இலவச எண்: 1800-425-31111

தொட்டபெட்டா, உதகமண்டலம்

உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா,நீலகிரிக்கு மேலே உள்ள மேகங்களை கொஞ்சிக் கொண்டிருக்கிறது. தொட்டபெட்ட சிகரத்திற்கு செல்லும், உதகமண்டலத்தின் ஈடு இணையற்ற காட்சிமுனையோடு கூடிய கண்கவர் பாதையானது வெகுமதியான மலையேற்ற அனுபவமாக உங்களுக்கு அமையும். விடுமுறை தினங்களை,குடும்பத்துடன் அனுபவிக்க இது ஏற்ற இடம்.

2,637 மீட்டர் உயரம் கொண்ட உதகையின் மூடுபனி பச்சை பள்ளத்தாக்குகளுக்கு மேலே உயர்ந்த தொட்டபெட்டா," பெரிய மலை " என்ற தனித்துவமான அடையாளத்தோடு நிற்கிறது.  கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே சிறப்பாக காட்சியளிக்கும் தொட்டபெட்டா சிகரம், நீலகிரியின் இயற்கை அழகை முழுமையாக ரசிக்க சரியான இடமாகும்.  நீலகிரியின் மூடுபனி நிறைந்த பச்சை மலைகளால் நிறைந்திருக்கும் உதகையின் நிகரற்ற அழகை, ஒரு பறவை பார்பது போல் நீங்களும் பார்க்க உதவும் தொட்டபெட்டா சிகரம், ஏறக்குறைய 3 கிலோமீட்டர் தூரம் ஒரு சவாலான  மலையேற்றமாகும்.  புல்வெளிச் சரிவுகளில் வளைந்து செல்லும் பாதையானது பனிமூட்டமான மலைக்காற்றால் மட்டுமே தொந்தரவு செய்யப்பட்டு, நீலகிரி மலைகளின் பின்னணியில் உதகையின் பிரமிக்க வைக்கும் காட்சிக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

உதகமண்டலம் நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்திற்கு மலைகள் மற்றும் கிராமப்புறங்களில் வளைந்து செல்லும் எண்ணற்ற கரடுமுரடான மற்றும் பழமையான பாதைகள் உங்களை தொட்டபெட்டாவின் அடிவாரத்திற்கு அழைத்துச் செல்லும்.  சிகரத்தின் பசுமையான சரிவுகளுக்கு இடையே சவாலானதாகத் தோன்றும் பாதை உங்களை மேகங்களுக்கு அருகில் கொண்டு வரும்போது சிரமமின்றி இருக்கும்.  மலையேறுபவர்கள் நீலகிரியின் நீல நிற மூடுபனி மலைகளின் 360 டிகிரி அற்புதமான காட்சியைக் காண ஒரு தொலைநோக்கி இல்லம் உங்களுகாக காத்திருக்கிறது.  பந்திப்பூர் தேசிய பூங்காவின் செழுமையான பசுமை மற்றும் கோயம்புத்தூர் மற்றும் மைசூர் பசுமையான சமவெளிகள், அடிவானத்தில் பரவியிருக்கும் அற்புதமான காட்சிகளில் ஒருவர் மெய்மறந்து தொலைந்து போகலாம்.  சிகரத்தில் ஒரு புத்துணர்ச்சியூட்டும் சூடான தேநீர் கோப்பைக்காக, தொட்டபெட்டா தேயிலை தொழிற்சாலைக்கு ஒருவர் செல்லலாம், அங்கு புதிதாக வளர்ந்த தேயிலை தேநீரின் கவரும் சுவையும் நறுமணமும் அவருக்காக காத்திருக்கிறது.  தேயிலையின் உண்மையான ஆர்வலர்கள், தேயிலை தொழிற்சாலையில் நடத்தப்படும் வருடாந்திர தேயிலை மற்றும் சுற்றுலா விழாவை தங்கள் பயணத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.  அதன் காட்டு வசீகரம் மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளுடன், தொட்டபெட்டா மற்றும் அதன் நறுமணம் நிறைந்த அதன் வளிமண்டலமானது சாதாரண வாழ்க்கையின் சத்தம் மற்றும் சோர்வு ஆகியவற்றால் சோர்வடைந்த பயணிகளுக்காக புத்துயிர் ஊட்ட காத்திருக்கிறது.

செய்ய வேண்டியவை

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

Youth Hostel - Ooty

171, Church Hill Road, Pudumund

Hotel Tamilnadu - Ooty I

TTDC, Upper Bazar

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...