இலவச எண்: 1800-425-31111

இங்குள்ள சிகரத்திலிருந்து 5000 அடி ஆழத்தில் உள்ள பள்ளத்தாக்கின் அற்புதமான காட்சியை வழங்குவதால் பசுமை பள்ளத்தாக்கு அதன் பெயருக்கு உண்மையான சான்றாக உள்ளது. அபாயகரமான சாய்வுப்பகுதி காரணமாக முன்பு "தற்கொலை புள்ளி" என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி, இப்போது சமவெளி மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாக பரந்து விரிந்திருக்கும் பசுமையின் அழகை மட்டுமின்றி, வைகை அணையின் அழகையும் வாரி கண்களில் ஏற்றி மூளைக்குள் எடுத்துக் கொள்ளும் பாதுகாப்பான இடமாக மாற்றப்பட்டுள்ளது.

பசுமை பள்ளத்தாக்கு காட்சிப்புள்ளியானது  கொடைக்கானலில் அதன் இயற்கையின் அருளையும், குளிர்ந்த மற்றும் இதமான காலநிலையை அனுபவிக்க வரும் பல பார்வையாளர்களுக்காகவும் பராமரிக்கப்படும் போற்றி வளர்க்கப்பட்ட ஓர் ஊரறியா ரத்தினமாகும். இங்கிருந்து கீழே பார்த்தால், பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் சமவெளிகளின் ஆடம்பரமான விரிவைக் காட்டும் மலைவாசஸ்தலத்தை நீங்கள் ஒருமித்ததாகக் காணலாம். இங்குள்ள இயற்கைக்காட்சிகள் குறிப்பாக மிகவும் வசீகரமானது. ஏனெனில் இது நேர்த்தியான வைகை அணையின் வரவால் மெருகேறி அலங்கரிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலின் பசுமையான விரிப்புகளுக்கு மத்தியில் நடக்கும் இந்த புள்ளி ஒன்றுதான் அதன் மகத்துவத்தைப் பற்றி பாடும் சிலிர்ப்பூட்டும் பறவைகளின் பார்வையை நீங்கள் காண அனுமதிக்கிறது. 

இந்த புள்ளியில் நீங்கள் தரிசிக்கும் காட்சியில் பதிந்திருக்கும் அழகு மற்றும் ஆபத்தின் கலவையானது உங்களை ஒரேயடியாக திகைக்க வைத்து, அதிர்ச்சியடையச் செய்து, அதே வேளையில் மெய்சிலிர்க்க வைக்கும். பள்ளத்தாக்கின் கடக்க முடியாத ஆழத்தை ஒருவர் பார்க்கும்போது அந்த அற்புதக் காட்சியை சக்தி வாய்ந்ததாக உணரலாம். அதே சமயம், அந்த கம்பீரமான காட்சியின் முன்பு நீங்கள் இயற்கையிடம் மனிதனுக்கு இருக்கும், இருக்க வேண்டிய தாழ்மையுடன் திரும்புவீர்கள். லேசான மூடுபனியில் உலா வரும் குரங்குகளும் இந்த வியூ பாயிண்டை அடிக்கடி நம்முடன் சேர்ந்து சந்திக்கின்றன. இந்த இடத்தைச் சுற்றியுள்ள ஷாப்பிங் மார்க்கெட்டுகள், உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய பல்வேறு வகையான கலை மற்றும் கைவினைப் பொருட்களான நினைவுப் பொருட்களை வழங்குவதால், ஆராய்வதற்கு ஏற்றதாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. இந்த ஸ்டால்களில் கையால் வீடுகளில் செய்யப்பட்ட சாக்லேட்டுகள் போன்ற சுவையான உணவுகளையும் நீங்கள் காணலாம். இக்காட்சிப்புள்ளியின் நாட்டம் நிச்சயமாக நம்மை சிலிர்க்க வைக்கிறது, மேலும் இந்த அனுபவம் நம்மை முழுவதுமாக இயற்கையில் திளைக்கும் விளைவை ஏற்படுத்தும். இவ்வாறாக இந்த இடம் நிச்சயமாக அதன் சிறப்புகளில் பலவகை கொண்டது.

DINDIGUL
WEATHER
Dindigul Weather
30.7°C
Sunny

தமிழ்நாட்டின் சுவைகள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...