திராவிடக் கட்டிடக்கலையின் மகத்துவத்தைப் பறைசாற்றும் கோவில்களின் நீட்சி - அதுதான் தஞ்சாவூர். இருப்பினும் இந்த வரலாற்று நகரம் அதை விட அதிக முகங்களைக் கொண்டது.
இவ்விலக்கை அடைந்து, கண்களுக்கு ஒரு முழுமையான விருந்தளிக்கும் பசுமையான நெல் வயல்களின் அகண்ட வெளிகளைப் பற்றி ஆச்சரியப்படுங்கள். அப்போதுதான் உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் ஓவியங்களின் தனிச் சிறப்பு, சிற்பங்கள், கலை, உணவு, விருந்தோம்பல் - குறித்து வாழ்த்த வார்த்தைகளின்றி நீங்கள் ஸ்தம்பித்து போவீர்கள்.
கோவில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் என்று வரும்போது, தஞ்சாவூர் ஒரு தவிர்க்கமுடியாத இடமாகும். அவைகளில் பெரும்பாலானவை பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை அதிசயங்களாக இருக்கின்றன. அவை இன்றுவரை பொற்கால வரலாற்றின் பெருமையை எடுத்துச் செல்கின்றன.
இருப்பினும் தஞ்சாவூர் கோவில்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பிரகதீஸ்வரர் கோவில் தான். கங்கைகொண்ட சோழபுரம் கோவில் மற்றும் ஐராவஸ்தேஸ்வரர் கோவில் ஆகியவற்றுடன் 'பெரிய வாழும் சோழர் கோவில்களில்' ஒன்றாக கருதப்படும் பிரகதீஸ்வரர் கோவில் வளாகம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் ஒரு பகுதியாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் மராட்டியர்கள் உட்பட பல்வேறு வம்சங்களின் ஆட்சியின் கீழ் தஞ்சாவூர் இருந்துள்ளது, பின்னர் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.
ஒவ்வொரு ராஜ்யமும் அதன் அழியாத பாரம்பரியத்தை விட்டுச் சென்றது. அதை இன்று நகரத்தின் ஒவ்வொரு மூலையிலும் காணலாம். ஓவியங்கள், நடனம் மற்றும் இசை ஆகியவற்றில் செழுமையான தஞ்சாவூரை கலாச்சார உற்சாகத்தின் மைய இடமாக கருதலாம்.
புதிரானது மற்றும் புனிதமானது - தஞ்சாவூர் உங்களை காலச்சக்கரத்தில் பின்னோக்கி அழைத்துச் செல்லும் வல்லமை கொண்டது.
தஞ்சாவூர் பேருந்து நிலையம்.
கோயம்புத்தூர், சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை போன்ற முக்கிய நகரங்களில் இருந்து தஞ்சாவூருக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கமான அடிப்படையில் இயக்கப்படுகின்றன.
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம், சுமார் 61 கி.மீ. தொலைவில் உள்ளது
தஞ்சாவூர் சந்திப்பு நிலையம்.
திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம், சுமார் 55 கிமீ தொலைவில் உள்ளது.
தஞ்சாவூர் ஆண்டு முழுவதும் பிரபலமான இடமாகும். இருப்பினும், நீங்கள் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையைத் தவிர்க்க விரும்பினால், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பயணம் செய்வதற்கும் தங்குவதற்கும் ஏற்ற நேரமாக இருக்கும். வெப்பமண்டல காலநிலை கோடைக்காலத்தில் இருக்கும். இப்பகுதியில் வெப்பநிலை 35° செல்சியஸ் முதல் 40° செல்சியஸ் வரை இருக்கும்.