உதகமண்டலத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம், ஊட்டி-மைசூர் சாலையில் அமைந்துள்ளது, உதகை பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் பழங்கால பாரம்பரியத்தை ஒரு கண்ணோட்டமாக இது வழங்குகிறது. இந்த அருங்காட்சியகம் உள்ளூர் மக்களால் கல் வீடு அல்லது கல் பங்களா என்றும் அழைக்கப்படுகிறது.
மாவட்டத்தைப் பற்றிய சுற்றுச்சூழல் உண்மைகள், பதப்படுத்தப்பட்ட விலங்கின் உருவங்கள் (டாக்ஸிடெர்மி) கலைப்பொருட்கள், தமிழ்நாட்டின் கலை மற்றும் கைவினைப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புவியியல் பொருட்கள், இசைக்கருவிகள் மற்றும் பழங்கால சிலைகளுக்கு தனி அறைகள் உள்ளன. உதகையின் பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் ஒரு கண்ணோடத்தை வழங்கும் பழங்குடிப் பொருட்களின் ஈர்க்கக்கூடிய தொகுப்பும் உள்ளது. உதகமண்டலத்தில் கிட்டத்தட்ட 18 பழங்குடியினர் வசிக்கின்றனர் - தோடா பழங்குடியினர் மிகவும் பிரபலமானவர்கள். ஆயர் சமூக பழங்குடியினர் பயன்படுத்திய கைவினைப் பொருட்கள், சிற்பங்கள், வீடுகள், நகைகள், ஆடை பாணி மற்றும் விவசாயக் கருவிகள் ஆகியவற்றின் விரிவான தொகுப்பு இப்பகுதியின் சுற்றுச்சூழல் விவரங்களுடன் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளி மற்றும் இரண்டாவது சனிக்கிழமைகள் தவிர அனைத்து நாட்களிலும் அருங்காட்சியகம் திறந்திருக்கும்.
உதகமண்டலம் மத்திய பேருந்து நிலையம், 3 கி.மீ. தொலைவில்
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், சுமார் 86 கி.மீ. தொலைவில் உள்ளது.
கோயம்புத்தூர் இரயில் நிலையம், சுமார் 86 கி.மீ. தொலைவில் உள்ளது
ஆண்டின் எந்த நேரத்திலும் ஊட்டிக்கு சென்று சுற்றிப் பார்க்க முடியும் என்றாலும், மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட கோடை மாதங்கள்தான் சிறந்தது.