முக்கூர்த்தி மலை உயரத்திலிருந்து உருவாகும் பைகாரா நதி நீலகிரியின் மூடுபனி உயரங்களைத் துண்டித்து, பசுமையான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்குச் செல்கிறது, ஊட்டியில் சில அழகிய காட்சிகளை உருவாக்குகிறது. ஒரு புனித நதி என்று உள்ளூர் மக்களால்போற்றப்படடுகிறது. கால்தடம் பதியாத உன்னத பைகாராவின் நிலப்பரப்பு, அமைதியைத் தேடும் ஒரு ஆத்மாவுக்கு மயக்கும் அனுபவத்தை அளிக்கிறது. செங்குத்தான சரிவுகளில் பயணிக்கும்போது, பைக்காரா அழகான நீர்வீழ்ச்சியாக மாறுகிறது. பைக்காரா நீர்வீழ்ச்சியின் இனிமையான தாலாட்டு மற்றும் ஆற்றின் மீதிறங்கும் குளிர்ந்த மூடுபனி ஆகியவற்றால் வளப்படுத்தப்பட்ட சுற்றுபுறம், மலையேற்றம் மற்றும் முகாம்களுக்கு ஏற்ற இடமாக அமைகிறது. நகர்ப்புற வாழ்க்கையின் சோர்வு மற்றும் இரைச்சலிருந்து விடுவிக்கப்பட்டு புத்துணர்ச்சியடைய, வார இறுதி விடுமுறை நாட்களில் பைகாரா உங்களை அழைக்கின்றது.
நீலகிரியின் மென்மையான சரிவுகளில் நுழையும் போது, பச்சை மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் பின்னணியில் அழகிய நிலப்பரப்புகளை பைக்காரா கொண்டுள்ளது. புல் மலை, நீலகிரியில் வாழும் திராவிட இனத்தவரான தோடவர்களின் தாயகமாகும். பைக்காரா, தோடா குக்கிராமம் மற்றும் அவர்களின் பாரம்பரிய குடியிருப்புகளின் பின்னணியில், மலையேற்றம் செய்பவர்களுக்கு ஒரு அழகிய இயற்கைக்காட்சியை வழங்குகிறது.
நீர்வீழ்ச்சிகளிலிருந்து 2 கிமீ தொலைவில், பைகாராவின் ஓடும் நீர், ஒரு அமைதியான நீல நீர்த்தேக்க ஏரியாக மாறுகிறது. நீலகிரியின் பச்சை மூடுபனி மலைகளின் பின்னணியில் உயரமான தேவதாரு மரங்களின் எல்லையில் முந்தும் பைகாரா நீரின் காட்சி, பார்ப்பதற்கு ஒரு அற்புதமான காட்சியாகும். குறைபாடற்ற காட்சிகளும், ஏரியிலிருந்து எப்போதும் வீசும் மூடுபனி காற்றும் சுற்றுப்புறத்தை காதல் உணர்வால் நிரப்புகின்றன, இது ஒரு பிரபலமான தேனிலவு இடமாக அமைகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் படகு இல்லம் மூலம் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ள. இந்த ஏரி ஊட்டியில் சிறந்த படகு சவாரி வசதிகளைக் கொண்டுள்ளது. அமைதியான சூழல், வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் படகு சவாரி வசதிகளுடன், உங்கள் குடும்பத்துடன் ஒரு நாளைக் கழிக்க ஊட்டியில் பைகாரா ஏரி சரியான இடமாகும்.
உதகமண்டலம், சுமார் 22 கி.மீ. தொலைவில்
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், சுமார் 108 கி.மீ. தொலைவில்
கோயம்புத்தூர், சுமார் 108 கி.மீ. தொலைவில்
மார்ச் முதல் ஜூன் வரை