கடந்த காலத்தில் ஒரு அமைதியான துறைமுக நகரமாக இருந்து இன்று தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்றாக நாகப்பட்டினம் வெகுதூரம் தனது பயணத்தை தொடர்ந்து வந்து விட்டது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இப்பகுதியில் பார்க்கவும் அனுபவிக்கவும் நிறைய இருக்கிறது. அழகிய கடற்கரைகள், வழிபாட்டுத் தலங்கள், பிக்னிக் இடங்கள் என நாகப்பட்டினம் சகலமும் கொண்டுள்ளது.
தவிர, வேளாங்கண்ணி மற்றும் சிக்கல் போன்ற அருகிலுள்ள பல்வேறு வழிபாட்டு இடங்களுக்குச் செல்லும் புனித சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு மையத்தளமாகவும் செயல்படுகிறது. நீங்கள் கடற்கரைகளை விரும்பினால், நாகப்பட்டினம் தவறாமல் பார்க்க வேண்டிய ஓர் இடமாகும். இதன் சூரியன் முத்தமிட்ட மணல்பரப்புகள் ஒரு அற்புதமான விடுமுறைக்கு சாலச்சிறந்தது.
நீங்கள் சூரியக் குளியல் செய்யலாம், அலைகளுடன் விளையாடலாம் மற்றும் இந்தக் கரையில் பொழுது போக்கலாம். இருப்பினும், நாகப்பட்டினத்தை பயணிகளின் விருப்ப ஸ்தலமாக மாற்றும் ஒரே காரணி கடற்கரை மட்டும் அல்ல. இந்த நகரம் செழுமையான கலாச்சார முக்கியத்துவத்துடன் ஒரு வளமான வரலாற்றையும் ஒருங்கே கொண்டுள்ளது.
இந்த நகரம் அதன் மதங்களுக்கு இடையிலான விழாக்களுக்கு பிரபலமானது. பல்வேறு மதப் பின்னணிகளைக் கொண்ட மக்கள் இங்கு நிம்மதியாக வாழ்கின்றனர். இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து பிரார்த்தனை செய்யும் ஆலயம் கூட உள்ளது. நகரத்தை ஒரு உயிரோட்டமான அழகியலாக மாற்றும் வலுவான பௌத்த தாக்கங்களையும் நீங்கள் காண்பீர்கள். சோழர்கள் காலத்தில் நாகப்பட்டினம் ஒரு முக்கியமான துறைமுக நகரமாக இருந்தது.
வரலாற்றின் போக்கில், டச்சு மற்றும் ஆங்கிலேயர் போன்ற காலனித்துவ சக்திகள் துறைமுக நகரத்தை உடைமையாக வைத்திருந்தனர் மற்றும் ஒரு வளமான பாரம்பரியத்தை விட்டுச்சென்றனர், அதன் நினைவுச்சின்னங்களை இன்றுவரை நாம் கண்டு அனுபவிக்கிறோம். அந்தக் காலத்தில் இப்பகுதியில் கட்டப்பட்ட சில தேவாலயங்கள் இன்று முக்கியமான யாத்திரை மற்றும் சுற்றுலாத் தலங்களாக உள்ளன.
சுருக்கமாக, இங்கு அனைத்து வகையான பயணிகளுக்கும் ஒரு இலக்கு அமைந்து உள்ளது.
நாகப்பட்டினம்
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம், சுமார் 146 கி.மீ. தொலைவில் உள்ளது
நாகப்பட்டினம் சந்திப்பு நிலையம்
அக்டோபர் முதல் பிப்ரவரி வரை