தொலைதூர மலைகளின் களிப்பூட்டும் காட்சியில் திளைத்து, அங்கிருந்து மூடுபனி மலைகளுக்கு செல்ல உங்கள் ஆன்மா விரும்பினால்,கொளுக்குமலை, வார இறுதி விடுமுறை நாட்களுக்கு மிகச்சரியான இடமாகும் . இது கடல் மட்டத்திலிருந்து 7130 அடி உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் இயற்கையின் மிக அழகிய காட்சிகளுடன் உங்கள் இதயத்தில் சிரமமின்றி இடம் பிடிக்கிறது.
1900 களின் முற்பகுதியில் தொடங்கப்பட்ட கொளுக்குமலை தேயிலை தோட்டம், மூணாறிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள தேயிலை தொழிற்சாலை பாரம்பரிய முறைபடியே செல்படுவதால் அதன் புத்துணர்ச்சியூட்டும் விரும்பத்தக்க சுவை,இந்த இடத்தை இன்னும் சிறப்புடையதாக மாற்றியுள்ளது.
கொளுக்குமலையின் அழகான காட்சியை, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது கட்டாயமாக பார்க்க வேண்டும். சாகச விரும்பிகள் கொளுக்குமலையில் நடைபயணம் மற்றும் முகாமிடவும் முயற்சி செய்யலாம்.
தேனி பேருந்து நிலையம், சுமார் 60 கி.மீ. பிரதான நகரத்திலிருந்து ஜீப்பில் மட்டுமே கொழுக்குமலைக்கு செல்ல முடியும்.
மதுரை சர்வதேச விமான நிலையம், சுமார் 151 கி.மீ.
மதுரை ரயில் நிலையம், சுமார் 144 கி.மீ.
கொழுக்குமலைக்கு செல்ல சிறந்த நேரம் செப்டம்பர் - மார்ச் ஆகும்