இலவச எண்: 1800-425-31111

கெய்ரன் சிகரம்

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கெய்ரன் சிகரம் சூழலியல் சிறப்புவாய்ந்த ஒரு சுற்றுலா தலமாகும். உதகை அருகில் உள்ள இந்த இடம் அமைதியான சூழலுடன் அமைதியை தேடுபவர்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் மலையேற்ற ஆர்வலராக இருந்து, மனதைக் கவரும் மலையேற்றப் பாதையைத் தேடுகிறீர்களானால், பழமையான சைப்ரஸ் மரங்களால் அழகூட்டப்பட்ட இந்த மலைகளுக்குச் செல்லுங்கள்.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த இடம் பழமையான மாற்றப்பட்ட காடுகளில் ஒன்றாகும் ஒரு காலத்தில் இது பழங்குடியினரின் புதைகுழியாக இருந்த  இப்பகுதியில் கற்கள் குவிந்திருந்தன,  அதாவது 'ஒரு நினைவுச்சின்னமாக அல்லது அடையாளமாக கட்டப்பட்ட கரடுமுரடான கற்களின் மேடு, நீலகிரி பீடபூமியில் உள்ள இந்த 168 ஹெக்டேர் காட்டை 1860 களில் ஆங்கிலேயர்கள் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக மாற்றினார்கள் .  இது ஒரு ஆர்க்கிடேரியம், ஒரு கல்வி வசதி மற்றும் ஒரு விளக்க மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.  தொங்கும் பாலத்தின் மேல் நடப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரவசமான மற்றும் மயக்கும் அனுபவமாக இருக்கும்.  மலையேற்றப் பாதைகள் நிச்சயமாக உங்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்கும். 

அவலாஞ்சி சாலையில் உள்ள மலைக் குடியிருப்புகளாலும் மற்றும் விவசாய நிலங்களாலும் சூழப்பட்டுள்ள இந்த இடத்தில்,  சோலைக் காடுகளில், பைன் மற்றும் வாட்டில் போன்ற அயல்நாட்டு மரங்களும் உள்ளன. இந்திய இருவாய்ச்சி (ஹார்ன்பில்), மலபார் வெள்ளை கறுப்பு இருவாய்ச்சி (பைட் ஹார்ன்பில்), கொண்டை பாம்புண்ணிக் கழுகு , கருப்பு மற்றும் ஆரஞ்சு ஈப்பிடிப்பான் (ஃபிளைகேட்சர்), அமூர் பருந்து (அரூர் ஃபால்கன்) மற்றும் வெள்ளை மீன்கொத்தி போன்ற பல பறவை இனங்களைக் கொண்ட இந்த இடம் பறவை ஆர்வலர்களுக்கு சொர்க்கமாகும்.  கண்காணிப்பு கோபுரம் உங்களுக்கு நிலப்பரப்பின் 360 டிகிரி கண்ணோட்டத்தை வழங்குகிறது.  சுற்றுச்சூழல் கடை மற்றும் பழங்குடியினர் பொருட்கள் கண்காட்சியில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கான நினைவுப் பொருட்களை வாங்கலாம்.  காடுகளுக்கு இடையே அமைதியான அனுபவத்தை அனுபவிக்க மலைகளில் உள்ள தனியார் குடிசைகளில் தங்கவும்.  தனியார் ஜீப் சஃபாரிகளில் பயணிக்க வசதிகள் உள்ளன. 

சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் ( eco- tourism center) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.  பெரியவர்களுக்கு நுழைவுக் கட்டணம் ரூ.  20 மற்றும்   குழந்தைகளுக்கு ரூ. 10 ஆகும். நீங்கள் மலையேற்றம் செல்ல விரும்பினால் ரூ. 350, கார்கள் மற்றும் பேருந்துகளை பயன்படுத்த விரும்பினால், கட்டணம் ரூ 10 மற்றும் ரூ 50 ஆகும்.

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

Hotel Tamilnadu - Ooty I

TTDC, Upper Bazar

Youth Hostel - Ooty

171, Church Hill Road, Pudumund

தமிழ்நாட்டின் சுவைகள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...