இலவச எண்: 1800-425-31111

கொடைக்கானலின், அழகின் ரகசியமாக அறியப்படும் பூம்பாறை, கொடை மலையிலுள்ள மற்றொரு அழகிய கிராமமாகும், இது பச்சை போர்த்தியா மலைகள் மற்றும் பசுமை பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட பிரமிப்பூட்டுகிற அடுக்கடுக்கான நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளது.

பூம்பாறை, கொடைக்கானல் ஏரியிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடம் பூண்டு உற்பத்திக்கு பெயர் பெற்ற ஒரு சிறிய குக்கிராமமாகும்.  பூம்பாறை பழனி மலையின் ஒரு பகுதி, இது 1920 மீட்டர் உயரத்தில் அடுக்கடுக்கான வயல்களுக்கும், முடிவில்லாத வளமை ததும்புகிற பசுமைக்கும் மத்தியில் அமைந்துள்ளது.  கவர்ச்சிகரமான மலைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட வண்ணமயமான வீடுகளின் மேற் கூரைகளின் காட்சியால்  பூம்பாறை இன்னும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

3000 ஆண்டுகள் பழமையான புராணக் கதைகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும் குழந்தை வேலப்பர் கோயில் அல்லது முருகன் கோயில் பூம்பாறையின் முக்கிய ஈர்ப்பாகும்.  அசல் கோயில் சேர வம்சத்தால் கட்டப்பட்டு முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.  கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது, அப்போது தெய்வம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. 

கோயிலுக்கு வெளியே உள்ள பூண்டு சந்தையை தவறாமல் பார்க்கவும், குறிப்பாக ‘மலைப்பூண்டு’ (மலைப் பூண்டு) அதன் சுவை மற்றும் மருத்துவ மதிப்புக்காக போற்றப்படுகிறது.  பூம்பாறை காட்டிலிருந்து சேகரிக்கப்படும் காட்டுத் தேனும் இங்கு பிரசித்தி பெற்றுள்ளது. 

பசுமை பள்ளத்தாக்குகள்,தொலைதூர மலைகள் மற்றும் தவழும் மேகங்களின் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளுடன் ஒரு கோப்பை தேனீர், உங்கள் மனதை புத்துணர்ச்சியடையச் செய்யும். பல தேனீர் கடைகளையும், பல காட்சிக் முனைகளையும் மற்றும் உங்கள் அலைபாயும் இதயம் விரும்புவதையும்,பூம்பாறை கிராமம் உங்களுக்கு வழங்கும்.

DINDIGUL
WEATHER
Dindigul Weather
30.7°C
Sunny

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

தமிழ்நாட்டின் சுவைகள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...