இலவச எண்: 1800-425-31111

வைதேகி அருவி, உங்களுக்கு, காடு வழியாக மலையேற்றம் மேற்கொள்வது மற்றும் புத்துணர்ச்சியூட்டும் நீரில் நீராடுவது என்ற ஒருங்கிணைந்த மகிழ்ச்சியை தரும்.

நரசிம்மபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வைததேகி நீர்வீழ்ச்சிக்கு நடைப் பயணம் அற்புதமானது.  காடுகளின் ஆழத்திலிருந்து வெளிவரும் பறவைகளின் சப்தம், மங்கலான தொலைதூர ஒலிகள் கேட்கும், அமைதியான உலாவிற்கு தயாராகுங்கள்.  நீங்கள் நெருங்க நெருங்க, உங்கள் காதுகள் மெதுவான நீரின் சப்தத்திற்குத் திறக்கின்றன, அந்த சப்தம் மெல்ல மெல்ல வடியும் தண்ணீரின் சத்தமாக மாறிவிடும்.  அங்கு சென்றதும், மூச்சடைக்கக்கூடிய அழகை உள்வாங்கிக்கொள்ளுங்கள். காற்றில் உள்ள அமைதி உங்களை  உறயவைக்கும்.  உங்கள் கவலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு, சிறிது நேரம் செலவழித்து, புத்துணர்ச்சியுடன் திரும்புங்கள்.  நீர்வீழ்ச்சியில் தத்தளிக்கும் போது கவனமாக இருங்கள் மற்றும் உல்லாசமாக அருவியில் குளித்து மகிழுங்கள்.  அழகிய நீர் மற்றும் அடர்ந்த காடு ஆகியவை மனநிம்மதியை உயர்த்திடும், மேலும் இந்த அழகான நீர்வீழ்ச்சிக்கு காட்டில் அழகாக அமைந்திருக்கும் பாதையில் நடந்து செல்ல மக்கள் விரும்புவதில் ஆச்சரியமேதுமில்லை, ஏன்னென்றால் அந்த பாதை அவ்வளவு அழகானது. பசுமையுடன் கூடிய இயற்கை அழகு ஒரு அற்புதமான காட்சியை உருவாக்குகிறது அதை மனம் திறந்து தரிசியுங்கள்.  இந்த நீர்வீழ்ச்சி கோயம்புத்தூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

COIMBATORE
WEATHER
Coimbatore Weather
24.2°C
Clear

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...