இலவச எண்: 1800-425-31111

மிகப்பெரிய பாரம்பரியங்களின் நகரம், அதன் வசீகரமான பழமையின் அழகை வெளிப்படுத்துகிறது; அதே நேரத்தில் பார்வையாளர்கள் தங்கள் விடுமுறையைக் கழிக்க சுவாரஸ்யமான இடங்களுடன் நிறைந்திருக்கிறது. காஞ்சிபுரம் அதன் புகழ்பெற்ற கடந்த காலத்தை ஒரு உயிர்ப்பான தன்மையுடன் ஒருங்கிணைத்து வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத அனுபவங்களை உங்களுக்கு வழங்குகிறது.

பல தசாப்தங்களாக தென்னிந்திய மணப்பெண்களை அலங்கரித்து வரும் உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இருப்பினும் இந்த அற்புதமான புடவைகளை விட இங்கு அனுபவிக்க தருணங்கள் அதிகம். 

காஞ்சிபுரம் ஒரு சிறப்பு வாய்ந்த நகரமாகும். இது நம்மை காலப்போக்கில் அழைத்துச் சென்று அதன் பழைய உலக பிரசித்தி பெற்ற வசீகரம் மற்றும் கலாச்சார செழுமையால் உங்களை நனைக்கிறது. இந்தியாவிலேயே அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம், வரலாற்றை அதன் அனைத்து தன்மைகளிலும் உயிர்ப்பிக்கும் இடமாகும். 

இப்பகுதியை அலங்கரிக்கும் பல்வேறு கட்டமைப்புகளின் கட்டிடக்கலை சிறப்பே இந்த நகரத்தை உண்மையில் தனித்துவமாக்குகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக நம்பப்படும் இந்நகரம் சோழர்கள், பல்லவர்கள், விஜயநகரம் மற்றும் அதன்பின் ஆங்கிலேயர்கள் உட்பட பல்வேறு வம்சங்களால் ஆளப்பட்டது. 

திராவிட கட்டிடக்கலையின் புத்திசாலித்தனம் மற்றும் அதனை பெருமைப்படுத்தும் நுட்பமான படைப்புகள் நகரம் முழுவதும் காணப்படுகின்றன. 

காஞ்சிபுரத்தின் சிரசை அழகுபடுத்தும் மற்றொரு மகுடம், 'ஆயிரம் கோயில்களின் பொன் நகரம்' என்ற அடைமொழியாகும். காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல அற்புதமான கோயில்கள் உள்ளன. 

அவை தொலைதூர நாடுகளிலிருந்தும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இந்த தெய்வீக வழிபாட்டுத் தலங்கள் கட்டிடக்கலை அதிசயங்கள், சிற்பங்கள் ஆகியவை அளவிற்கரிய கலை நேர்த்தியுடன் நிறைந்துள்ளன. 

காஞ்சியின் புறநகரில் அமைந்துள்ள அழகிய சரணாலயங்களில் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. பாலாறு நதி நகரின் மேற்குப் பகுதியில் அமைதியாகப் பாய்கிறது. 

வரலாற்று ஆர்வலர்கள், கட்டிடக்கலை ஆர்வலர்கள், யாத்ரீகர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் ஆகியோருக்கு ஒரு சிறந்த விடுமுறை ஸ்தலமாக- ஒன்று சேர சொல்வதென்றால் அது காஞ்சிபுரம்.

KANCHEEPURAM
WEATHER
Kancheepuram Weather
29.8°C
Cloudy

சிறந்த ஈர்ப்புகள்

ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில்

தென்னாடுடைய சிவபெருமானின் பிரம்மாண்ட உறைவிடம். இங்கு அமைந்துள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள், தாழ்வாரங்கள், தூண்கள் - இவை அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு அற்புதமான மற்றும் தெய்வீகக் கதையைச் சொல்லும் இடமாக உள்ளன. இத் திருத்தலத்தின் மிகச்சிறந்த அமைதி மற்றும் புனிதம் நிறைந்த ஓர் அக புறச்சூழ்நிலையானது உங்களை ஒரு உயர்ந்த சக்தி நிலைக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவரும்.

மேலும் வாசிக்க

கைலாசநாதர் கோயில்

இக்கோயிலின் புனிதத்தின் மகத்துவம் இங்கு நீங்கள் உணரும்போது இது வெறும் கோயில் மட்டும் அல்ல. ஒரு உன்னதமான இடம் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இது ஒரு நினைவுச்சின்னத்தை விட அதிகம் புகழ் கொண்டது. கடந்த காலத்திலிருந்து பல கதைகளை நம் வருங்கால சந்ததியினருக்கு உரக்கச் சொல்லும் வரலாற்று கட்டிடக்கலையின் மகத்துவத்திற்கு இது ஒரு வாழும் சாட்சியம். கல்வெட்டுகள் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கைலாசநாதர் கோயில் நம் இதயத்தில் நிச்சயம் இடம் பிடிக்கும்.

மேலும் வாசிக்க

ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில்

அருமையான புனிதத் திருத்தலமான உலகளந்த பெருமாள் திருக்கோயிலின் கோபுர நுழைவாயில் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. மேலும் இதன் தாழ்வாரங்கள் புனிதமான பாடல்களின் சிம்பொனியுடன் வசீகரிக்கின்றன. மட்டுமன்றி இங்குள்ள கருவறையில் விவரிக்க முடியாத பிரகாசம் உள்ளது. அது உங்களை பக்தி மார்க்கத்தில் அசையாமல் நிற்க வைக்கும். ஸ்ரீ உலகளந்தப் பெருமாள் கோயில் என்பது பக்தர்கள் காணக் கிடைப்பதற்கரிய கண்கொள்ளாக் காட்சிகள் கொண்ட புனிதத்தலமாகும்.

மேலும் வாசிக்க

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில்

இக் கோயிலானது,தெய்வீகத்தின் உச்சம். இந்த திருத்தலம் அதி அற்புதமானது, நேர்த்தியானது மற்றும் புனிதமானது. அதுவும் அனைத்தும் ஒரே நேரத்தில்! இங்கே நீங்கள் உள் அமைதியையும், ஒரு உன்னதமான பேரின்பத்திற்கான மகத்துவ தொடர்பையும் உணரலாம். ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயிலில் நேரில் மட்டுமே அனுபவிக்கக்கூடிய தெய்வீகமான விஷயங்கள் நிறைய உள்ளன.

மேலும் வாசிக்க

செய்ய வேண்டியவை

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

Hotel Tamilnadu - Kancheepuram

Kamatchi Amman Sannathi Street

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...