மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலை மலைத் தொடரில், கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் அமைந்துள்ள வால்பாறை, சுற்றுலாத் தலங்களில் முதன்மையானதாகத் திகழ்கிறது. கிராமிய வசீகரத்துடன் இந்த இடம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. வால்பாறைக்கு ஊசி வளைவுகளில் பயணம் செய்து, பசுமை நிறைந்த மலைத்தொடர்களைக் கண்டு வியந்து மகிழுங்கள். காடுகளால் சூழப்பட்ட, வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்களும் மற்றும் காபி எஸ்டேட்களும் ஒன்று சேர்ந்து கண்கவர் காட்சியை உருவாக்குகின்றன. அன்றாட வாழ்நாளின் துயரங்களை மறந்து, தோட்டங்களில் உலா செல்லுங்கள், அந்த அமைதியில் உங்கள் ஆன்மாவை இளைப்பாறச் செய்யுங்கள். மேல் சோலையாறு அணை, நீராறு அணை, ஆழியாறு அணை, குரங்கு அருவி, பாலாஜி கோவில் (கரிமலை), வேளாங்கண்ணி தேவாலயம் (கரிமலை), பஞ்ச முக விநாயகர் கோயில் (சோலையாறுக்கு அருகில்) ஆகியவை நீங்கள் பார்க்க விரும்பும் சில ஈர்ப்புகள். மலையேறுபவர்களுக்கு, வால்பாறை ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. வால்பாறை மலைத்தொடர், நீலகிரி வரையாடுகளின் வாழ்விடமாகவும் உள்ளது.
இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயத்திற்குச் செல்லுங்கள், இது வால்பாறையின் மிகவும் பிரபலமான ஈர்ப்புகளில் ஒன்றாகும். சோலைமந்தி, கேளையாடு (குரைக்கும் மான்கள்), காட்டுப்பன்றிகள், நீலகிரி மற்றும் பொதுவான மந்தி (லங்கூர்) போன்றவற்றை இங்கு காணலாம். மலை இருவாட்சி, மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி மற்றும் மலபார் சாம்பல் இருவாச்சி ஆகியவை இங்கே இருப்பதால், பறவை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாகவும் வால்பாறை உள்ளது.
சின்னக் கல்லாருக்குச் சென்று இயற்கையின் மயக்கும் அழகைக் கண்டு வியந்து போங்கள். காடுகளால் மூடப்பட்ட, குறுகலான, வளைந்த பாதை சின்னக்கல்லார் அருவிக்கு செல்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் அழகில் மூழ்குங்கள். இந்த இடம் மூன்றாவது அதிக மழையைப் பெறும் பெருமைக்குரியது. மழையின் காரணமாக மூடுபனியால் மூடப்பட்டிருக்கும் சின்னக்கல்லாறு, பசுமையால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் உங்களால் முடிந்த அளவு நேரத்தை செலவிட விரும்புவீர்கள்.
வால்பாறை புதிய பேருந்து நிலையம், சுமார் 1 கி.மீ.
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், சுமார் 119 கி.மீ.
பொள்ளாச்சி ரயில் நிலையம், சுமார் 64 கி.மீ.
டிசம்பர் முதல் ஜனவரி வரை