இலவச எண்: 1800-425-31111

மலையில் இருந்து செதுக்கப்பட்ட திருப்பரங்குன்றம் முருகன் கோயில் ஒரு முழுமையான கட்டிடக்கலை அற்புதம் ஆகும். மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் இக்கோயில் ஒன்று ஆகும்.

8ஆம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் மிகவும் அரிய சிறப்பு வாய்ந்தது. இக்கோயிலில் சிவன் மற்றும் விஷ்ணு சிலைகள் ஒன்றுக்கொன்று எதிரே உள்ளது. இந்து கோவில்களில் இது ஒரு தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. நுணுக்கமான கல் வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த ஆலயம் ஒரு கண்கவர் அமைப்பாகும், இது பார்வையாளர்களுக்கு நீடித்த நெடிய தோற்றத்தை ஏற்படுத்துகிறது. முருகப்பெருமானின் ஆறு கோவில்களில் இதுவும் ஒன்று ஆகும். முருகப்பெருமான் தேவசேனா தேவியை இங்கு மணந்ததாக புராணம் கூறுகிறது, மேலும் இந்த கோவில் திருமணத்திற்கு மிகவும் உகந்த தலங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் இது விளங்குகிறது. செகுந்தர் என்ற முஸ்லீம் ஆலயமும் இங்கு அமைந்துள்ளது. இக்கோயிலில் பாறைகள் வெட்டப்பட்டு சிவன், விஷ்ணு, விநாயகர், சுப்ரமணியர் மற்றும் துர்கா தேவி சன்னதிகள் உள்ளன. சிற்பங்கள் மாசற்ற கைவினைத்திறனை பிரதிபலிக்கின்றன. முருகப்பெருமானின் வாகனமான மயில், சிவபெருமானுக்குரிய நந்தி, மற்றும் பிள்ளையாருக்குரிய எலி ஆகியவற்றின் அற்புதமான சிலையும் உள்ளது. மகிஷாசுர மர்தினி, கற்பக விநாயகர், அந்தரபரணர் மற்றும் உக்கிரர் ஆகியோரின் சிற்பங்களும் பாறைகளில் காணப்படுகின்றன. கலைநயமிக்க மண்டபங்கள் இக்கோயிலின் ஈர்ப்பைக் கூட்டுகின்றன. நேர்த்தியான தூண்களுடன், இந்த மண்டபங்கள் பார்வையாளர்களை மயக்குகின்றன.

 

MADURAI
WEATHER
Madurai Weather
25.9°C
Light rain shower

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

Hotel Tamilnadu - Madurai-1

3, W Veli St, Near Periyar Bus Stand, Periyar, Madurai Main

தமிழ்நாட்டின் சுவைகள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...