இலவச எண்: 1800-425-31111

குன்னூரின் வளைந்து நெளிந்து செல்லும் மலைவழிச் சாலைகளின் ஊடே மேற்கொள்ளும் இயற்கை எழில் கொஞ்சும் பயணமானது, நீலகிரியின் நீல மலைகள் மற்றும் அதன் சரிவுகளில் உள்ள பசுமையான தேயிலை தோட்டங்களின் வசீகரமான காட்சியை வழங்கும் டால்பின் நோஸுக்கு உங்களை அழைத்துச் செல்லும். டால்பின் நோஸ் வழங்கும் இந்த இடத்திலிருந்து முடிவற்ற சமவெளிகள் மற்றும் பசுமையான மலைகளின் அற்புதமான உண்மைக் காட்சியில் உங்கள் கண்களும் மனமும் சுதந்திரமாக அலையட்டும்.

கடல் மட்டத்திலிருந்து 6600 அடி உயரத்தில், டால்பின் நோஸில் இருந்து பார்க்கும் காட்சி நம்மை கிட்டத்தட்ட மூர்ச்சை அடைய வைக்கிறது. மலையேற்றத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு முற்றிலும் ஏற்ற ஓர் இடமாக, பழனி மலைத்தொடரில் 3 கி.மீ தூரம் அளவு டால்பின் நோஸ் பாதையை உள்ளடக்கியது ஆகும். மலை வாசஸ்தலங்களின் ராணியின் பெருமையை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த காட்சிக் கோணம் மிகவும் பிடித்தமானது. கொடைக்கானல் மக்கள் பெருமையுடன் இந்த இடத்தை ஒரு சிறந்த இடமாக போற்றுகிறார்கள். இங்கு இருந்து மலைகளின் பசுமையான பரப்புகள், கரடுமுரடான நிலப்பரப்புகள் மற்றும் நகரங்களின் விசித்திர வசீகரத்தின் பெருமையைக் கண்டு வியக்கலாம். 

டால்பினின் மூக்கைப் போன்று துருத்திக் கொண்டிருக்கும் தட்டையான பாறையின் காரணமாக இந்த இடத்திற்கு இவ்வாறு அதன் பெயர் வந்தது. இந்த இடத்தில் இருந்து கீழே உள்ள பள்ளத்தாக்குகளின் சிறந்த ஆர்ப்பரிக்கும் காட்சியை நீங்கள் பெறலாம். இந்த வியூ பாயிண்டிற்கு வருகை தருவது உங்களுக்கு மனதளவில் உறுதியானதொரு அனுபவமாக இருக்கும், ஏனெனில் இந்த காட்சி மட்டுமே இப்பகுதி அளிக்கும் சலுகை கிடையாது. டால்பின் நோஸ் வரை செல்லும் பாதை உங்களை முற்றிலும் உற்சாகப்படுத்தும் அதே நேரம் அந்த அளவுக்கு சவாலானதும் கூட. ஆனால் அது உங்களை சோர்வடையச் செய்யும் அளவுக்கு கடினமானதாக இருப்பது இல்லை. இப்பகுதி வரையிலான ஆனந்த நடைபயணம் ஒரு அமைதியான மனவிளைவை உங்களுக்கு கொடுப்பதாக அமைகிறது. 

ஏனெனில் இது நேர்த்தியான பைன் மரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானலை மற்ற மலை வாசஸ்தலங்களை விட ஒரு படி மேலே உயர்த்தும் மிருதுவான, குளிர்ந்த மூடுபனி இங்கு படர்ந்து அலங்கரிக்கிறது. இந்த பாதையில் உருவாகி வீழும் சிலிர்க்கும் பல்வேறு சிறிய நீர்வீழ்ச்சிகளைப் பார்க்க உங்கள் வழியில் வாகனத்தை நிறுத்த மறக்காதீர்கள். காட்சிப் புள்ளியில் இருந்து சிறிது தூரம் நடந்தால், டால்பின் நோஸ் எக்கோ பாயிண்டில் நீங்கள் இருப்பீர்கள். இயற்கை அன்னையின் மர்மத்தை நீங்கள் அங்கு கண்டு வியக்க முடியும். அதன் வளமான நிலப்பரப்பு மற்றும் பள்ளத்தாக்குகள் நீங்கள் அனுப்பும் எந்த ஒலியையும் உங்களுக்கு எதிரொலியாகத் திருப்பித் தருகிறது. 

ஆனால் இங்கு நீங்கள் சென்று சேர்ந்த பிறகுதான் பசுமை மந்திரத்தின் இயல்பான சுவையை நீங்கள் தளர்வின்றி சுவைப்பீர்கள். மலைகள் மற்றும் மேகங்களின் பின்னணியில் நீங்கள் புகைப்படம் எடுக்கவும், நன்றாக செலவழித்த நேரத்தைப் எதிர்காலத்துக்கு கடத்தவும் ஏற்றதாக இருக்கும். இந்த தளம் இயற்கையின் இனிமையான கவர்ச்சியில் நீங்கள் ஆழ்ந்து திளைக்க மிகவும் ஏற்றது. இது உங்களை உங்களுடனே இணைத்துக்கொள்ளவும், இயற்கையின் மர்மமான சக்திகளின் ஒரு பகுதியாக நீங்களும் எப்படி இருக்கிறீர்கள் என்பதை உணரவும் உதவும்.

DINDIGUL
WEATHER
Dindigul Weather
28.2°C
Mist

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

தமிழ்நாட்டின் சுவைகள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...