மதுரைக்கும் காந்தியடிகளுக்கும் துண்டிக்கப்பட முடியாத ஒரு பிணைப்பு இருக்கின்றது. தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தின் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் அத்தியாயமான மீனாட்சி திருக்கோவிலின் உள்ளே ஹரிஜன மக்களை அனுமதிக்கும் படலம் மதுரையில்தான் நிகழ்ந்தது. அருங்காட்சியகத்தை தன்னகத்தே கொண்டுள்ள அரண்மனையானது, கிறிஸ்துவுக்குப் பிறகு 1670ம் ஆண்டு காலகட்டத்தில் நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டது. சேவா கிராமத்தில் உள்ள ஒரு குடிசையின் மாதிரி இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய கட்டிடத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றை புரட்டும் பொழுது காந்தியடிகள் எழுதிய பழைய கடிதங்களையும் பல ஆவணக்குறும்படங்களின் தொகுப்பையும் நாம் காண முடியும். பிரதான கட்டிடத்தின் தெற்கே அமைந்துள்ள ஒரு திறந்தவெளி திரையரங்கமானது, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு தாயகமாக திகழ்கிறது. இங்கு நடக்கும் பல்வேறு திருவிழாக்களில் பங்கேற்கும் விதமாக உங்களின் பயணத்தை திட்டமிடுவது சாலச் சிறந்தது. ஒவ்வொரு வருடமும் காந்தி ஜெயந்தியின் பொழுது ஐந்து நாட்கள் நடக்கும் ஒரு விழா பிரசித்தி பெற்றது. அருங்காட்சியகத்தில் ஒரு பிரத்தியேகப் பகுதி காந்தியின் வாழ்க்கையின் சிறப்பான சில அத்தியாயங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. "இந்தியா சுதந்திரத்திற்காக போராடுகிறது" என்ற ஒரு குறிப்பிட்ட பகுதியில், சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் ஆணி வேர்களை சில அழகான படங்கள் & ஓவியங்கள் விவரிக்கின்றன. இந்த ஒரு பகுதிக்காக இப்பெரும் அரண்மனையின் தர்பார் மண்டபமானது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காந்தியின் வாழ்க்கையை அவரது குழந்தை பருவத்தில் இருந்து பிரதிபலிக்கும் பல்வேறு அரிய புகைப்படங்களைக் கொண்ட ஒரு புகைப்பட சுயசரிதையும் இங்கு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
காந்தியை குறித்த எழுத்துக்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களும் இங்கு பார்வையாளர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தின் மூன்றாவது பகுதி ஆனது, காந்தி தனது வாழ்நாளில் பயன்படுத்திய நூறு அன்றாட சாதனங்களை காட்சிக்கு வைத்துள்ளது.
இப்பொருட்களில் மிக முக்கியமானவையாக கருதப்படுபவை- ஹிட்லருக்கு காந்தி எழுதிய ஒரு கடிதமும் அவர் படுகொலை செய்யப்பட்ட தினத்தின் அன்று அவர் அணிந்திருந்த ரத்தம் தோய்ந்த ஒரு துணியும் அடங்கும்.
மதுரை பிரதான பேருந்து நிலையம், சுமார் 3 கி.மீ
மதுரை விமான நிலையம், சுமார் 19 கி.மீ.
மதுரை ரயில் நிலையம், சுமார் 4 கி.மீ.
அக்டோபர் - மார்ச்