1635இல் திருமலை நாயக்கர் மாமன்னரால் கட்டப்பட்ட இந்த மகாலானது திராவிட மற்றும் வெளிநாட்டு கட்டிட கலைகளின் ஒருமித்த சங்கமமாகும். வரலாற்று பிரியர்களுக்கும் கலாச்சார ஆர்வலர்களுக்கும் இவ்விடம் பல்வேறு ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மாலையில் இங்கு நடக்கும் ஒளியும் ஒலியும் காட்சி ஒரு மதிமயக்கும் அனுபவமாகும். மன்னர் இந்த கட்டிடத்தை வடிவமைப்பதற்கு ஒரு இத்தாலிய வடிவமைப்பாளரை தான் நியமித்தார் என்று நம்பப்படுகிறது. இவ்வரண்மனையின் உட்புறத்தினை அழகான ஓவியங்களும் சிற்பங்களும் அலங்கரிக்கின்றன. அதிலும் மேற்கூரையில் உள்ள ஓவியங்களானது மிகவும் தனித்துவம் வாய்ந்தவை. கம்பீரமான தூண்கள், மாபெரும் மத்திய முற்றம் மற்றும் நடன அரங்கம் இவற்றைக் கண்டு நீங்கள் வியப்படைவீர்கள் என்பது திண்ணம்.
இந்த அரண்மனையில் இரண்டு பகுதிகள் உள்ளன. அவை சொர்க்க விலாசம் மற்றும் ரங்க விலாசம். அரச குடியிருப்புகள், அந்தப்புரங்கள், குளங்கள், தோட்டங்கள் போன்ற மாடமாளிகைகளை கண்டு நீங்கள் வியந்து போவீர்கள். அரசரின் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனம் இங்கு இன்றும் பாதுகாத்து பராமரிக்கப்படுகிறது. மாபெரும் வட்ட வடிவிலான நெடு வரிசைகள், கற்விலாக்கள் மற்றும் ஒரு பிரத்யேக காட்சிப்பேழை இவ்வரண்மணையின் பிரதான அம்சங்களில் ஒன்றாகும். காலத்தின் கடினமான அக்னி பரீட்சைகளை இவ்வரண்மனை தாங்கி நின்று வருவது இதன் கட்டிடக்கலையின் பலத்திற்கு ஒரு சான்றாகும். இந்த திருமலை நாயக்கர் மஹால் ஆனது தற்காலத்தில் அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது.
மதுரை பேருந்து நிலையம், சுமார் 5 கி.மீ.
மதுரை விமான நிலையம், சுமார் 11 கி.மீ.
மதுரை ரயில் நிலையம், சுமார் 2 கி.மீ.
அக்டோபர் - மார்ச்