இலவச எண்: 1800-425-31111

மேல் பவானி ஏரி

மேல் பவானி ஏரி, நீலகிரியின் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும். இது பவானி ஆற்றின் அணையினால், ஒரு அழகிய நீல நீர்த்தேக்க ஏரியாக மாறியது.குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் இயற்கையோடு ஒரு நாள் மகிழ்வதற்கு, ஒரு சரியான இடமாக இது உள்ளது.

நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தின் ஆடம்பரமான பசுமைக்குள் மறைந்திருக்கிறது மேல் பவானி ஏரி.  மேல் பவானி அணையின் செயற்கை நீர்த்தேக்க ஏரியானது பெரிதும் பார்வையிடப்படாத ஒரு இடமாகும், இது பரபரப்பான கூட்டத்திலிருந்து வெகு தொலைவில் ஒரு அமைதியான சூழலை அமைக்கிறது.  நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தில்லுள்ள காட்டு விலங்கினங்களின் கூச்சல்கள் மற்றும் நடனங்களால் மட்டுமே அமைதியிழக்கிறது மேல் பவானி ஏரி. நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் காடுகளின் வழியாக இலகுவான மலையேற்றத்திற்கான இடமாகத் இதை தேர்வுசெய்யுங்கள், நாள் முழுவதும் முகாமிடவும் ஏற்ற இடமாகவும் இது உள்ளது. ஏரியும் அதைச் சுற்றியுள்ள காடுகளும் இயற்கையின் அழகிய அழகை அருகிலிருந்து ரசிக்க ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன.

தமிழ்நாடு வனத்துறையால் இயக்கப்படும் பேருந்து சஃபாரி மூலம் ஏரியை அடையலாம்.  வலிமைமிக்க யானைகள் மற்றும் எண்ணற்ற விலங்குகள் அடிக்கடி வரும் இடங்கள் வழியாக 45 நிமிட பேருந்து பயணம், நீலகிரியின் வனவிலங்கு வளத்தை அனுபவிக்க ஒரு நல்ல வாய்ப்பாகும். முன்னரே தீர்மாணிக்கப்பட்ட நிறுத்தங்கள் வாயிலாக மர்மமான சோலா காடுகளின் காட்சிகளை ரசிக்கலாம் மற்றும் பேருந்து சஃபாரியை விலங்குகள் காண்பதும்,  பயத்தோடு நீங்கள் அதை பார்பதும் மறக்க முடியாத அனுபமாகும்.இது வனவிலங்குகளின் உண்மை அழகை ரசிப்பவர்களுக்கு, மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

சஃபாரியின் கடைசி நிறுத்தம் அழகிய ஏரியாகும்.  அதன் நீல நீரின் அமைதியானது, மலைகளின் இடைவெளிகளில் தொடர்ந்து வீசும் குளிர்ந்த காற்றால் மட்டுமே தொந்தரவு செய்யப்படுகிறது.அன்றாட வாழ்க்கையின் பதட்டங்களையும் சோர்வையும் துடைத்து, அமைதியான ஏரியின் கண்கவர் காட்சிகளில் தொலைந்து போகும் வாய்ப்பை வழங்குகிறது. ஆய்வு செய்யும் ஆர்வமுள்ளவர்களுக்கு நீலகிரியின் மூடுபனி நீல மலைகளுக்கு எதிராக,கரடுமுரடான  காடுகளுக்குள் ஏரியின் ஓரத்தில் ஒரு பாதை இருக்கிறது.  நீலகிரி காடுகளின் செழுமையை அனுபவிக்க தைரியமாக காடுகளுக்குள் செல்லுங்கள்.

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...