உங்கள் தமிழ்நாட்டுப் பயணத்தில் நீங்கள் எந்த நகரத்தை ஆராய விரும்புகிறீர்கள்? நீங்கள் விரும்பும் வசதியை உங்களுக்கு வழங்கும் இடங்கள்? அப்பகுதியின் வளமான கலை மற்றும் பாரம்பரியம்? அல்லது அவ்விடத்தின் பிரத்யேக அதிசயங்களுக்கு ஆழமாக பயணிக்கவா?
நீங்கள் எதையெல்லாம் இவ்வாறு விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் கோயம்புத்தூர் ஒருசேர வழங்குகிறது. ஒரு பரபரப்பான நகர்ப்புற மையமாக, கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும், வணிகம் மற்றும் வணிகசார் மையமாகவும் உள்ளது. கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான ஜவுளி ஆலைகள் உள்ளன, அதனால் இது 'தெற்கின் மான்செஸ்டர்' என்ற புனைப்பெயரைப் பெற்றது. ஜவுளி தவிர, நகரத்தில் பல பொறியியல் தொழில்கள், இரண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஆட்டோமொபைல் ஆலைகள், மின்னணுவியல் மற்றும் பல்வேறு வெற்றிகரமான உற்பத்தி கட்டமைப்புகள் உள்ளன.
நிதர்சனமான நிகழ்காலம் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் தவிர, கோயம்புத்தூர் ஒரு வளமான வரலாற்றையும் கொண்டுள்ளது. இது முன்னர் கொங்குநாடு என்று அறியப்பட்டு, கோவை என்று அழைக்கப்படத் தொடங்கி, இன்றுவரை பிரபலமான பெயராக உள்ளது.
இந்த இடம் ஒரு காலத்தில் கோயன் அல்லது கோவன் என்று அறியப்படும் பழங்குடி தலைவர்களால் ஆளப்பட்டது. அவர்களின் ஆட்சியை தொடர்ந்து கரிகால சோழன்,ராஷ்டிரகூடர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹொயசாலர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு உட்பட பல வம்சங்கள் ஆண்டன.
பொறுமையான சுற்றுலா பயணிகளுக்கு, கோயம்புத்தூர் நிறைய ஆச்சர்யங்களை வழங்குகிறது. அமைதியான பாலக்காடு இடைவெளிக்கு அருகில் அமைந்துள்ள கோயம்புத்தூர், வலிமைமிக்க மேற்குத் தொடர்ச்சி மலைகளால் இயற்கை அழகு நிறைந்து காணப்படுகிறது. பல வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற ஆச்சர்யமான இடங்கள் உள்ளன. தவிர, கோயம்புத்தூர் பல சுற்றுலா தலங்களுக்கு அருகில் அமைந்துள்ளது, பல ஊர்களுக்கு இது ஒரு முக்கிய சந்திப்பாக அமைகிறது.
காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம் மற்றும் சாய்பாபா காலனி பேருந்து நிலையம்.
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், பீளமேடு, நகர மையத்திலிருந்து சுமார் 15 கி.மீ.
கோயம்புத்தூர் சந்திப்பு ரயில் நிலையம், கோயம்புத்தூர் வடக்கு ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையம் ஆகியவை நகர மையத்திலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது.
நவம்பர் முதல் மார்ச் வரை கோயம்புத்தூரில் மிதமான வானிலை நிலவுகிறது, எனவே இந்த இடத்தை ஆராய்வதற்கு இதுவே சிறந்த நேரம். பொதுவாக, நகரம் வெப்பமான அரை வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது.