இலவச எண்: 1800-425-31111

ஏலகிரியின் வசீகரிக்கும் இடங்கள், மலையேற்றம் மற்றும் சாகச நடவடிக்கைகளுக்கு தாயகமாக கருதப்படுகிறது. இங்கே ஏரிகள், கோவில்கள், அதி அற்புதமான குக்கிராமங்கள் ஆகியவை சிறந்த சுற்றுலா தலமாக அமைகிறது.

நான்கு மலைகளுக்கு நடுவில் வீற்றிருக்கும் ஏலகிரி, ஆண்டு முழுவதும் இதமான தட்பவெப்பத்துடன் காட்சியளிக்கிறது.  வளைந்து செல்லும் மலைச் சாலை மற்றும் 14  ஊசி வளைவுகள், உங்களை ஏலகிரிக்கு அழைத்துச் செல்கின்றன.  இங்கே உங்கள் தேடலுக்கான பரிசு நிறைந்துள்ளது, கிராமங்களை சுற்றி நடந்து, மக்கள் மற்றும் அவர்களுடைய கலாச்சாரத்துடன் சேர்ந்து, உங்கள் ஆன்மாவை புத்துயிர் ஆக்கிக்கொளுங்கள்.  ஏரிக்குச் சென்று, கரையோரம் அமர்ந்து இளைப்பாறுங்கள் அல்லது  ஆனந்த உலா செல்லுங்கள்  மாலையில் அமைதியான நீரில் படகு சவாரி செய்யுங்கள். ஜலகம்பாறை அருவி, புங்கனூர் ஏரி, வான்வெளி ஆய்வகம் (டெலஸ்கோப் அப்சர்வேட்டரி)  மற்றும் பல அற்புதமான இடங்கள் இங்கு உங்களுக்காக காத்திருக்கின்றன. புங்கனூர் ஏரியைச் சுற்றியுள்ள அமைதியான காற்றை உறிஞ்சவும், இது ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரியாகும், இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு தூய்மையான மகிழ்ச்சியை அளிக்கிறது.  குறும்புத்தனமான குரங்குகளைக் கண்காணியுங்கள்.  சூரியன் மறையும் வரை காத்திருந்து மாலையில் படகு சவாரி செய்யுங்கள். 

மலைப்பகுதியில் உள்ள ஜலகம்பாறை அருவிக்கு செல்லுங்கள். இந்த அருவிக்கு 5 கி.மீ. மலையேற்றம் செல்லும் போது கண்கவர் காட்சிகள், எதிர்பாராத பரிசாக உங்களுக்கு கிடைத்திடும்.  சாகச விரும்பிகள் சுவாமிமலை மலைக்கு மலையேற்றம் செல்லலாம்.  மேலே சென்று, அந்த இடத்தின் பரந்த நிகரற்ற காட்சியை  பெற்றுக் கொள்ளுங்கள்.  புங்கனூர் ஏரிக்கு அருகில் உள்ள இயற்கை பூங்காவிற்கு சென்று வாருங்கள்.  ஜலகண்டீஸ்வரர் கோவிலின் அற்புதமான கட்டிடக்கலையை கண்டு வியந்து புராணங்களை கேளுங்கள்.  கோயிலைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான நம்பிக்கை உள்ளது,  நீங்கள் ஒரு மண் விளக்கின் மீது உங்கள் கையை வைத்து, அது சுழன்றால், உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைத்ததைக் குறிக்கிறது.   மற்றொரு மனிதனால் உருவாக்கப்பட்ட நிலவூர் ஏரியும் இங்கு ஒரு முக்கிய ஈர்ப்பாகும். வான்வெளி ஆய்வகத்தில் (தொலைநோக்கி ஆய்வகம்) வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணத்திற்கு பதிவு செய்யவும், இது வான்வெளி அற்புதங்களையும், மர்மமான காட்சிகளையும்  உங்களுக்கு திறக்கும்.  நேரம் கிடைத்தால், வேலவன் கோவிலையும் மோட்ச விமோசன கோவிலையும் தவற விடாமல் பார்த்துக் விடுங்கள்.  புங்கனூர் அருகே உள்ள மூலிகைப் பண்ணையின் இயற்கை அழகு சுற்றுலாப் பயணிகளால் தவிர்க்க முடியாத ஒன்று.  ஏலகிரி (அதனாவூர்) கிராமம்-மங்கலம் கிராமம்-ஜலகம்பாறை, இந்த இடைப்பட்ட கிராமங்கள் வழியாக மலையேற்றம் செல்வோர் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கின்றனர்.  குறிப்பாக,அதனாவூர்-ஒய்.எம்.சி.ஏ வளாகம்-சாமிமலைக்கு பின்புறம் உள்ளது.

VELLORE
WEATHER
Vellore Weather
17.6°C
Sunny

செய்ய வேண்டியவை

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

வலைப்பூக்கள்

மலைகள் அழைக்கின்றன...

தமிழ்நாட்டின் இந்த ஐந்து அதிகம் அறியப்படாத ஆனால் அழகிய மலைவாசஸ்தலங்களைப் பாருங்கள், அவை நிச்சயமாக உங்களை மயக்கும். ஆராயப்படாதவற்றை ஆராயுங்கள்.

2 years ago

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...