இலவச எண்: 1800-425-31111

மான் பூங்கா, உதகமண்டலம்

உதகமண்டலத்தில்லுள்ள மான் பூங்கா, இந்த அமைதியான உயிரினங்களை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களிலே காண, இது சரியான இடமாகும்.வனவிலங்கு பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான இந்த இடம்,உதகை ஏரியின் கரையில் அமைந்துள்ள மற்றொரு அழகாகும்.

உதகமண்டலம் நகரில் 22 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் ஊட்டி ஏரிக்கு அருகிலுள்ள மற்றொரு அமைதியான இடமாகும், இது ஏராளமான மான்களின் இருப்பிடமாக திகழ்கிறது .  ஏரியின் சுமார் ஆறு ஏக்கர் நிலம், பூங்காவை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டது.  1986ல் திறக்கப்பட்ட இந்த பூங்கா தமிழ்நாடு வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.  இந்தப் பூங்கா மான்களுக்கு மட்டுமே என்று பெயர் கூறினாலும், மான் பூங்காவில் பல்வேறு வகையான பறவைகள் மற்றும் முயல்கள் உள்ளன.  இது இந்தியாவிலுள்ள உயரமான விலங்கு பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும் மற்றும் சாலை வழியாக எளிதில் இதை அணுகலாம்.

கடமான் மற்றும் புள்ளிமான் வகைகளை பூங்காவில் காணலாம். உதகமண்டலத்திலுள்ள மான் பூங்கா, குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையிலும், கவர்ச்சியூட்டும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் சூழப்பட்டிருப்பதால், இயற்கை ஆர்வலர்களின் புகலிடமாக உள்ளது.

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

Hotel Tamilnadu - Ooty I

TTDC, Upper Bazar

Youth Hostel - Ooty

171, Church Hill Road, Pudumund

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...