இலவச எண்: 1800-425-31111

காற்றுடன் கூடிய குளிர்ந்த வானிலை. பொருட்கள் வாங்குதல். இயற்கையை ரசிப்பது. சாகசங்கள்.

பார்ப்பதற்கும், உணர்வதற்கும், அனுபவிக்கவும் ஏதுவான பச்சை கம்பளியில் படர்ந்து கிடக்கும் ஈரமலைத் தொடர்களின் சங்கிலிதான் உதகை. இது வெறும் பார்வையாளர்களின் சொர்க்கம் மட்டுமல்ல. ஒவ்வொரு பயணிக்கும் மனதளவில் தன்னுடைய ஒரு பகுதியை உதகை விட்டுச் செல்கிறது. இந்தியாவிலேயே மிக அழகான மலைப்பிரதேச ஸ்தலங்களில் ஒன்றான உதகை,தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பொதிந்துள்ள ஒரு வைரம். அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோடை விடுமுறை பிரதேசமாக இருந்த ஊட்டி இன்று தமிழகத்தின் மிகமுக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. 

ஆண்டுமுழுக்க குளிர்ந்த முதல் மிதமான வானிலையைக் கொண்டிருக்கும் உதகை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து ஏராளமான பயணிகளை ஈர்க்கிறது. உதகையின் உச்சிநோக்கி பயணப்படும் மக்களுக்கு மலைகளின் பேரெழிலையும் தாண்டி ஒரு உன்னத அனுபவித்தை தருகிறது.ஏரிகள், தோட்டங்கள், பூங்காக்கள், மலையுச்சிகள்,நீர்வீழ்ச்சிகள் இவைமட்டுமின்றி தங்குவதற்கு ஏதான பல இடங்கள் நிறைந்ததால் உதகை இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து என்று செல்லமாக அழைக்கப் படுகின்றது. இயற்கையின் பேரழகை, கையில் ஒரு கோப்பை எஸ்டேட் தேனீர் பருகிக்கொண்டே நீங்கள் ரசிக்க வேண்டும் என்றால் நீங்கள் உதகைக்கு வந்தே ஆகவேண்டும். இதுமட்டுமின்றி நீலகிரி உயிர்க்கோளமானது பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்குகள் நிறைந்திருக்கும் ஒரு பல்லுயிர் புதையல். இங்கு அடர்ந்த வனாந்திரத்தின் இடையே நீங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத பல அற்புத நினைவுகளை பெறமுடியும்.

இதுமட்டுமின்றி நீலகிரியின் கொள்ளை அழகை சுற்றிக்காட்ட, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலேயே செயல்பாட்டில் இருக்கும் ஒரே மலைரயிலான மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான மலைரயிலில் பயணிப்பதை நீங்கள் தவறவிடவே கூடாது.

OOTY
WEATHER
Ooty Weather
23.6°C
Patchy rain nearby

சிறந்த ஈர்ப்புகள்

அரசு தாவரவியல் பூங்கா, உதகமண்டலம்

உதகையிலுள்ள அரசு தாவரவியல் பூங்கா, 55 ஏக்கர் பரப்பளவில், பல ஆண்டுகளாக பார்வையாளர்களை கவர்ந்து வரும் சுற்றுலா தளமாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2400 - 2500 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த தாவரவியல் பூங்கா 1897 ஆம் ஆண்டில் ட்வீடேலின் மார்க்விஸ் என்பவரால் வில்லியம் கிரஹாம் மெக்ஐவர் என்பவரைக் வடிவமைப்பு கலைஞராக கொண்டு நிறுவப்பட்டது

மேலும் வாசிக்க

உதகமண்டலம் ஏரி

உதகை படகு இல்லம் என்றும் அழைக்கப்படும் அழகிய உதகை ஏரி, அமைதியான பசுமைக்கு மத்தியில் அமைந்துள்ள சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகும். உதகை ஏரி என்பது 1824 ஆம் ஆண்டு ஜான் சல்லிவன் என்பவரால் கட்டப்பட்ட செயற்கையான ஏரியாகும்.

மேலும் வாசிக்க

பைன் வன வருகை

ஊட்டி நகர மையத்திலிருந்து வெறும் 15 நிமிட பயணத்தில் ஊட்டியின் புகழ்பெற்ற பைன் மரக் காடுகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும். இந்த இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதிகள், பனி மூடுபனியால் மறைக்கப்பட்டு, அனைத்து பயணிகளுக்கும் மகிழ்ச்சிகரமான அனுபவத்தை அளிக்கிறது.

மேலும் வாசிக்க

மான் பூங்கா, உதகமண்டலம்

உதகமண்டலத்தில்லுள்ள மான் பூங்கா, இந்த அமைதியான உயிரினங்களை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களிலே காண, இது சரியான இடமாகும்.வனவிலங்கு பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான இந்த இடம்,உதகை ஏரியின் கரையில் அமைந்துள்ள மற்றொரு அழகாகும்.

