழங்குவதால் பசுமை பள்ளத்தாக்கு அதன் பெயருக்கு உண்மையான சான்றாக உள்ளது. அபாயகரமான சாய்வுப்பகுதி காரணமாக முன்பு "தற்கொலை புள்ளி" என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி, இப்போது சமவெளி மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாக பரந்து விரிந்திருக்கும் பசுமையின் அழகை மட்டுமின்றி, வைகை அணையின் அழகையும் வாரி கண்களில் ஏற்றி மூளைக்குள் எடுத்துக் கொள்ளும் பாதுகாப்பான இடமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

சைலண்ட் பள்ளத்தாக்கு காட்சி

கொடைக்கானலில் பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்கு சுத்தமாக பஞ்சமில்லை. ஆனால் பேரிஜம் ஏரி சாலையில் உள்ள சைலண்ட் பள்ளத்தாக்கு காட்சி இங்கு இருப்பதிலேயே ஆகச் சிறந்ததாக இருக்கலாம். ஆழ்ந்த பள்ளத்தாக்குகள் மற்றும் மிதக்கும் மேகங்களின் மனதைக் கவரும் பரந்து வரிந்த காட்சியுடன், சைலண்ட் வேலி வியூ, சிலிர்ப்பையும் சாகசத்தையும் விரும்பும் பயணிகளிடையே பிரபலமான இடமாகும்.

மேலும் வாசிக்க

மஞ்சளார் அணை

மஞ்சளார் அணை ஒரு உண்மையான சொர்க்கமாகும். இது ஒரு அற்புதமான காட்சியாகும். இது உங்களை கலப்படமற்ற அழகு மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும். மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான குளிர்ச்சியில் அமைந்திருக்கும் இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட தலைசிறந்த படைப்பு, புலன்களை வியக்க வைக்கும் அதிசயங்களை உருவாக்கும் மனிதகுலத்தின் ஆற்றலின் அடையாளமாகும்.

மேலும் வாசிக்க

ரோஸ் கார்டன் கொடைக்கானல்

இயற்கை, பூக்கள் மற்றும் புகைப்படம் எடுப்பவர்களுக்கு தோட்டங்கள் எப்போதும் ஒரு முக்கிய ஈர்ப்பாகும். ஓய்வெடுக்க குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிட விரும்புபவர்கள் அங்கு செல்வது வழக்கம்.

மேலும் வாசிக்க

கோல்ஃப் கிளப்

கொடைக்கானல் கோல்ஃப் கிளப் வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த ஓர் மையமாகும். ஏறக்குறைய 130 ஆண்டுகளாக இயங்கி வருகிறது இந்த கொடைக்கானல் கோல்ஃப் கிளப். சில வேடிக்கையான நிகழ்வுகள் கோல்ஃப் விளையாடும் போது நண்பர்களுடன் உங்களுக்கு நடக்கும். அதை ரசித்து சிரிக்கலாம். அது மட்டுமின்றி இங்கு ஓய்வெடுக்க விரும்பும் பார்வையாளர்களின் விருப்பமான இடமாகவும் இது உள்ளது.

மேலும் வாசிக்க

கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி & மியூசியம்

கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரியின் கதை கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பஞ்சத்தில் தொடங்குகிறது. இன்றும் செயல்படும் இந்த அப்சர்வேட்டரி பற்றி பேசும்பொழுது , கூடவே வானியல் இயற்பியலில் சில முக்கிய கண்டுபிடிப்புகளில் மூலக் கருவியாக இருந்த சூரிய ஆய்வகத்தை நிறுவுவதற்கு வழிவகுத்த நிகழ்வுகளின் திருப்பத்தைப் பற்றிய வரலாறு குறித்து அறிய அதன் வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்திற்கும் கட்டாயம் செல்லவும்.

மேலும் வாசிக்க

மோயர் பாயிண்ட்

கொடைக்கானலில் உள்ள அத்தனை பார்வையிடும் இடங்களிலேயே மோர் பாயிண்ட் அதன் எளிமைக்காகவும் சுலபமாக வந்தடையும் தன்மைக்காகவும் பெயர் பெற்றது. மற்ற சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த மோயர் பாய்ண்ட் பரிசம் ஏரிக்கு செல்லும் வழியிலும் தூண்பாறைகளுக்கு மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மேலும் வாசிக்க

கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம்

மேற்குத் தொடர்ச்சி மலையின் பழனி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம், மேற்கு தொடர்ச்சி மலையின் தனித்துவமான எண்ணற்ற வனவிலங்குகள் மற்றும் ஷோலா காடுகளின் தாயகமாகும். பல்லுயிர் பெருக்கத்தின் இந்த சொர்க்கம், இயற்கையின் தன்னிகரற்ற அழகை ஆராய்வதற்கும், வனப்பகுதியின் அதிசயங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் சிறந்த வழியாகும்.

மேலும் வாசிக்க

குக்கல் குகைகள்

குக்கல் குகைகள் தென்னிந்தியாவில் உள்ள பழமையான செதுக்கப்பட்ட குகைகளில் ஒன்றாகும். மேலும் ஒரு காலத்தில் இப்பகுதியில் குடியேறிய ஆதிப் பழங்குடியினரான பாலியன்கள் வசிக்கின்றனர். குக்கல் குகைகள், இயற்கை உலகில் பயணம் செய்யவும், மலையேற்றம் மற்றும் குகைகளை ஆராய்வதற்கான பயணத் திட்டத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

மேலும் வாசிக்க

டோல்மென் வட்டம்

கொடைக்கானலில் உள்ள டோல்மென் வட்டம், நீங்கள் ஓர் வார இறுதிப் பயணத்தில் பழங்கால வரலாற்றைப் பற்றிய விரைவான ஓர் கற்றலில் திளைக்க வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடமாகும். டோல்மென் வட்டம் இங்குள்ள நிலத்தின் வளமான வரலாற்றின் ஒரு மீள்பார்வையை வழங்குகிறது, மேலும் கிமு 5000 க்கு முந்தைய அற்புதமான தொல்பொருள் சான்றுகளை நீங்கள் இங்கு காணலாம்.

மேலும் வாசிக்க

செய்ய வேண்டியவை

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...