இலவச எண்: 1800-425-31111

கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரியின் கதை கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பஞ்சத்தில் தொடங்குகிறது. இன்றும் செயல்படும் இந்த அப்சர்வேட்டரி பற்றி பேசும்பொழுது , கூடவே வானியல் இயற்பியலில் சில முக்கிய கண்டுபிடிப்புகளில் மூலக் கருவியாக இருந்த சூரிய ஆய்வகத்தை நிறுவுவதற்கு வழிவகுத்த நிகழ்வுகளின் திருப்பத்தைப் பற்றிய வரலாறு குறித்து அறிய அதன் வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்திற்கும் கட்டாயம் செல்லவும்.

கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரியின் கதை 1890 களின் முற்பகுதியில் அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சியை பாதித்த கடுமையான பஞ்சத்தில் தொடங்குகிறது. பூமியின் வளிமண்டலத்தை சூரியன் எவ்வாறு வெப்பமாக்குகிறது என்பது பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறவும், பருவமழை முறைகளைப் புரிந்து கொள்ளவும் ஒரு சூரிய ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கொடைக்கானல் பூமத்திய ரேகைக்கு அருகாமையில் உள்ள இடமாகவும், தூசி இல்லாத, உயரமான இடமாகவும் இருந்ததால் இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்படித்தான் கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரியின் வரலாறு தொடங்கியது. தற்போது இந்திய வானியற்பியல் கழகத்திற்குச் சொந்தமான மற்றும் இயக்கப்படும், இந்த ஆய்வகம் சூரியனையும் பூமியின் மேற்பரப்பில் அதன் விளைவுகளையும் புரிந்து கொள்வதில் கருவியான சில முக்கிய கண்டுபிடிப்புகளை செய்துள்ளது. 

 

எவர்ஷெட் விளைவு முதன்முதலில் இந்த ஆய்வகத்தில் தான் 1909 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் சேகரிக்கப்பட்ட சூரிய தரவுகளின் பழமையான தொடர்களை இந்த ஆய்வகம் கொண்டுள்ளது.

இந்திய வானியற்பியல் வரலாற்றில் இந்த மைல்கல் நிறுவனம் பழனி மலையின் தெற்கு முனையில் உயர்ந்து நிற்கிறது. பிராட்பேண்ட் சீஸ்மோகிராஃப், வாட்சன் மேக்னடோமீட்டர், சோலார் டன்னல் டெலஸ்கோப் மட்டுமன்றி மேலும் பல சாதனங்கள் கொண்ட இரண்டு விஞ்ஞானிகள் குழு மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவுடன் இது இன்னும் செயல்படுகிறது. 

 

இது அயனோஸ்பியர், செங்குத்து வரைவுகள் மற்றும் மேற்பரப்பு அவதானிப்புகள் தொடர்பான தரவுகளை இந்திய வானிலை ஆய்வுத் துறை மற்றும் உலக வானிலை அமைப்புக்கு வழங்குகிறது.

அறிவியலின் இந்த ஓய்வறியா உறைவிடம் பொதுமக்களின் வருகைக்காக தற்காலங்களில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு செய்யப்பட்ட எண்ணற்ற கண்டுபிடிப்புகளின் விவரங்களை விவரிக்கும் ஒரு விரிவான அருங்காட்சியகம் இங்குள்ள வளாகத்தில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் நேரடி சூரியப் படம் மற்றும் ஃபிரான்ஹோஃபர் ஸ்பெக்ட்ரம் உள்ளது. 

 

இந்த ஆய்வகத்தில் 20 செ.மீ. அளவு ரீஃப்ரேக்டர் என்னும் கருவி இரவு நேர வானத்தைப் பார்ப்பதற்கும் இங்கு பார்வையாளர்களுக்காக அனுமதித்து திறக்கப்பட்டுள்ளது. வானியல் அருங்காட்சியகம் அரசு விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து ஏழு நாட்களும் திறந்திருக்கும், மேலும் இரவு வானத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு மாலை 6:30 முதல் 7:30 மணி வரை திறந்திருக்கும். இது முக்கியமாக சில பார்வை நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இந்திய வானியல் இயற்பியலின் வரலாறு மற்றும் சாதனைகளை வியக்க, கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி அருங்காட்சியகத்திற்குச் செல்லுங்கள். முக்கியமாக இரவு வானில் உள்ள அண்ட சராசர வெற்றிடத்தின் பிரம்மிப்பூட்டும் காட்சிகளைப் பார்க்க இந்த காட்சியாகம் உங்களுக்கு உதவும்.

DINDIGUL
WEATHER
Dindigul Weather
27.1°C
Mist

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

தமிழ்நாட்டின் சுவைகள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...