கொடைக்கானல் பெரும்பாலும் மலைவாசஸ்தலங்களின் இளவரசி என்று அழைக்கப்படும். வலிமையான சிகரங்கள், குன்றுகள், பரந்த பள்ளத்தாக்குகள், அளப்பரிய ஏரிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுடன், உண்மையிலேயே ஓர் பூலோக சொர்க்கமாகும். இப்போது நீங்கள் தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுலாத் துறைகள் வழங்கும் சுற்றுச்சூழல் சுற்றுலா தொகுப்பில் சேர்ந்து இந்த அழகான நிலப்பரப்பில் உள்ள வனப்பகுதிகளை ஆராய்ந்து எவ்வாறு வேடிக்கை பார்த்து விளையாடலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவுகளில் கொடைக்கானலின் அழகிய மலைவாசஸ்தலம் உள்ளது. இது பயணிகளுக்கு அறிமுகம் தேவையில்லாத பிரபலமான சுற்றுலாத் தலமாகும். எண்ணற்ற சுற்றுலா இடங்கள் மற்றும் நாம் வாயடைத்துப் போகக் கூடிய கண்கவர் இடங்களுடன், கொடைக்கானல் ஒவ்வொரு விடுமுறை நாட்களின் போதும் மறக்க முடியாத அனுபவங்களை நமக்கு வழங்கிக்கொண்டுள்ளது.
இந்த மலைவாசஸ்தலத்தின் புனிதத்தன்மையைப் பேணுவதன் மூலம் அதன் அழகிய மரங்கள் மற்றும் எழில்மிகு நிலப்பரப்பு அனைத்தையும் ஒரேயடியாக ஆராய்வது சிலருக்கு மனதளவில் அச்சுறுத்தும் விஷயமாகத் தோன்றலாம். சுருங்க சொல்வதென்றால், கொடைக்கானல் அதன் பிரமிக்க வைக்கும் அழகைக் கொண்டு சுற்றுலாப் பயணிகளை மூழ்கடித்துவிடும். இந்த பரந்த மற்றும் மாறுபட்ட நிலப்பரப்பில் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய தனிப்பட்ட சொர்க்கத் துகளைக் கண்டறிய உதவுவதற்காக, தமிழ்நாடு மாநில வனத்துறை மற்றும் சுற்றுலாத் துறைகள், தேர்ந்தெடுத்த சில இடங்கள் மற்றும் மனங்கவரும் அனுபவங்கள் சேர்ந்த சில சூழல் சுற்றுலாத் தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளன.
பைன் காடுகள்: கொடைக்கானலில் உள்ள புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான பைன் காடு, ஆளரவமற்ற காடுகளையும் அதனை சுற்றியுள்ள நிலப்பரப்புகளையும் பாதுகாப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பைன் மரத்தின் இனிமையான நறுமணத்துடன் கூடிய, பைன் வனத்தின் வினோதமான சூழல் இயற்கையோடு நாம் ஒன்றி இருக்க சரியான இடமாகும். இங்கிருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வளமான பன்முகத்தன்மை கொண்ட பைன் காடு, இயற்கையைப் பற்றி மேலும் அறிய ஆர்வமுள்ள பயணிகளுக்கு அமைதியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாகும். கொடைக்கானலுக்குச் செல்லும் போது நீங்கள் தவறவிடக்கூடாத ஒரு அதிசயமான அனுபவமாக, மெல்லிய மூடுபனியில் முக்காடு இட்டுக்கொண்ட உயரமான பைன் மரங்களின் முடிவில்லாத வரிசைகளின் வழியாக உலாவுங்கள்.
பைசன் மேடு: அடர்ந்து வளரும் உயரமான புற்களைக் கொண்ட மலைகளின் பசுமையான சரிவுகள் கொடைக்கானல் முழுவதும் நீங்கள் சாதாரணமாக காணக்கூடிய ஒரு இயற்கை காட்சியாகும். இந்த அழகிய நிலப்பரப்பில் பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. குறிப்பாக அவற்றில் மிகவும் கம்பீரமானது இந்திய பைசன் ஆகும். பைசன் மேடுவின் பரந்த மற்றும் அலை அலையான சரிவுகளில் மலையேற்றம் செய்வது என்பது சுற்றுச்சூழல் சுற்றுலாத் தொகுப்பின் முக்கிய ஈர்ப்பாகும். அதிர்ஷ்டசாலியான பயணிகள் பைசன் எனப்படும் ராட்சத காட்டெருமையை அருகில் இருந்து பார்க்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
மன்னவனூர் புல்வெளிகள்: புல்வெளிகளால் ஆன இந்தப் பரந்த பசுமைக் கடல், இதமான குளிர்ச்சியான காலநிலை மற்றும் ஆண்டு முழுவதும் மூடுபனி படர்ந்து இருப்பதால் இயற்கையாகவே ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. அதன் சுற்றுப்புறத்திற்கு ஒரு அதிசயமான பிரகாசத்தை இது அளிக்கிறது. இந்த புல்வெளிகள் அவற்றின் நடுவில் ஒரு அழகிய, நீல ஏரி மற்றும் ஒரு முறுகலான மலையேற்றப் பாதையை அலங்கரிக்கின்றன.
கொடைக்கானலின் பல்வேறு குறைவான ஆராயப்பட்ட கன்னி நிலப்பரப்புகளை உள்ளடக்கிய பல்வேறு சுற்றுச்சூழல் சுற்றுப்பயணங்கள் காணக் கிடைக்கின்றன. சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பொறுத்து பேக்கேஜ் மாற்றி அமைக்கப்படலாம். தங்குமிடம் மற்றும் உணவுக்கான வசதிகளை உள்ளடக்கிய இந்த தொகுப்பு, சஃபாரிகள் மற்றும் போக்குவரத்து விருப்பங்களையும் தன்னகத்தே உள்ளடக்கியது.