நகர்ப்புற காடுகளின் சலசலப்புகளிலிருந்து மறைந்து, இயற்கையாகவே உருவாகியிருக்கும் பனிச்சரிவு (அவலாஞ்சி) ஏரி, படிக நீல நன்னீர் அமைப்பாக திகழ்கிறது. நீலகிரியின் பசுமையான சரிவுகளுக்கு இடையே அமைந்திருக்கும் அவலாஞ்சி ஏரி, உதகை நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் படத்திற்கு ஏற்ற இடமாகும். புத்துணர்ச்சியூட்டும் நீல நீரையும், சுற்றியுள்ள காடுகளின் இனிமையான பசுமையையும் கொண்ட இந்த ஏரி, இவ்வுலக வாழ்க்கையின் சோர்விலிருந்து தப்பிக்க, வெளியேறும் வழியை தேடும் எவருக்கும் விருந்தளிக்கிறது. இந்த ஏரி நீலகிரியின் சில சிறந்த காட்சிகளைக் கொண்டுள்ளது, சரியாக சீரமைக்கப்பட்ட தேயிலை செடிகள் மற்றும் காடுகளின் செழுமையான பசுமை மற்றும் எப்போதும் வெள்ளை மூடுபனியில் மறைக்கப்பட்ட ஒரு அழகிய ஏரியின் பின்னணியில் உள்ள அலை அலையான மலைகள் யாவும் மெய்மறக்கச் செய்திடும். அவலாஞ்சி ஏரி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அழகிய பகுதியாகும், இது உள்ளூர் பழங்குடியினரின் உதவியுடன் மாசற்ற முறையில் பராமரிக்கப்படுகிறது. எல்லா இடையூறிலிருந்தும் வெளியேறி, இயற்கையின் இந்த உன்னத அழகிற்குள் உழைய விரும்பும் எவருக்கும், அவலாஞ்சி ஏரி, ஒரு பரவசமான அனுபவமாக இருக்கும்.
அவலாஞ்சி ஏரிக்கரை, உதகமண்டலத்தில் உள்ள சிறந்த முகாம்களில் ஒன்றாகும். கரையோரங்களில் முகாமிட்டு, மூடுபனி படர்ந்த மலைகளின் மீது சூரியன் உதிக்கும் மயக்கும் காட்சிக்கு விழித்துக் கொள்ளுங்கள். ஏரியைச் சுற்றியுள்ள காடுகளில் முறுக்கு பாதைகள் உள்ளன, அவை உதகையில் மறைந்திருக்கும் சில சிறந்த பொக்கிஷங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும். பருவமழை முடிந்தவுடன், மீன்பிடிப்பதற்காக ஏரி திறக்கப்படுகின்றன.ஏரியில் மீன்பிடித்தலில் ஈடுபடும் போது, மதிய வேளைகளில் ஓய்வெடுக்க மற்றும் தேவையான அனைத்து அடிப்படை அத்தியாவசிய பொருட்களும், அருகில் உள்ள மீன் பண்ணையில் கிடைக்கும். நகர வாழ்க்கையின் அலறல் சத்தத்திலிருந்து தப்பிக்க மற்றும் இயற்கையின் அமைதி மற்றும் அழகிய அழகை அனுபவிக்க, உங்கள் பைகளை எடுத்துக்கொண்டு பனிச்சரிவு (அவலாஞ்சி) ஏரிக்குச் செல்லுங்கள்.
உதகமண்டலம் மத்திய பேருந்து நிலையம், சுமார் 21 கி.மீ.
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், சுமார் 107 கி.மீ.
கோயம்புத்தூர் ரயில் நிலையம், 98 கி.மீ.
ஆண்டின் எந்த நேரத்திலும் ஊட்டிக்கு சென்று சுற்றிப் பார்க்க முடியும் என்றாலும், மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட கோடை மாதங்கள்தான் சிறந்தது.