உதகை அரசு தாவரவியல் பூங்காவில், இயற்கை ஆர்வலர்களுக்கு ஏராளமான ஆச்சரியங்கள் உள்ளன, இங்கு 600 வகையான தாவர இனங்கள் இங்கு பயிரிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பசுமையான புல்வெளிகளும், கவர்ச்சியான தாவர வகைகளும், தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையால் சிறப்பாகப் பராமரிக்கப்படுவதால், கண்ணுக்கு இன்பம் தருகின்றன. வலிமைமிக்க தொட்டபெட்டா சிகரத்தை இங்கிருந்தே பார்க்கலாம்.
இங்குள்ள சில கவர்ச்சியூட்டி இழுக்கிற அற்புதங்களில் கார்க் மரமும் ஒன்றாகும் ஆகும், இது இந்தியாவிலுள்ள அரிதான சில வகைகளில் இதுவும் ஒன்றாகும், காகிதப்பட்டை மரம், குரங்கு புதிர் மரம், கம்பீரமான 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவ மரத்தின் தண்டுடன் தோடா முண்ட் அல்லது தோடா மலை என்றழைக்கப்படும் இதையும் நீங்கள் இரசிக்கலாம்.
இது இத்தாலிய பாணியில், முதல் உலகப் போரின் இத்தாலிய போர் கைதிகளால் உருவாக்கப்பட்டது. இது பல வகையான வண்ண மயமான, வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் பல மலர்களும் மற்றும் நீர்வாழ் தாவர இனங்களும், வளர்க்கப்படும் லில்லி குளம்,இந்த தோட்டத்தை இன்னும் சிறபுடையதாக மாற்றுகிறது.
பல வகையான பூச்செடிகள் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்படும் இந்த இடத்தில், மலர் பிரியர்கள் தங்களுடைய புகலிடத்தைக் கண்டறிவது உறுதி. இந்த தோட்டத்தில் பலவிதமான கவர்ச்சியான தாவரங்கள் அடங்கிய கண்ணாடி வீடுகள் உள்ளன. பூக்கும் புதர்கள் மற்றும் தாவரங்களின் எண்ணற்ற வண்ணங்கள் சோர்வடைந்த உங்கள் கண்களுக்கு புத்துணர்ச்சி அளித்திடும்.
மற்றொரு சிறப்பம்சமாக பன்னம் தாவர வீடுகள் (ஃபெர்ன் ஹவுஸ்) 127 ஃபெர்ன் இனங்கள் மற்றும் பகட்டுநிறச் செடிகள் (ஆர்க்கிட்) ஆகும்.
இந்த மலர்ச்செடிகள் முழுவதுமாகப் பூத்துக் குலுங்குவதைப் பார்க்க ஒரு சிறந்த சந்தர்ப்பம், அரிய வகை தாவர இனங்கள் மற்றும் மலர்களின் கண்கொள்ளா காட்சியை, காட்சிப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நடைபெறும் மலர்க் கண்காட்சியே ஆகும்.
ரோஜா தோட்டம்
மிகவும் சமீபத்தில் உருவாக்கப்பட்ட புதிய தோட்டம் இது, 1995 ஆம் ஆண்டு நூற்றாண்டு மலர் விழாவை நினைவுகூரும் வகையில் நிறுவப்பட்ட கவர்ச்சியான ரோஜா தோட்டம் இது. இந்த தோட்டத்தில் சுமார் முன்னூறு வகையான கலப்பின தேயிலை ரோஜாக்கள், புளோரிபூண்டா ( கொத்து கொத்தாக பூக்கும் ரோஸ்) மற்றும் பாலியந்தா ரோஜாக்கள் உள்ளன.
ரோஸ் கார்டன் எல்க் மலையின் சரிவுகளில் அமைந்துள்ளது, மேலும் இது நிலா மேடம் என்றழைக்கப்படும் ஒரு காட்சி முனையை கொண்டுள்ளது, இது முழு பூங்காவின் முழுமையான காட்சியை வழங்குகிறது. பூங்காவில் இயற்கையான மலர் கம்பளங்கள், இயற்கை குளங்கள், 2241 வகைகளைச் சேர்ந்த சுமார் 20,000 தாவரங்கள் மற்றும் ரோஜாக்களின் கவர்ச்சியான தொகுப்புகள் உள்ளன.
2006 ஆம் ஆண்டில், ரோஸ் கார்டன் சர்வதேச ரோஸ் சங்கத்தின் தெற்காசியாவின் சிறந்த ரோஜா தோட்டத்திற்கான சிறந்த விருதைப் பெற்றது.
உதகமண்டலம் மத்திய பேருந்து நிலையம், 3 கிமீ தொலைவில்
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், சுமார் 88 கி.மீ. தொலைவில் உள்ளது.
கோயம்புத்தூர் இரயில் நிலையம், சுமார் 87 கி.மீ. தொலைவில் உள்ளது
ஆண்டின் எந்த நேரத்திலும் ஊட்டிக்கு சென்று சுற்றிப் பார்க்க முடியும் என்றாலும், மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட கோடை மாதங்கள்தான் சிறந்தது.