மத ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பேரெழிலான கட்டிடக்கலை அழகியலைக் கொண்ட இந்த தேவாலயம் மக்கள் அடிக்கடி பயணப்படும் இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. தந்தை கார்னியர் எனப்படும் பாதிரியாரால் சின்ன தேவாலயமாக கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்னால் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. லேடி டோலோர்ஸ் தேவாலயம் என்றும் பெயரளவில் வழங்கப்படும் இந்த தேவாலயம், பல்வேறு ஐரோப்பிய கட்டிடக்கலை நுட்பங்களையும் ஒருங்கிணைத்த ஓர் அம்சமாகும். 1916ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்ட காரணத்தினால் இந்த தேவாலயம் மிகவும் விசாலமான பரப்பளவை பெற்றுள்ளது.
1938 ல் பிஷப்பின் சிம்மாசனம் இங்கு நிறுவப்பட்டது. சிறிய கிறித்துவ திருக்கோவிலாக இருந்த இந்த புனித தலம் 1969 ஆம் ஆண்டு ஒரு தேவாலயமாக அங்கீகாரம் கொண்டு தரம் உயர்த்தப்பட்டது. இந்த இடத்தின் அழகிய சூழலும், மதரீதியான ஈர்ப்பும் மக்களை அதிக அளவில் இந்த தேவாலயம் நோக்கி படையெடுக்க வைக்கின்றன. வியாகுல மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த தேவாலயம், வியாகுல மாதா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்து ரோமாபுரி பாணி கட்டிடக்கலையில் அமையப்பெற்றுள்ள இரண்டு மணி கோபுரங்கள், இந்த தேவாலயத்தின் கட்டிடக்கலை மதிநுட்பத்திற்கு சான்று சேர்க்கின்றன.
மதுரை பிரதான பேருந்து நிலையம், சுமார் 3 கி.மீ.
மதுரை விமான நிலையம், சுமார் 11 கி.மீ.
மதுரை ரயில் நிலையம், சுமார் 3 கி.மீ.
அக்டோபர் - மார்ச்