வார்த்தைகளில் சொல்ல முடியாத சில அனுபவங்கள் உள்ளன.அதை மக்கள் வாழ வேண்டும், உணர வேண்டும், அனுபவிக்க வேண்டும். கிருஷ்ணகிரியில் இருக்கும்போது, அந்த உணர்வு என்னவென்று உங்களுக்குத் தெரியும்.
கலாச்சார அதிர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வரலாற்று நிலம், கிருஷ்ணகிரி. அதன் அற்புதமான இயற்கை காட்சிகள், கோட்டைகள், ஆறுகள், கோவில்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் யாவரும் மதிமயங்கும் ரம்மியமான பல இடங்களுக்கும் பிரபலமானது.
கிருஷ்ணகிரி என்ற வார்த்தை கருப்பு மலை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இந்த இடம் அதன் கருப்பு கிரானைட் படிவுகளிலிருந்து இப்பெயர் பெறுகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இந்த சுற்றுப்புறங்களில் இருந்து கார்பன் டேட்டிங் முறை மூலம் பாறை செதுக்கல்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த நகரம் பழங்கால யுகத்திலிருந்தே இருந்ததாக நம்பப்படுகிறது.
இந்த நகரம் சேரர்கள், சோழர்கள், விஜயநகர் மற்றும் பல்லவர்கள் உட்பட பல வம்சங்களால் ஆளப்பட்டது.
பெரும் விவசாய நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற கிருஷ்ணகிரி அதன் மாம்பழங்களுக்கு உலகப்புகழ் பெற்றது, இதனால் அது சம்பாதித்த மகுடம் ‘இந்தியாவின் மாம்பழத் தலைநகரம்’ என்ற புனைப்பெயர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒவ்வொரு ஆண்டும் 300,000 டன் மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது, இதனால் மாம்பழ விவசாயம், பதப்படுத்துதல் மற்றும் பழச்சாறுகளை தயாரித்தல் இப்பகுதியில் ஒரு பெரிய தொழிலாக இருக்கின்றது.
கிருஷ்ணகிரியில் எல்லோருக்கும் ஏதோ ஒன்று காண கிடைக்கின்றது. வரலாற்று ஆர்வலர்கள் கிருஷ்ணகிரி கோட்டையின் பண்டைய பேரழகை அனுபவிக்க முடியும். யாத்ரீகர்களுக்கு, ஆன்மீக அனுபவத்தை உணரவும், ரசிக்கவும் பல அற்புதமான கோயில்கள் உள்ளன. இயற்கை ஆர்வலர்கள் தளி பள்ளத்தாக்கு மற்றும் மலைத்தொடரின் மெய்சிலிர்க்க வைக்கும் அழகை உடனடியாக கண்டு மகிழுவார்கள். கிருஷ்ணகிரி அணையும் அதன் சுற்றுப்புறமும் ஒரு சிறந்த விடுமுறை ஸ்தலமாக அமைகிறது.
கிருஷ்ணகிரி
பெங்களூரு சர்வதேச விமான நிலையம், சுமார் 90 கி.மீ. தொலைவில் மற்றும்
சேலம் விமான நிலையம், சுமார் 96 கி.மீ.
ஜோலார்பேட்டை சந்திப்பு, சுமார் 44 கிமீ தொலைவில்.
October to March