மேலும் வாசிக்க

பனிச்சரிவு ஏரி (அவலாஞ்சி)

மூடுபனி மலைகளின் மீது ஒரு கனவு போன்று சூரிய உதயம் நடக்கிறது, நாள் முழுவதும் செழிப்பான காடுகளின் வழியாக நடைபயணம் செய்து, அமைதியான ஏரியின் நீல நீரில் மீன்பிடிப்பதை கற்பனை செய்து பாருங்கள். உதகமண்டலத்தில் உள்ள பனிச்சரிவு (அவலாஞ்சி) ஏரி இயற்கையின் அழகில் தொலைந்து போக விரும்பும் பயணிகளுக்கு அதையும் இன்னும் பலவற்றையும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க

தொட்டபெட்டா, உதகமண்டலம்

உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா,நீலகிரிக்கு மேலே உள்ள மேகங்களை கொஞ்சிக் கொண்டிருக்கிறது. தொட்டபெட்ட சிகரத்திற்கு செல்லும், உதகமண்டலத்தின் ஈடு இணையற்ற காட்சிமுனையோடு கூடிய கண்கவர் பாதையானது வெகுமதியான மலையேற்ற அனுபவமாக உங்களுக்கு அமையும். விடுமுறை தினங்களை,குடும்பத்துடன் அனுபவிக்க இது ஏற்ற இடம்.

மேலும் வாசிக்க

கேத்தி பள்ளத்தாக்கு

நீலகிரி மலைகளின் விளிம்பில், முடிவில்லாத பச்சைக் கடல் போல அடிவானத்தில் பரந்து விரிந்து கிடக்கிறது கேத்தி பள்ளத்தாக்கு. தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கேத்தி பள்ளத்தாக்குக்கு செல்லும் பயணிகளுக்கு 14 க்கும் மேற்பட்ட விசித்திரமான குக்கிராமங்களின் அழகிய காட்சி காத்திருக்கிறது.

மேலும் வாசிக்க

மேல் பவானி ஏரி

மேல் பவானி ஏரி, நீலகிரியின் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும். இது பவானி ஆற்றின் அணையினால், ஒரு அழகிய நீல நீர்த்தேக்க ஏரியாக மாறியது.குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் இயற்கையோடு ஒரு நாள் மகிழ்வதற்கு, ஒரு சரியான இடமாக இது உள்ளது.

மேலும் வாசிக்க

எமரால்டு ஏரி

நீலகிரியின் வலிமைமிக்க சிகரங்களும் மற்றும் தேயிலைத் தோட்டங்களின் சிறுகுண்றுகளாளும்,அழகான எமரால்டு ஏரியை, இன்னும் அழகு படுத்திக் காட்டுகிறது. எமரால்டு ஏரியும் அதன் நிலப்பரப்பும், ஒரு விசித்திரக் கதையை நினைவூட்டும்.பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் ஒரு நாளைக் கழிக்க ஏற்ற இடமாக அமைகிறது இது.

மேலும் வாசிக்க

புனித ஸ்டீபன் தேவாலயம்

பழமையான மற்றும் குறைபாடற்ற கட்டிடக்கலை அழகு கொண்ட இந்த தேவாலயம், உதகையின் குறிப்பிடத்தக்க அடையாளமாகவும், மலை வாசஸ்தலங்களின் ராணியின் நீண்ட வரலாற்றின் சாளரமாகவும் இருக்கிறது. அழகிய வண்ணம் படிந்த கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் பழங்கால அம்சங்களுடன் அலங்கரிக்கப்பட்ட இந்த தேவாலயம், நீலகிரி ராணியின் கிரீடத்தில் இருக்கும் ஒரு வைரமாகும்.

மேலும் வாசிக்க

படப்பிடுப்பு மையம்

நீங்கள் எப்போதாவது விசித்திரக் கதை போன்ற அமைப்புகளைப் பார்வையிடவும், உங்களுக்குப் பிடித்த திரைப்படங்களிலிருந்து சின்னச் சின்ன காட்சிகளை மீண்டும் உருவாக்கவும் விரும்புகிறீர்களா? உதகையிலுள்ள படப்பிடிப்பு மையத்திற்குச் செல்லுங்கள், அங்கு முடிவில்லாத பச்சை புல்வெளிகள் மற்றும் மெல்லிய வெள்ளை மூடுபனியில் மறைந்திருக்கும் மலைகள் ஆகியவற்றின் அழகிய காட்சி உங்களுக்குகாக காத்திருக்கிறது.

மேலும் வாசிக்க

செய்ய வேண்டியவை

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

Hotel Tamilnadu - Ooty I

TTDC, Upper Bazar

Youth Hostel - Ooty

171, Church Hill Road, Pudumund

தமிழ்நாட்டின் சுவைகள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...