தருமபுரியைப் பற்றி பேசும்போது ‘அமைதியானது’ என்பது ஒரு குறியீடாக இருக்கிறது - இந்நிலம் பலவிதங்களில் அழகாக இருக்கிறது. பார்க்கவும், அனுபவிக்கவும், லயிக்கவும் இங்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் இதயத்தை அதற்காக அர்ப்பணித்துவிட வேண்டும். இவ்விடம் நம்மை ரோஜாக்களின் கூட்டத்தை நோக்கி அழைத்து செல்கிறது, வேறு என்ன சொல்ல?
இயற்கை அழகுடன் நிறைந்திருக்கும் தருமபுரி, உங்களை இதமாகவும், வசதியாகவும், மிகவும் ரம்மியமாகவும் உணர வைக்கிறது. தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள தருமபுரி பெரும்பாலும் ‘கோயில்கள் மற்றும் தேவாலயங்களின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது; இதனால் தொலைதூரத்தில் இருந்து வரும் புனித யாத்ரீகர்களைக் கொண்டு இது ஒரு ஆன்மிக சுற்றுலா மையமாக உள்ளது.
இதன் வழிபாட்டுத் தலங்கள் வெறும் தெய்வீகத்தைப் பற்றியது மட்டுமல்ல, அழகான கட்டிடக்கலை மற்றும் இயற்கை எழில், தியானம், கூட்டு பிரார்த்தனை மற்றும் நிம்மதியாக நேரத்தை செலவிட சிறந்த இடங்களாக அமைகின்றன.
இருப்பினும், தருமபுரி ஆன்மிகம் பற்றிய ஊர் மட்டுமல்ல. அற்புதமான காவிரி ஆறு நகரின் மேற்குப் பகுதிகளில் பாய்கிறது. இந்த பேரெழிலான அதிசயங்களைப் பார்த்து நேரத்தை செலவிட விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு இது மிகவும் பிடித்தமான இடமாகும். படகு சவாரி செய்வதற்கும், மருத்துவக் குளியல் எடுப்பதற்கும் , சில அற்புதமான எண்ணெய் மசாஜ்களை அனுபவிப்பதற்கும் இங்கு சிறந்த இடங்கள் உள்ளன.
இது மகிழ்ச்சி மற்றும் புத்துணர்ச்சியை உங்களுக்குள் புகுத்தக்கூடிய அற்புத இடம். காவிரி ஆறு தமிழ்நாட்டிற்குள் நுழையும் இடத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி இந்த இடத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாகும். இந்த நீர்வீழ்ச்சி 'இந்தியாவின் நயாக்ரா நீர்வீழ்ச்சி' என்று அன்போடு குறிப்பிடப்படுகிறது. நீங்கள் தனியாகவோ, நண்பர்களுடன் அல்லது குடும்பத்தினருடனோ நேரத்தை செலவிடக்கூடிய இடமாகும்; எப்படி இருந்தாலும், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க உங்களுக்கு நிறைய காரணங்கள் இங்கு கிடைக்கும்.
தருமபுரி தேசிய நெடுஞ்சாலை NH-44, மாநில நெடுஞ்சாலைகள் SH-17 (தர்மபுரி-பாலக்கோடு-ஓசூர்-மாலூர்), SH-60 (ஒகேனக்கல்-பென்னாகரம்-தர்மபுரி-திருப்பத்தூர்) மற்றும் மொரப்பூர் வழியாக SH-60A (தர்மபுரி-அரூர்) ஆகியவற்றால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் 155 கி.மீ. தொலைவில் உள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையம், சுமார் 294 கி.மீ.
பெங்களூரு ரயில்வே கோட்டத்தின் கீழ் தருமபுரி ரயில் நிலையம் (டிபிஜே).
சேலம் விமான நிலையம், 45 கி.மீ. தொலைவில் உள்ளது.
சிறந்த அனுபவத்திற்கு, நவம்பர் மற்றும் மார்ச் இடையே எந்த நேரத்திலும் தருமபுரிக்குச் செல்லவும். இந்த இடம் கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் வெப்பமண்டல காலநிலையை அனுபவிக்கிறது.