இலவச எண்: 1800-425-31111

எமரால்டு ஏரி

நீலகிரியின் வலிமைமிக்க சிகரங்களும் மற்றும் தேயிலைத் தோட்டங்களின் சிறுகுண்றுகளாளும்,அழகான எமரால்டு ஏரியை, இன்னும் அழகு படுத்திக் காட்டுகிறது. எமரால்டு ஏரியும் அதன் நிலப்பரப்பும், ஒரு விசித்திரக் கதையை நினைவூட்டும்.பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் ஒரு நாளைக் கழிக்க ஏற்ற இடமாக அமைகிறது இது.

காடுகள் மற்றும் ஜேட் தேயிலை தோட்டங்களின் செழுமையை அழகாக பிரதிபலிக்ககிறது எமரால்டு ஏரி . எண்ணற்ற நீர்க்கோழிகள் மற்றும் நீர்வாழ் விலங்குகளின் தாயகமான எமரால்டு ஏரி உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் அழகிய நிலப்பரப்பை உங்களுக்கு வழங்குகிறது.  ஏரியின் கரையில் ஓய்வெடுங்கள், பறவைகளின் பாடல்களைக் கேட்டு, அவை தண்ணீரில் மூழ்குவதைப் பார்த்து, சோர்வடைந்த உங்கள் மனதிற்கு தேவையான புத்துணர்ச்சியை பெற்றுக்கொள்ளுங்கள். இங்கே, ஏரியின் கரையில், உங்கள் கண்களையும் மனதையும் சுதந்திரமாக அமைத்து, இந்த கன்னி நிலப்பரப்பின் காட்டு அழகில் தொலைந்து போய்விடுங்கள். 

நீலகிரியின் உயர்ந்தச் சிகரங்கள் மற்றும் மூடுபனி தேயிலைத் தோட்டங்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏரி, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை அனுபவிக்க ஏற்ற இடமாகும்.  நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒரு நாள் ஓய்வெடுக்க ஏற்றதாக இருக்கும் எமரால்டு ஏரி, உங்களை ஒரு அழகிய நிலப்பரப்புடனும், வனாந்தரத்தின் அமைதியுடனும் நடத்தும், அங்கு நீங்கள் நாள் முழுவதும் இயற்கையுடன் ஒன்றாக இருக்க முடியும்.  அதன் திறந்த வானம், செழுமையான பசுமை, மூடுபனி தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அமைதியான நீல நீர் ஆகியவற்றுடன் இருக்கும் எமரால்டு ஏரி, புகைப்படக் கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சொர்க்கமாகும்.  விடியற்காலை மற்றும் அந்தி வேளையில் வானத்தில் வண்ணங்களின் வெடிப்பு முழு நிலப்பரப்பையும் ஒரு அடிமன வெளிப்பாட்டியம்(சர்ரியலிசம்) ஓவியமாக மாற்றுகிறது. மூடுபனி நிறைந்த பச்சை மலைகளுக்குப் பின்னால் சிவப்பு சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் காட்சியை அனுபவிக்க ஏரிக்குச் செல்லுங்கள்.  எப்போதும் இருக்கும் மூடுபனி, சுற்றியுள்ள தேயிலை தோட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து அலைப்பாய்ந்து, நிலப்பரப்புக்கு ஒரு விசித்திரமான அழகை சேர்க்கிறது.

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...