இலவச எண்: 1800-425-31111

ஆயிரக்கணக்கான ஆன்மிக பாடல்களுக்கு இடையே ஓர் மதி மயக்கும் அழகு நிறைந்த உலகம் ஒளிர்கிறது - அது வாழையடி வாழையான ராஜ வம்சங்கள், வரலாற்று வெற்றிகள் மற்றும் காலத்தால் அழியாத மரபுகளின் பல கதைகளைச் சொல்கிறது. பிரகதீஸ்வரர் கோவில் சோழர் கால திராவிட கட்டிடக்கலைக்கு ஒரு உச்சக்கட்ட சான்றாக உள்ளது.

இந்தியாவின் ஆக மிகப்பெரிய கோவில்களில் ஒன்றான பெருவுடையார் கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. பிரமாண்டமான 'லிங்கமாக' அருந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில், கி.பி. 1010 ஆம் ஆண்டு சோழ மன்னன் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

கங்கைகொண்டசோழீஸ்வரம் கோயில் மற்றும் ஐராவஸ்தேஸ்வரர் கோயில் வளாகம் ஆகியவற்றுடன் மூன்று 'பெரிய சோழர் கோயில்களில்' ஒன்றாக கருதப்படுகிறது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் ஒரு பகுதியாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. 

கோவிலின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று சிவபெருமானின் புனித வாகனமான நந்தியின் பெரிய சிலை ஆகும். 13 அடி உயரமும், 16 அடி அகலமும் கொண்ட இந்த சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. விரிவான பாறைக் கலைப் படைப்புகள் நிறைந்த கோட்டைச் சுவர்கள் கோயிலைச் சூழ்ந்து, முழு வளாகத்துக்கும் பிரமாண்டமான தோற்றத்தைக் கொடுக்கின்றன. 

இக்கோவிலான பிரதான கோபுரம் 216 அடி உயரம் கொண்டது. இது உலகிலேயே மிக உயரமான ஆலய கோபுரங்களில் ஒன்று. கோயிலின் முழு அமைப்பும் கிரானைட் கற்களால் ஆனது. கோவிலுக்கான முக்கிய 'கோபுரங்கள்' மற்றும் நுழைவாயில்கள் விரிவான சிற்பங்களுடன் கூடிய அற்புதமான கட்டமைப்புகளாக திகழ்கின்றன.  

கோயிலின் கல்வெட்டுகள் மற்றும் ஓவியங்கள் தஞ்சை நகரத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி வரலாற்றின் கதையை விவரிக்கின்றன. சிவலிங்கம் கோபுரத்தால் மேலே சூழப்பட்டு, சாந்து பயன்படுத்தாத கற்களால் கட்டப்பட்டுள்ளது. இன்னும் ஒரு அதிசயத்தை மேலே காணலாம் - மேலே உள்ள கல் கிட்டத்தட்ட 80 டன் எடை கொண்டது. ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழ வம்சத்தின் பெருமை மற்றும் வலிமைக்கு இந்த கோயில் ஒரு பொருத்தமான சான்றாக விளங்குகிறது. இந்த பிரமாண்டமான கோவில் வளாகத்தின் கட்டுமானம் முடிவடைய கிட்டத்தட்ட 7 ஆண்டுகள்  ஆனது என்று நம்பப்படுகிறது. சிற்பங்களின் நுணுக்கம், கலைத்தன்மையின் பெருமை மற்றும் கோவில் வளாகத்தின் அளவைக் கருத்தில் கொண்டால் இந்த கால அளவை மிகப்பெரிய சாதனையாகும்.

THANJAVUR
WEATHER
Thanjavur Weather
27.1°C
Mist

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

Hotel Tamilnadu - Thanjavur

Gandhiji Road, Graham Nagar, Manambu Chavdy

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...