இலவச எண்: 1800-425-31111

ஒவ்வொரு கோடை காலத்திலும், பிரையன்ட் பூங்காவில் வருடாந்திர மலர் கண்காட்சி தொடங்கும் போது, ​​கொடை ஏரியின் கரைகள் வண்ணம் மற்றும் நறுமணத்தின் வெடிப்பில் திளைக்கும். பிரையண்ட் பூங்கா, கொடை ஏரியின் கிழக்குக் கரையில், இந்த மலைவாசஸ்தலத்தைப் போலவே பழமையான,அரிய கவர்ச்சியான தாவரங்கள் மற்றும் மரங்களின் தொகுப்பைக் கொண்ட ஒரு அழகிய தாவரவியல் பூங்காவாக உள்ளது.

1908 ஆம் ஆண்டு, மதுரையைச் சேர்ந்த வன அதிகாரி எச்.டி.பிரையன்ட், கொடை ஏரிக்கு அருகில் ஒரு சிறிய பூங்காவை அமைத்தார். அவரது பெயரால் அமைக்கப்பட்ட பூங்கா தற்போது 20 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்காவாக உருவாகியுள்ளது. தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையால் நிர்வகிக்கப்படும் இந்த பிரையண்ட் பூங்கா, பல ஆண்டுகளாக பிரபலமான சுற்றுலாத் தலமாகவும், கொடைக்கானலின் அடையாளச் சின்னமாகவும் திகழ்கிறது.

பல தசாப்தங்களுக்கு முன்னர் பயிரிடப்பட்ட பலவகையான செடிகள், கற்றாழை மற்றும் மரங்களின் தாயகமான பிரையன்ட் பார்க், எண்ணற்ற மலர்களின் வண்ணங்கள் மற்றும் நறுமணத்தால் அலங்கரிக்கப்பட்ட அமைதியான நிலப்பரப்பில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட மிகவும் சிறந்த ஓர் இடமாகும். 

இந்த பூங்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ரோஜாக்களின் தொகுப்பு உள்ளது. கோடை மாதங்களில் வண்ணத் திருவிழாவில் பூக்கள் பூக்கும்போது பூங்கா முழுவதும் திருவிழாக் காட்சியாக மாறிவிடும். கண்ணாடி மாளிகை என்பது பூங்காவின் தனித்துவமான மற்றுமொரு அம்சமாகும், இது பல்வேறு வகையான மனதிற்கு கவர்ச்சியான தாவரங்களைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 175 ஆண்டுகள் பழமையான யூகலிப்டஸ் மரமும் இந்த பூங்காவில் உள்ளது. தாவரங்கள் மற்றும் மரங்களின் பன்முகத்தன்மை பூங்காவை பலவகையான பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகளின் இருப்பிடமாக நித்தம் மாற்றுகிறது. பல வகையான பூக்கள் மற்றும் நடனமாடும் பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் சாதாரணமாக உலா வருவதற்கு கொடைக்கானலில் இதை விட சிறந்த இடம் வேறு எதுவுமில்லை. 

பூங்காவில் எண்ணற்ற ரோஜா மலர்களால் நறுமணம் வீசும். அருகிலுள்ள கொடை ஏரியிலிருந்து வரும் குளிர்ந்த காற்று, தகிக்கும் உங்கள் மனதைத் தணித்து, புத்துணர்ச்சியூட்டுவது உறுதி.

மே மாதத்தில் நடத்தப்படும் வருடாந்திர மலர் கண்காட்சி, பூங்காவிற்குச் சென்று அதன் அழகை முழுமையாக அனுபவிக்க சிறந்த நேரமாகும். தோட்டக்கலைத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியானது, அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பல்வேறு வகையான மலர்கள் மற்றும் தாவரங்களை அறிவுப்பசி மற்றும் கண்காட்சிக்காக ஒன்றுசேர்க்கிறது. இந்த பூங்கா கல்விக்கான நடைமுறை மையமாகவும், அலங்கார தோட்டக்கலைக்கான செயல்விளக்க மையமாகவும் செயல்படுகிறது. பிரையன்ட் பூங்காவின் பூக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு மதியம் கழிக்காமல் கொடைக்கானலுக்கு உங்கள் வருகை நிறைவடையாது.

DINDIGUL
WEATHER
Dindigul Weather
19.8°C
Cloudy

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

தமிழ்நாட்டின் சுவைகள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...