தென்னந்தோப்புகள் அதிகம் உள்ளதால் தேங்காப்பட்டணம் கடற்கரை என்று பெயர் பெற்றது. தேங்கா என்பதற்கு தமிழிலும் மலையாளத்திலும் தேங்காய் என்ற அர்த்தம் பெறுகிறது. பரந்த கடற்கரையோரமும், கடற்கரையின் நீலநிற நீரும், உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானவை. தேங்காப்பட்டணம் தாமிரபரணி ஆறு அரபிக்கடலுடன் கலக்கும் முகத்துவாரத்திற்கும் பரவலாக இந்த இடம் அறியப்படுகிறது. இங்கு படகு சேவைகளும் உள்ளன.
நாகர்கோவிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ள விளாங்கோடு தாலுகாவில் உள்ள, பைங்குளம் கிராமத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது.
நாகர்கோவில், சுமார் 32 கி.மீ. தொலைவில் உள்ளது
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், சுமார் 47 கிமீ. தொலைவில்,
நாகர்கோவில் நிலையம், சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது
நவம்பர் முதல் மார்ச் வரை