மோயர் பாயிண்ட் சாலையில் அமைந்துள்ள இந்த குகை, கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தேவதாரு காடுகளின் வழியாக நடந்து சென்ற பிறகு ஒருவர் குகையை அடைகிறார். ஒருவர் குகைக்குள் நுழைய முடியாத நிலையில், பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, எப்போதும் பாதுகாப்பான தூரத்தில் இருந்து குகைகளைப் பார்க்கலாம். இது அவரவர் விருப்பம் சார்ந்தது. இந்த குகைகள் சோலா மரங்கள் மற்றும் புற்களால் சூழப்பட்ட பகுதியில் நிலைக்கொண்டுள்ளது. இந்த மரங்களின் முதிர்ச்சியான தோற்றம் மற்றும் முறுக்கிக்கிடக்கும் வேர்கள் அப்பகுதி முழுவதும் பரவி, பயணிகளுக்கு ஒரு புதிர் உணர்வை ஏற்படுத்துகின்றன. நிழற்படங்களைப் பிடிக்க நல்ல பின்னணியையும் அவை உருவாக்குகின்றன.
1821 ஆம் ஆண்டு அமெரிக்கரான திரு.பி.எஸ்.வார்டு என்பவர் இந்த இடத்தைக் கண்டுபிடித்ததாக வரலாறு கூறுகிறது.இந்து புராணங்களின்படி, பாண்டவர்கள் குகைகளில் தங்கி உணவு சமைத்துள்ளனர் என்ற குறிப்பும் இந்திய இதிகாசத்தில் உள்ளது. இந்த குகைகளில் படமாக்கப்பட்ட குணா திரைப்படத்திற்குப் பிறகு குகைகள் இன்னும் புகழ் பெற்றன. படத்தில் அனைவரின் மனதை கவர்ந்த ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல், குகையில் படமாக்கப்பட்டதில்லிருந்து இந்த இடம் திரையுலக பிரியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்போது தடுப்பு மற்றும் இரும்பு கம்பிகளால் சுழப்பட்ட ஆழமான இந்த குறுகிய குகைகயை ஒருவர் எப்போதும் பார்க்கலாம். நீங்கள்,மர்மம் மற்றும் வரலாறை விரும்புகிறவர்களாக இருந்தால், குணா குகைகள் உங்கள் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாகும்.
கொடைக்கானல், சுமார் 8.5 கி.மீ. தொலைவில் உள்ளது
மதுரை சர்வதேச விமான நிலையம், சுமார் 141 கி.மீ.
பழனி நிலையம், சுமார் 74 கி.மீ. தொலைவில் உள்ளது
ஏப்ரல் முதல் ஜூன் வரை