இலவச எண்: 1800-425-31111

கொடைக்கானலில் உள்ள பாம்பார் நீர்வீழ்ச்சி பூமியின் சொர்க்கமாக விளங்குகிறது. கொடைக்கானலில் நேரம் மறந்து தொலைந்து போவதற்கும், இயற்கையில் இடையூறு இல்லாத, அமைதியான, அழகிய ஸ்தலத்தைத் தேடும் பெரும் ஆர்வலராக நீங்கள் இருந்தால், பாம்பார் நீர்வீழ்ச்சி உங்களுக்கு ஆகச் சிறந்த ஓர் இடமாகும்.

கொடைக்கானலில் உள்ள பாம்பார் நீர்வீழ்ச்சி தழைத்தோங்கிய பசுமைக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு அழகிய நீர்வீழ்ச்சியாகும். நகரங்களின் இரைச்சல் மற்றும் கூக்குரலில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள பாம்பார் நீர்வீழ்ச்சியானது, இயற்கையின் அமைதியான திளைப்பில் உங்கள் புலன்களை அலைய வைப்பதற்கும், மிகவும் தேவையான மீட்டமைப்பைப் பெறுவதற்கும் ஒரு சரியான இடத்தை வழங்குகிறது. இது இங்குள்ள நீர்த்தேக்கம் அதன் போக்கில் வைகை ஆற்றில் சேர தெற்கு நோக்கி நிரம்பி வழிந்ததன் விளைவாக உருவானது.

நெளிவு சுழிவான இந்த நீரோடை தொடர்ச்சியான பாறை அமைப்புகளின் மீது நடனமாடுகிறது. இது முற்றிலும் அழகான, நெடிய ஓர் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. இது கிராண்ட் கேஸ்கேட் என்று ஓர் பெயர் பெற்றும் வழங்கப் பெறுகிறது. லிரில் அல்லது வட்டக்கானல் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படும் இது கொடைக்கானலின் மையத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

கொடைக்கானல் நகர மையத்திலிருந்து பாம்பர் ஹவுஸுக்குச் சிறிது தூரம் நடந்தால், அருகிலுள்ள காடுகளுக்குள் வளைந்து செல்லும் பாதை இங்கு உங்களை அழைத்துச் செல்லலாம். கம்பீரமான நீர்வீழ்ச்சிகளைப் போலவே பாம்பார் நீர்வீழ்ச்சிக்கான மலையேற்றம் மிக அழகாக இருக்கிறது. வழுக்கும் பாறைகள் மற்றும் காடுகளின் அடர்ந்த அடிமரங்களைக் கடந்து செல்வது, கரடுமுரடான நிலப்பரப்புக்குள் உங்களை மேலும் அழைத்துச் செல்லும். இந்த நீர்வீழ்ச்சியானது முட்புதர்கள் வழியாக பாயும் அமைதியான நீரோடையாக காட்சியளிக்கிறது. 

தொடர்ந்து மேல்நோக்கிச் செல்லுங்கள், அங்கு உங்கள் விடாமுயற்சிக்கு ஒரு கம்பீரமான நீர்வீழ்ச்சியின் அற்புதமான காட்சி வெகுமதியாக அளிக்கப்படும். காடுகளில் உள்ள எண்ணற்ற பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் பாடல்கள் மட்டுமன்றி அவற்றின் காண்பதற்கரிய  நடனங்கள் மூலம் கரடுமுரடான நிலப்பரப்பின் மீது ஏறும் பயணம் எளிதாக்கப்படும். இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டு, அழகிய நிலப்பரப்பு வழியாக பயணம் செய்வது, பயணிகளுக்கு ஐம்புலன்களையும் புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக இருக்கும்.

காடுகளின் அடர்ந்த விதானம், கல் பாறைகளின் தொடர்களில் நடனமாடும் நீர் குமிழியினை நமது பார்வைக்காக திறக்கிறது. இப்பகுதியின் பாறை நிலப்பரப்பு, தொடர்ச்சியான பாறை படிகளில் தண்ணீர் கீழே விழுந்து, ஒரு அழகான அருவியை உருவாக்குகிறது. பாறைகள் ஏற முடியாத அளவுக்கு வழுக்கும் தன்மை கொண்டதாக இருந்தாலும், பாம்பர் நீர்வீழ்ச்சியானது கீழே ஒரு தொட்டி போன்ற அழகான குளத்தை உருவாக்குகிறது. மழைக்காலத்தின் போதும் அதற்குப் பின்னரும் நீர்வீழ்ச்சியின் உண்மையான அழகு வெளிப்படுவதால், செப்டம்பர் முதல் மே மாதங்கள் வரை பாம்பார் நீர்வீழ்ச்சியைப் பார்வையிட சிறந்த நேரம் ஆகும்.

DINDIGUL
WEATHER
Dindigul Weather
30.7°C
Sunny

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

தமிழ்நாட்டின் சுவைகள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...