இலவச எண்: 1800-425-31111

கொடைக்கானல் ஏரியிலிருந்து ஒரு கல் எறியும் அளவு தூரத்தில் பியர் ஷோலா நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது. இது ஓர் பருவகால நீர்வீழ்ச்சியாகும். இது பெரும்பாலும் மழைக்காலங்களில் மட்டுமே அதன் உண்மையான அழகை வெளிப்படுத்துகிறது. பசுமைக்கு மத்தியில் அமைந்துள்ள பியர் ஷோலா நீர்வீழ்ச்சியானது, காடுகளில் நீங்கள் உங்கள் மனம் தொலைந்து போகவும், அருவியின் ரம்மிய சூழலால் வழங்கப்படும் அமைதியை அனுபவிக்கவும் ஒரு பிரபலமான இடமாகும்.

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளில் மறைந்திருக்கும் சொர்க்கத்தின் ஒரு பகுதி போன்றதாகும். பல வகையான விலங்குகள் மற்றும் தாவரங்களின் தாயகமான பியர் ஷோலா நீர்வீழ்ச்சியானது பல்லுயிர் பெருக்கத்திற்கு ஓர் அற்புத காரணியாக உள்ளது. பியர் ஷோலா நீர்வீழ்ச்சி அதன் பெயரை, சுற்றியுள்ள காடுகளில் உள்ள கரடிகளின் விருப்பமான நீர் ருசிப்பு துவாரம் என்பதால் இவ்வாறு பெற்றுள்ளது. 

இப்போது மிகவும் பிரபலமான சுற்றுலா தலமான, பியர் ஷோலா நீர் வீழ்ச்சி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு நாள் பயணம் செய்வதற்கு அமைதியான மற்றும் செழுமையான சூழலை வழங்குகிறது. அடர்ந்த காடுகளின் வளிமண்டலத்தில், பறவைகளின் கீச்சிடும் கிண்டல் மற்றும் பாறைகளில் மோதும் தண்ணீரின் இனிமையான சத்தம் ஆகியவற்றால் இந்த இடம் முழுமை செய்யப்பட்டுள்ளது. பரபரப்பான வாழ்க்கை சூழலில் இருந்து வந்த நீங்கள் இயற்கை சூழலில் ஆனந்தத்துடன் மூழ்குவீர்கள். பியர் ஷோலா நீர்வீழ்ச்சியும் அதைச் சுற்றியுள்ள செழுமையான காடுகளும் சோர்வடைந்த பயணிகளுக்கு அமைதியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பயண இடைவேளையை அளிக்கின்றன. 

கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து வெறும் 3 கிமீ தொலைவில் அமைந்துள்ள பியர் ஷோலா நீர்வீழ்ச்சி உங்கள் கொடைக்கானல் பயணத்திற்கான பயணத் திட்டத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய இடமாகும். 

வளைவுநெளிவுகள் மற்றும் சமதளம் நிறைந்த சாலை உங்களை காடுகளின் வழியாக ஒரு சுவாரஸ்ய பாதைக்கு அழைத்துச் செல்லும். அதன் தனித்துவமான அமைதியுடன் காடுகளில் உள்ள பறவைகளின் இனிய கானங்களால், வனப் பாதையில் இவ்வாறான ஒரு இலகுவான பயணம் சிரமமின்றி இருக்கும். பழமையான பசும் காடுகளின் நடுவில் உள்ள நீர்வீழ்ச்சியின் கம்பீரமான காட்சியுடன் திறக்கும் அடர்ந்த விதானத்தில் ஒரு இடைவெளியுடன் மலையேறுபவர்கள் வரவேற்கப்படுவார்கள். 

குளிப்பதற்கும் நீச்சலுக்கும் பாதுகாப்பான ஓர் குளத்தில் 40 அடிக்கு மேல் இருந்து தண்ணீர் விழுகிறது. உங்கள் மலையேற்றத்தின் முடிவில் நீங்கள் பெறக்கூடிய இந்த அற்புத வெகுமதியாக அழகிய குளிர்நீரில் ஒரு மகிழ்ச்சியான டைவ் பாய்ச்சல் நிச்சயம் இருக்கும். பியர் ஷோலா நீர்வீழ்ச்சி என்பது பெரும்பாலும் ஓர் பருவகால நீர்வீழ்ச்சியாகும். இது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சிறப்பாக நிரம்பி அனுபவிக்கப்படுகிறது. பருவமழை அதிகமாக இருக்கும் மாதங்களில் நீர்வீழ்ச்சிக்கு செல்லும்போது பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் மற்ற நாட்களை காட்டிலும் அக்காலங்களில் தண்ணீர் வரத்து மிகுந்து காணப்படும்.

DINDIGUL
WEATHER
Dindigul Weather
26.2°C
Mist

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

தமிழ்நாட்டின் சுவைகள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...