இலவச எண்: 1800-425-31111

டெவில்ஸ் கிச்சன்

குணா குகைகள் என்றும் அழைக்கப்படும் இந்த அழகிய பாரம்பரிய தளம், கொடைக்கானலின் புறநகரில் அமைந்திருந்தாலும், மலை வாசஸ்தலத்திற்கே உரிய பசுமையான இயற்கை அழகைக் கொண்டுள்ளது. டெவில்ஸ் கிச்சன் மலையேறுபவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு இடம். இதுமட்டுமின்றி மோயர் பாயின்ட்டுக்கு மிக அருகிலும் இது அமைந்துள்ளது. பயமுறுத்தும் குகைகளின் இந்த குழுவானது "டெவில்ஸ் கிச்சன்" என்று பெயர் பெற்றது. ஏனெனில் இந்த கட்டமைப்புகளின் அரவணைப்பில் வசிக்கும் பல வெளவால்கள் பயணிகளை ஆனந்த மிரட்சிக்குள்ளாக்குகின்றன.

டெவில்ஸ் கிச்சன் என்பது தூண் பாறைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இயற்கை மகிமையின் விரிவாக்கமாக நாம் கருதலாம். இந்த இடம் சவாலான நடை உலாவை விரும்புபவர்கள் அடிக்கடி வந்து தஞ்சம் அடையும் இடமாக இருக்கிறது. இங்கு படமாக்கப்பட்ட “குணா” என்ற தமிழ் திரைப்படம் வெளியான பிறகு இது பிரபலமடைந்ததுடன், இயற்கையின் பசுமை விருந்தோம்பலை ருசிக்க இந்த அற்புதமான குகைகளுக்குச் செல்லும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இது ஈர்த்து வருகிறது. 

1821 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அதிகாரி, B. S. வார்டு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குகைகள், 2230 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன. இருப்பினும், இந்த இடம் மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் இங்கு துறை அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட ஒரு சில பாதுகாப்பான இடங்களிலிருந்து மட்டுமே குகைகளின் பார்வையை வழங்குகிறது. அதே நேரத்தில் நீங்கள் ஆபத்தான இடங்களுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துகின்றன. 

இந்த குகைகளுக்கு இட்டுச் செல்லும் பசுமையான பைன் காடுகளின் வழியாக நீங்கள் ஆசுவாசமாக நடை உலா வரலாம் மற்றும் அவை அளிக்கும் பாதுகாப்பின் அரவணைப்பை அனுபவிக்கலாம். டெவில்ஸ் கிச்சனின் பேய் காடுகளில் பயணிக்கும் வளைந்த பாதைகள் நீங்கள் ஒரு நாள் முழுவதும் ஆராய தகுதி வாய்ந்தவை . டெவில்ஸ் கிச்சன், அதன் மற்றொரு நிலப்பரப்பில் இரகசியங்களை பாதுகாத்து, புவி ஆய்வு செய்வதில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு பெரும் புதையலாக திகழ்கின்றது. 

அந்த தீவிரமான தேடல் கொண்டவர்கள், தொடுவானத்தில் இருந்து பரந்து விரிந்திருக்கும் முடிவில்லாத பசுமையான பள்ளத்தாக்கு மற்றும் வெள்ளை மூடுபனியின் மர்மமான திரையில் மூடப்பட்டிருக்கும் தூண் பாறைகள் போன்ற எண்ணற்ற கண்கவர் காட்சிகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். இது புகைப்படக் கலைஞர்களையும் ஈர்க்கிறது. ஏனெனில் இது இயற்கை காட்சிகளுக்கான அற்புதமான அமைப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்கள் மற்றும்/அல்லது குடும்பத்தினருடன் நினைவுகளைப் படம்பிடிக்கவும் அனுமதிக்கிறது. இதற்காக உங்கள் கேமராவை பிரயோகிப்பதை நீங்கள் மறக்க நாங்கள் விரும்புவதில்லை!

DINDIGUL
WEATHER
Dindigul Weather
30.7°C
Sunny

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

தமிழ்நாட்டின் சுவைகள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...