மேகங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும், மேய்ச்சல் நிலத்தை ஒத்தியிருக்கும் இந்த மலை, இயற்கையில் திளைத்து ஒரு அழகான நாளைக் கழிக்க விரும்பும் எவரையும் கவர்ந்திழுத்துவிடும். பாலமதி அல்லது பாலாமதி என்று அழைக்கப்படும் இந்த மலை இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
வேலூர் நகரின் தென்கிழக்கு பகுதிகளில் பரந்து விரிந்து கிடக்கும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் தொடர்ச்சியே பாலமதி மலை. பசுமையான பாலமதி மலைத்தொடர்,பாலமதி காப்பு காடு மற்றும் ஓட்டேரி ஏரி ஆகியவை கூட்டாக சேர்த்து பாலமதி மலையென்று அழைக்கப்படுகின்றன.
பறவை ஆர்வலர்களுக்கு சொர்க்கமான பாலமதி மலை, செம்மீசைச் சின்னான்,பச்சைப் பஞ்சுருட்டான,மைனா, வெள்ளை-தொண்டை மீன்கொத்தி,பனங்காடை, மற்றும் ரெட்டைவால் குருவி ஆகியவற்றின் இருப்பிடமாகும்.
ஓட்டேரி ஏரி, ஆங்கிலேயர் காலத்தில் வேலூர் மாவட்டத்திற்கு தண்ணீர் வழங்குவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதாகும். மலையின் உச்சியில் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலும் இங்குள்ளது. அமைதியான கிராமப்புறங்களின் வசீகரத்தில் திளைக்க உங்களை அனுமதிக்கும் ஒரு சிறந்த இடமிது. வேலூர் கோட்டையிலிருந்து பாலமதி மலைகளுக்கு மலையேற்றமும் மேற்கொள்ளலாம்.
சித்தூர் பேருந்து நிலையம், சுமார் 50 கி.மீ.
சென்னை சர்வதேச விமான நிலையம், சுமார் 138 கி.மீ.
காட்பாடி சந்திப்பு, சுமார் 16 கி.மீ.
அக்டோபர் - மார்ச் மாதங்களில் பாலமதி மலைகள் இனிமையான காலநிலையை அனுபவிக்கின்றன.