இலவச எண்: 1800-425-31111

நீலகிரி மலைகளில் இரண்டாவது பெரிய மலை வாசஸ்தலமான குன்னூரில் இயற்கையின் அழகை அதன் மிகச் சிறந்த முறையில் தரிசியுங்கள். மலையேறுபவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த இடம், மனக் கவலையை மறக்க நிறைய உதவுகிறது. நீலகிரி மலைகளின் பச்சைப் போர்வையால் மூடப்பட்டிருக்கும் இது, பல கவர்ச்சிகரமான இடங்களை கொண்டுள்ளது.

அற்புதமான காட்சிகள், பரந்து விரிந்த மலைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் இயற்கையான பசுமையுடன், இயற்கை விரும்பிகளுக்கு, குன்னூர் சரியான இடமாகும்.  மூடுபனியில் மேகமூட்டமான தேயிலைத் தோட்டங்களில் உலா செல்லுங்கள்.  பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் நேரத்தை செலவிடுங்கள்.  சில அற்புதமான நிழற்படங்களை எடுங்கள்.  மறக்கமுடியாத மலையேற்ற அனுபவத்திற்கு தயாராகுங்கள்,  மலை பாதை வழியாக, மிகவும் கண்கவர் காட்சிகள் சிலவற்றின் உச்சிக்கு செல்லுங்கள். நகரத்திற்குச் சென்று கலைப்பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்களைக் கண்டறியவும்.  நீங்கள் பறவைகளை விரும்பினால், சிம்ஸ் பூங்காவிற்குச் செல்லுங்கள், இது குன்னூர் மலையின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொண்டைக்குருவி, சிலம்பன் வகைகள் மற்றும் கருஞ்சிட்டுகளை பார்த்து உங்கள் ஆன்மாவை ஆச்சரியப்படுத்துங்கள். பறவைகளின் சத்தங்களைக் கவனமாகக் கேளுங்கள், அதிர்ஷ்டமிருந்தால், அவற்றை அப்படியே கண்டுபிடியுங்கள். 

அரசாங்கத்தின் முன்னாள் செயலாளரான ஜே டி சிம் பெயரிடப்பட்ட சிம்ஸ் பூங்காவில் தனித்துவமான தாவரங்கள் மற்றும் புதர்கள் உள்ளன.  இங்கு நடைபெறும் வருடாந்திர பழங்கள் மற்றும் காய்கறி கண்காட்சியைக் காண உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள்.  ஆட்டுக்குட்டியின் பாறை (லாம்ப் ராக்), டால்பின் மூக்கு, கேத்தரின் நீர்வீழ்ச்சி, லாஸ் அருவி மற்றும் ட்ரோக் கோட்டை ஆகியவை குறிப்பிடத்தக்க அடையாளங்களாகும். ஆட்டுக்குட்டியின் பாறையின் (லாம்ப் ராக்) உச்சிக்குச் செல்லுங்கள், அது உங்களைச் சற்று சோர்வடையச் செய்யும், ஆனால் அங்கே தெரியும் கண்கவர் காட்சி, உங்கள் முயற்சியை மதிப்புள்ளதாக மாற்றிவிடும். நீங்கள் நல்ல உடல்நிலையோடு இருந்தால், அதற்குச் செல்லுங்கள்.  சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் அழகை, டால்பின் மூக்கு காட்சிமுனையிலிருந்து கண்டு மகிழுங்கள்.  இங்கிருந்து கேத்தரின் நீர்வீழ்ச்சியின் சிறந்த காட்சியையும் பெறுங்கள். குன்னூரில் உள்ளூர் கடைகளை பார்வையிடுங்கள், நேர்த்தியான மற்றும் உங்கள் மனம்கவரும் பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். குன்னூரில் இருந்து உதகை செல்லும் ரயில் பயணம் நீங்கள் தவறவிட விரும்பாத ஒன்று. குன்னூரின் சிறந்த இடங்களை ஆராய்வதற்கு போதுமான நேரத்தை ஒதுக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

COONOOR
WEATHER
Coonoor Weather
17.6°C
Sunny

செய்ய வேண்டியவை

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...