இலவச எண்: 1800-425-31111

வங்காள விரிகுடாவின் மின்னும் கரையோரத்தில் அமைந்திருக்கும் பிச்சாவரம், தூய்மையான மயக்கும் அழகு நிறைந்த உலகத்திற்கு உங்களை அழைக்கிறது. புனித கோவில் நகரமான சிதம்பரத்திலிருந்து வெறும் 30 நிமிடங்களில்‌ சென்றடையக் கூடிய கடற்கரை கிராமத்தில் உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநில காடான பிச்சாவரம் அமைந்துள்ளது. வெள்ளாறு மற்றும் கொலரூன் ஆறு இதன் எல்லைகளைத் தழுவிய நிலையில், பிச்சாவரத்தின் உப்பங்கழியானது கவர்ச்சியான பறவைகள் மற்றும் வசீகரிக்கும் வனப்பகுதிகளின் அதிசய பூமியாகும்.

கார்ப்பரேட் ரிட்ரீட், குடும்பத்திற்கு ஏற்ற சுற்றுலா மற்றும் சிலிர்ப்பூட்டும் சாகசத்தை விரும்புபவர்களுக்கும் பிச்சாவரம் ஏற்ற இடமாக இருக்கும்.  வசீகரிக்கும் உப்பங்கழிகள் மற்றும் வெள்ளி கடற்கரைகள் ஆகியவை மறக்க முடியாத உணர்வை வழங்குகின்றன.

அதன் பசுமையான  மயக்கும் அமைதியான நீர் மற்றும் பறவைகளின் கீச்சலுடன் பிச்சாவரம் சதுப்புநிலம் அமைதியின் பொக்கிஷமாக இருக்கிறது.  இது உலகின் சலசலப்புகளில் இருந்து உங்களை விடுவிக்கவல்லது . மணற்பாங்கான கடற்கரையில் வெயிலில் குளிப்பதற்கும், அமைதியான நீரில் படகில் பயணம் செய்வதற்கும் அல்லது சதுப்புநிலங்களின் நிழலில் ஓய்வெடுப்பதற்கும் நீங்கள் விரும்பினால் இதுவே ஏற்ற இடமாகும்.

இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பறவை ஆர்வலர்களுக்கு, பிச்சாவரம் வனப்பகுதி ஒரு வரமாகும். அடர்ந்த சதுப்புநிலக் காடுகளை ஆராய்ந்து, பலதரப்பட்ட பறவை இனங்களைக் கண்டறியுங்கள், அட்டகாசமான மீன்கொத்தி முதல் கம்பீரமான கூழைக்கடா (பெலிகன்) வரை உங்கள் பார்வைக்கு விருந்தாக காத்திருக்கிறது. முடிவில்லா வானத்தின் மூச்சடைக்கக்கூடிய காட்சி மற்றும் பறவைகளின் இசைக்கோர்வையுடன் பிச்சாவரம், ஒரு பறவையியல் வல்லுநர்களின் சொர்க்கமாக திகழ்கிறது.

பிச்சாவரம் சதுப்புநிலம், சாகச விரும்பிகளுக்கு சிலிர்பூட்டக் கூடிய பயணத்தைத் தொடங்குவதற்கு சரியான இடமாகவும் .  படகு மூலம் உப்பங்கழியை ஆராய்ந்து, அடர்ந்த காட்டுக்குள் சறுக்கிச் செல்லும் சுகத்தை அனுபவிக்கவும், சுற்றிலும் சதுப்புநிலங்கள் நிறைந்த பசுமை உங்களை இளைப்பாறச் செய்யும். நீங்கள் மோட்டார் படகு அல்லது படகுகளை விரும்பினாலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படகு சவாரி வசதிகளை வழங்குகிறது, இது உங்கள் சாகசத்தை மறக்கமுடியாத உற்சாக அனுபவமாக உங்கள் நினைவில் என்றும் நிலை நிறுத்தும்.

உப்பங்கழியின் அமைதியான நீரும்  இயற்கையின் ஓசைகள் மட்டுமே உங்களுக்கு ஒரே துணையாக இருப்பதால், பிச்சாவரம் ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் சரியான இடமாகும்.  நீங்கள் தனிமையில் ஓய்வெடுக்க விரும்பினாலும் அல்லது ஜோடியாக விடுமுறையை கழிக்க விரும்பினாலும், பிச்சாவரம் நிகரற்ற அமைதியான இடத்தை வழங்கும்.

பிச்சாவரம் உண்மையில் ஒப்பிட முடியாத ஒரு அழகு.  அதன் வசீகரிக்கும் உப்பங்கழிகள் மற்றும் பலதரப்பட்ட  இயற்கை அதிசயங்களும் உங்கள் இதயத்தைக் கவர்ந்து வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை தரவல்லது.  எனவே இங்கு வருகைதந்து  பிச்சாவரத்தின் மாயாஜாலத்தை ஆராய்ந்து பாருங்கள், இந்த கடற்கரை குக்கிராமத்தின் அழகு உங்கள் இதயத்தை ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் நிரப்பட்டும்.

CUDDALORE
WEATHER
Cuddalore Weather
25.2°C
Clear

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...