உங்களுக்கு பிடித்த நட்சத்திரம் அல்லது பிரபலத்தின் அருகில் செல்ஃபி எடுக்க உங்களுக்கு எப்போதாவது வாய்ப்பு கிடைத்துள்ளதா? சரி, உங்களிடம் அந்த வாய்ப்பு இல்லையென்றால், இதோ இன்னொரு சிறந்த மாற்று இருக்கின்றது. அவர்களின் உயிர்மிகு மெழுகு சிலைக்கு அருகில் நின்று தற்படம்(செல்ஃபீ ) எடுங்கள். உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்றால்
கன்னியாகுமரி, தேசிய மற்றும் சர்வதேச பிரபலங்களின் தொகுப்பைக் காண்பிக்கும் புகழ்பெற்ற மெழுகு அருங்காட்சியகத்திற்கு வரவேற்கிறோம்.
கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான இந்த அருங்காட்சியகம் மாயாபுரி அதிசய மெழுகு அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது.
கன்னியாகுமரியில் உள்ள பேவாட்ச் கேளிக்கை பூங்காவிற்குள் அமைந்துள்ள இந்த மெழுகு அருங்காட்சியகம் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பல்வேறு பெரிய மெழுகு அருங்காட்சியகங்களுடன் ஒப்பிடும் போது, கன்னியாகுமரி மெழுகு அருங்காட்சியகம் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் அளவுக்கு அதிகமான கண்காட்சிகளைக் கொண்டதாக இல்லை. என்றாலும் குழந்தைகள் குறிப்பாக அருங்காட்சியகத்தை விரும்புவார்கள். அவர்களின் அன்பான நட்சத்திரங்களின் உருவங்களை நெருக்கமாகப் பார்க்கும் வாய்ப்பு இங்கு அவர்களுக்கு வாய்க்கப் பெறும். வரலாற்று பிரமுகர்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு பிரமுகர்கள் போன்றோர் இங்குள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மகாத்மா காந்தி, அன்னை தெரசா, இந்திரா காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர். மன்மோகன் சிங், அமிதாப் பச்சன், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், ஷாருக் கான், ஜாக்கி சான் போன்ற பிரபலங்கள் அந்த மண்டபத்தில் உள்ளனர்.
இந்த அருங்காட்சியகம் 2005 இல் நிறுவப்பட்டது. மேலும் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு மற்றும் உற்சாக ஆதாரமாக உள்ளது. அருங்காட்சியக வளாகத்தில் 3டி ஓவியங்களும் உள்ளன. அவை மையத்தைப் பார்வையிடுபவர்களுக்கு அதிக ஈர்ப்பைக் கூட்டுகின்றன. கன்னியாகுமரிக்கு வருகை தருகின்ற உங்கள் பயணத்தில் இந்த அற்புதமான இடத்திற்கு தவறாமல் செல்லவும்.
கன்னியாகுமரி பேருந்து நிலையம்
திருவனந்தபுரம் விமான நிலையம், சுமார் 88.6 கி.மீ
கன்னியாகுமரி பேருந்து நிலையம், சுமார் 1.3 கி.மீ
நவம்பர் - மார்ச்