பேரிஜம் ஏரி புகழ்பெற்ற கொடைக்கானல் ஏரியிலிருந்து தென் மேற்கே 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு இயற்கை நன்னீர் ஏரியாகும், அழகான காடுகளின் வழியாக சென்றால் இதை அடைந்துவிடலாம். ஆனால் பேரிஜம் ஏரிக்கு செல்ல, வன அனுமதிச் சீட்டு அவசியம், அதை மாவட்ட வன அலுவலகத்திலிருந்து எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். கருவமரம் மற்றும் தேவதாரு மரங்களால் சூழப்பட்டுள்ள இந்த அமைதியான காடு, அற்புதமான ஏரி காட்சிகளுடன் உங்கள் விடுமுறையைக் கழிக்க, அனைத்து தேவையையும் உள்ளடக்கியவை.
பேரிஜம் ஏரி, பழனி மலையிலுள்ள ஹாமில்டன் கோட்டையின் பழைய இடத்தில் அமைந்துள்ளது. மேல் பழனி சோலா காப்புக்காடு,கொண்டை பாம்புண்ணிக் கழுகு, கள்ளப்பருந்து, வெளிறிய விழுங்கும் விழுங்குகள் மற்றும் சில பல்லுயிர்கள் இருப்பிடமாக இருப்பதால் உங்கள் தொலைநோகக்கியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். கூம்பலகன், நீலக்கற்குருவி, கதிர்குருவி மற்றும் சில புலம்பெயாரும் பறவைகளும் இந்த காட்டிற்கு வருகை தருகின்றன.
மீன்பிடித்தல், பறவைகளைப் பார்ப்பது அல்லது ஏரியைச் சுற்றி உலா வருதல் போன்றவற்றில் நேரத்தைச் செலவிடலாம். ஏரியில் படகு சவாரி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது, ஏனெனில் இயற்கையான நன்னீர் தரத்தை பாதுகாக்கவும், அருகிலுள்ள நகரமான பெரியகுளத்திற்கு இது முதன்மை நீர் ஆதாரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏரி, ஒரு அணையின் வடிகால் மூலம் உருவாகும் மெல்லிய நீரோடையால், ஒரு நுண்ணிய நீர்நிலை வளர்ச்சியடைந்திருக்கிறது.
அதிர்ஷ்டம் இருந்தால், காட்டில் அல்லது ஏரியைச் சுற்றி காட்டெருமை, மான், பாம்புகள், யானைகள் மற்றும் குரங்குகளைக் காணலாம். இந்தப் பகுதியைச் சுற்றி பல்வேறு வகையான காளான்கள் வளர்வதாகக் கூறப்படுகிறது.
தீ கோபுரம், ஏரிக் காட்சி, அமைதியான பள்ளத்தாக்கு மற்றும் ஏரிக்கு அருகிலிருக்கும் மருந்து காடுகள், ஆகியவை அருகிலுள்ள ஈர்ப்புகளாகும்.
கொடைக்கானல் பேருந்து நிலையம், சுமார் 23 கி.மீ.
மதுரை சர்வதேச விமான நிலையம், சுமார் 156 கி.மீ.
பழனி ரயில் நிலையம், சுமார் 88 கி.மீ
ஏப்ரல் - ஜூன்