தெற்கு இந்தியாவிலேயே மிகப்பெரும் கோயில் குளங்களில் ஒன்றாக கருதப்படும் தெப்பக்குளத்திற்கு வைகை நதியில் இருந்து தண்ணீர் வரத்து பெறப்படுகிறது. நான்கு புறங்களிலும் கிரானைட் சுவர்களால் சூழப்பட்ட இந்த தெப்பக்குளத்தின் மத்தியில் தான் கோயில் அமைந்துள்ளது. இந்த அற்புதமான குளம் கிறிஸ்துவுக்கு பின்னர் 1645ம் ஆண்டு கால வாக்கில், திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இங்குள்ள மற்றுமொரு பிரதான ஈர்ப்பு கோயிலை சுற்றியுள்ள படித்துறையாகும். இதைப் பற்றி சில கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்று திருமலை நாயக்கர் மஹாலில் பயன்படுத்தப்பட்ட செங்கற்களை செய்வதற்கு, இக்குளத்தின் அடியில் உள்ள மணலைக் கொண்டு செங்கற்சூளைகளில் தயார் செய்தார்கள் என்பது. இந்த மாபெரும் பணியின் பொழுது குளத்தை தோண்டும் தருவாயில், ஒரு விநாயகர் சிலை இங்கு கிடைத்ததாகவும் அது கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. தெப்பக்குளத்தில் இருந்து வைகை நதிக்கு பூமிக்கு அடியில் நிறைய சுரங்கப்பாதைகள் மூலம் தண்ணீர் வரத்து உள்ளதாக தெரிகிறது.
ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் பிரபல தெப்ப திருவிழாவின் மைய புள்ளியே இந்த தெப்பக்குளம் தான். ஒவ்வொரு வருடமும் திருமலை நாயக்கரின் ஆண்டு விழாவையொட்டி இங்கு படித்துறைகளில் பல்லாயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இந்த திருவிழாவை அடைவதற்கு நீங்கள் சரியான திட்டமிடலோடு இங்கு வந்தால் இந்த அற்புதமான காட்சிகளை தவறாமல் காணலாம். மாலை கலக்கும் இரவு நேரத்தில் தெப்பக்குளத்து இக்கோயில் தீப விளக்குகளின் ஒளியில் ஜொலிக்கிறது. இந்த குளத்து நீரில் பிரதிபலிக்கும் கண்கவர் ஒளிகளின் ஊடே தெய்வங்கள் இக்குளத்திற்கு வந்து ஸ்நானம் செய்வதாக மக்களால் நம்பப்படுகிறது. இத் திருவிழா, இந்த தெப்பக்குளம் மற்றும் சார்புடைய கோயிலின் சிறப்பு அம்சம் எத்தகையது என்றால் சுற்றில் உள்ள 8 மாவட்டங்களுக்கு மேலான மக்கள் இத்திருவிழாவை காண வருடம் தோறும் இங்கு தவறாமல் வருகை புரிகின்றனர் என்பதே! திருவிழாவின் பொழுது மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் தெப்பம் என்னும் மிதவையில் இக்குளத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான விளக்குகளின் ஒளிகளால் நிரம்ப பெற்ற இந்த தெப்ப திருவிழா காணக் கண்கொள்ளா காட்சி ஆகும்.
மதுரை பிரதான பேருந்து நிலையம், சுமார் 5 கி.மீ.
மதுரை விமான நிலையம், சுமார் 16 கி.மீ.
மதுரை ரயில் நிலையம், சுமார் 6 கி.மீ.
அக்டோபர் - மார்ச்