இலவச எண்: 1800-425-31111

மேற்குத் தொடர்ச்சி மலையின் பழனி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம், மேற்கு தொடர்ச்சி மலையின் தனித்துவமான எண்ணற்ற வனவிலங்குகள் மற்றும் ஷோலா காடுகளின் தாயகமாகும். பல்லுயிர் பெருக்கத்தின் இந்த சொர்க்கம், இயற்கையின் தன்னிகரற்ற அழகை ஆராய்வதற்கும், வனப்பகுதியின் அதிசயங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் சிறந்த வழியாகும்.

வனவிலங்குகள் பெரும்பாலும் பிரமிப்பு, ஆச்சரியம் மற்றும் எப்போதாவது சில சமயங்களில் பயத்தைத் தூண்டுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மனிதர்கள் இயற்கையை தொடர்ந்து சுரண்டுவதால், இயற்கையின் இந்த அதிசயங்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வனவிலங்கு சரணாலயங்கள் நம் நம்பிக்கையின் கடைசி தீவுகளாகும். அங்கு நீங்கள் வனவிலங்குகளை அதன் இயற்கை வாழ்விடத்தில் காணலாம். கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம் பல்வேறு வனப்பகுதிகளின் புகலிடமாகவும், வாய் அடைக்கும் அழகு மற்றும் செழிப்பான வனவிலங்குகளின் கனிசமான எண்ணிக்கை கொண்டதாகவும் உள்ளது. 

 

இந்த சுற்றுப்புறத்திலுள்ள பல்லுயிர் பெருக்கத்தின் மையப்பகுதியாகவும் இது அமைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில், கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம் ஏராளமான வனவிலங்குகளின் தாயகமாகும், அவற்றில் பெரும்பாலானவை இந்த அழகிய நிலப்பரப்புக்கு தனித்துவமானவை. இங்கு மட்டுமே காணக் கிடைப்பவை. கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம் சுமார் 700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது. கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம் அதன் செழிப்பான பசுமை, டஜன் கணக்கான நீர்வீழ்ச்சிகள், பரந்து விரிந்த பள்ளத்தாக்குகள், உருளும் குன்றுகள் மற்றும் அடர்ந்த ஷோலா காடுகளின் பரந்த புல்வெளிகள் ஆகியவற்றால் அறியப்படுகிறது. 

 

பறக்கும் அணில்கள் மற்றும் வலிமைமிக்க யானைகள் போன்ற விலங்குகளின் வளமான பன்முகத்தன்மை கொண்ட கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம் பல்லுயிர் வளம் கொண்ட செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பாகும்.

வனவிலங்கு ஆர்வலர்கள் வனவிலங்குகளின் செழுமையை ஆராய்வதற்கும் வியப்பதற்கும் கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயத்தை விட சிறந்த இடம் தமிழ்நாட்டில் இல்லை. சரணாலயத்தின் வழியாக வனவிலங்கு சுற்றுப்பயணத்தில் சேர்ந்து, சரணாலயத்தில் வசிக்கும் பிராணிகளின் விருப்பமான நீர்நிலையான பெரிஜாம் ஏரிக்குச் சென்று, அதன் குடியிருப்பாளர்களில் மிகவும் தேர்ந்த உயிர்களைக் கண்டறியவும். 

 

வனவிலங்குகளின் குரல்களைக் கேட்டு வனப் பாதைகளில் பயணம் செய்யுங்கள். தெளிவான நிழலில் புல்வெளிகளை வண்ணமயமாக்கும் தாவரங்கள் மற்றும் பூக்களைப் பாராட்டுவதற்கு வாகனங்களை நிறுத்துங்கள். பட்டாம்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகள் இதழ்களின் கீழ் தங்கள் குட்டித்தூக்கத்தை அனுபவிக்கும் நிகழ்வை தொந்தரவு செய்யாமல் கவனமாக ரசியுங்கள். மேற்கு தொடர்ச்சி மலைகளின் பன்முகத்தன்மையின் செழுமையை வெளிப்படுத்தும் சிறந்த வழி இதைவிட வேறு எதுவுமில்லை. கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயத்திற்குச் சென்று, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பேரெழிலான அழகை ஆராய்வதற்கும், அதில் குடியிருக்கும் பல்வேறு ஜீவராசிகள் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கும் வனவிலங்குச் சுற்றுலாவை மேற்கொள்ளுங்கள். ஆய்வாளர்களில் சில அதிர்ஷ்டசாலிகள், இந்த  சரணாலயத்தின் உச்ச நட்சத்திரங்களைக் கண்டுபிடிக்க முடியும் - அவை வலிமைமிக்க யானைகள் மற்றும் இந்திய கவுர் ஆகும். இதை பதிவிடுவதற்கு நீங்கள் உங்கள் கேமராக்களை மறப்பதை நாங்கள் நிச்சயமாக விரும்பவில்லை.

DINDIGUL
WEATHER
Dindigul Weather
29.2°C
Mist

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

தமிழ்நாட்டின் சுவைகள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...