இலவச எண்: 1800-425-31111

இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி தேனி. இயற்கை உங்களுக்காக விரிக்கும் பச்சைக் கம்பளத்தால் வரவேற்கப்படத் தயாராகுங்கள்; குளிர்ந்த மூடுபனியால் தழுவி, மகிழ்ச்சியின் புதிய உச்சத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. தேனி ஒரு ஸ்தலத்தை விட ஒருப்படி மேலே, அது ஒரு அனுபவம்.

உங்கள் மனம் திரும்பி திரும்பிச் செல்ல விழையும் இடங்களைப் பற்றி பேசுங்கள், தேனி நிச்சயமாக அதன் பட்டியலில் இருக்கும். 

தமிழ்நாட்டின் மிக அழகிய இடங்களில் ஒன்றான தேனி, பயணிகளுக்கு இயற்கை அழகு மற்றும் பேரின்பத்தின் புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது. 

வசீகரிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நிழல்களில் அமைந்துள்ள தேனி, எந்தவொரு பயணியையும் அதன் உள்ளார்ந்த நற்பண்புகளால் கவர்ந்திழுக்கும். 

நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து நீங்கள் ஒரு சரியான இடைவெளியைத் தேடுகிறீர்களானால், தேனி உண்மையில் தேர்ந்தெடுக்க வேண்டிய இடமாகும். 

மலைகளின் கம்பீரத்தைப் பார்ப்பது மற்றும் இயற்கையின் மந்தமான தாளங்களைக் கேட்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இது இருக்கும். 

காபி மற்றும் தேயிலை தோட்டங்களுடன் ஏலக்காய் தோட்டங்களும் இவ்விடத்தின் செழுமையை சேர்க்கிறது. 

கரும்பு, பருத்தி, தினை, நிலக்கடலை, திராட்சை, மாம்பழம் போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிடப்படும் பொருளாதாரம் முக்கியமாக இங்கு விவசாயமாகும். மற்ற திராட்சை வளரும் நாடுகளைப் போலல்லாமல் ஆண்டு முழுவதும் இங்கு திராட்சை அறுவடை செய்யப்படுகிறது. 

அவை கோடையில் தங்கள் வளர்பருவத்தை முடிக்கின்றன. பருத்தி நூற்பு ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகளும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக உள்ளன. 

தேனி மாவட்டத்தில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்த ஏராளமான வன நிலங்கள் உள்ளன. மாவட்டத்தின் நிலப்பரப்பில் சுமார் 33.70% காடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள காற்றின் தரமும் இயற்கையின் வசீகரமும் இணையற்றது என்பதில் ஆச்சரியமில்லை. 

காடுகளின் ஆன்மா இந்த இடம் முழுவதும் பரவியிருக்கும் ஒவ்வொரு இயற்கையான இடங்களிலும் பிரதிபலிக்கிறது - ஆற்றங்கரைகளில் இருந்து நீர்வீழ்ச்சிகள் மற்றும் அணைகள் முதல் மலைகள் வரை. 

தேனி நிச்சயம் உங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அனுபவமாக இருக்கும்.

பயண ஸ்தலங்கள்

சுருளி அருவி, தேனி

சுருளி அருவியின் அழகு பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு களிப்பூட்டும் அனுபவத்தை வழங்கும் இந்த இடம் பெயரிடப்படாத நிறைய கவர்ச்சிகரமானதை தன்னகத்தே கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க

கும்பக்கரை நீர்வீழ்ச்சி , தேனி

மதுரையிலிருந்து இருப்புறமும் மரங்கள் நிறைந்த அழகான சாலை வழியாகவும் மறக்கமுடியாத பயணத்தை மேற்கொள்ளுங்கள். வாகனம் ஓட்டுவது சிறு மகிழ்ச்சியாக இருக்கலாம் ஆனால் கும்பக்கரை நீர்வீழ்ச்சியில் உங்களுக்காக காத்திருப்பதோ பெரும் மகிழ்ச்சி. மலையடிவாரத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் மிகவவும் பிரபலமான ஒன்றாகவும் உள்ளது கொடைக்கானல்.

மேலும் வாசிக்க

கொளுக்குமலை

மூணாறு அருகேயிருக்கும் கொளுக்குமலை குக்கிராமம்,தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிக உயரமான தேயிலை தோட்டமாக போற்றப்படுகிறது.

மேலும் வாசிக்க

மேகமலை

மேகங்களால் மூடப்பட்டு மேகமலையில், தேயிலைத் தோட்டங்களால் விரிக்கப்பட்ட, வானத்தைத் துளைக்கும் மலைகளால் உங்கள் ஆன்மாவை ஆச்சரியப்படுத்துங்கள். அமைதியான மலைப்பாங்கான கிராமத்தில், விசித்திரமான இயற்கை மற்றும் எளிய கிராம வாழ்க்கையை அனுபவியுங்கள். குக்கிராமத்தை சுற்றிப்பார்த்து, புதிய நண்பர்களை பெற்றுக் கொள்ளுங்கள், உள்ளூர் உணவு வகைகளை சுவைத்து, மேகமலையின் தனித்துவமான நிலப்பரப்புகளை ஆனந்தமாக ரசியுங்கள்.

மேலும் வாசிக்க

செய்ய வேண்டியவை

வலைப்பூக்கள்

மலைகள் அழைக்கின்றன...

தமிழ்நாட்டின் இந்த ஐந்து அதிகம் அறியப்படாத ஆனால் அழகிய மலைவாசஸ்தலங்களைப் பாருங்கள், அவை நிச்சயமாக உங்களை மயக்கும். ஆராயப்படாதவற்றை ஆராயுங்கள்.

2 years ago

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...