கம்பீரமான உயரமான தைல (யூகலிப்டஸ்) மரங்களாலும், கரையோர பச்சைப் புதர்களாலும் சூழப்பட்ட உதகை ஏரி நீலகிரி மாவட்டத்தில், மனதை ஈர்க்கக்கூடிய இடமாகும். 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி முதலில் மீன்பிடிப்பிற்காக கட்டப்பட்டது. பின்னர் 1973-ல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இதனைக் கையகப்படுத்தியபோது சுற்றுலாப் பூங்காவாக மாற்றப்பட்டது.
உதகை ஏரியில் சுற்றுலாப் பயணிகள் அனுபவிப்பதற்கு பல வேடிக்கையான செயல்கள் உள்ளன. ஏரியைச் சுற்றி பயணம் செல்ல சைக்கிள்கள் வாடகைக்கு உண்டு. படகு சவாரி முக்கியமான கவர்ச்சியாகும். நீர்நிலைகள் வழியாக அமைதியான சவாரி செய்வது ஒரு கவர்ச்சியான பொழுதுபோக்காக உள்ளது, ஏனெனில் இது ஏரியின் முழு அழகையும் ஒருவருக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. துடுப்பு படகு-, மோட்டார் படகு- மற்றும் படகோட்டுதல் படகு சேவைகளும் இங்கு உள்ளன. சவாரி சுற்றிலும் அமைதியான பசுமை மற்றும் தொலைதூர மலைகளின் காட்சியை வழங்குகிறது இந்த ஏரி.
மே மாதம் இங்கு நடத்தப்படும் கோடை விழாவின் ஒரு பகுதியாக படகு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அருகில் ஒரு தோட்டம், ஒரு சிறு ரயில் மற்றும் ஒரு பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. கேளிக்கை பூங்காவில் பேய் வீடு, கண்ணாடி வீடு மற்றும் குதிரை சவாரி போன்ற வேடிக்கையான செயல்பாடுகள் உள்ளன, மேலும் குழந்தைகளுக்கு உற்சாகமான அனுபவத்தை இவைகள் வழங்குகிறது.
ஊட்டி பல்வேறு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அண்டை மாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் செல்லலாம் அல்லது வளைந்த சாலைகளில் ஓட்டலாம், இது ஒரு தனி அனுபவமாகும்.
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், சுமார் 88 கி.மீ. தொலைவில் உள்ளது.
கோயம்புத்தூர் இரயில் நிலையம், சுமார் 87 கி.மீ. தொலைவில் உள்ளது
ஊட்டிக்கு செல்ல மற்றொரு வழி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக பொம்மை ரயிலில் செல்வது.