மதி மயக்கும் சிற்பங்களுக்கும் பிரம்மாண்டமான மண்டபங்களுக்கும் பெயர் பெற்ற இக்கோயிலானது ஒரு பசுமையான, அழகான இடத்தில் மலைகள் சூழ அமைந்துள்ளது. இக்கோயிலின் தலபுராணத்தின்படி விஷ்ணு பகவான் சுந்தரேஸ்வரருக்கு மீனாட்சியை மணமுடித்து வைக்க இங்கு வந்ததாக நம்பப்படுகிறது. விண்ணைத் தொடும் ஒரு கோபுரம், நுழைவாயிலில் பக்தர்களை கோயிலுக்குள் வரவேற்கிறது. இங்குள்ள மண்டபமும் அதில் உள்ள தூண்களும் நம்மை மதிமயக்க செய்கின்றன. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கும் சித்திரை திருவிழா காணக் கண்கொள்ளா காட்சியாக இங்கு திகழ்கிறது. இதைத்தொடர்ந்து அழகர் வைகை ஆற்றில் மூழ்கி எழும் புனித வைபவம் நடக்கின்றது. இந்த வண்ணமயமான திருவிழா மாநிலத்தின் பல்வேறு திசைகளில் இருந்தும் மக்களை கவர்ந்து இழுக்கிறது. நாயக்கர்களின் கலை நுட்பத்தின் உச்சகட்ட சான்று இம்மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள வேலைபாடுகள் ஆகும். புராணங்களில் உள்ள நிகழ்வுகள் பற்றிய சிற்பங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பண்டைய மன்னர்களின் ஆளுயுரச் சிலைகள் மற்றும் ஒரு ஈர்ப்பாகும். இங்குள்ள சிற்பிகளின் ரசனையை நரசிம்மர், கிருஷ்ணர் மற்றும் கிளியின் மீது அமர்ந்துள்ள ரதியின் சிலைகளை வைத்து அளவிடலாம். பண்டைய பல்வேறு மன்னர் குளங்களின் கதைகளும் இக்கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடக்கும் தெப்பத் திருவிழா, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடக்கும் நவராத்திரி திருவிழா, டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி போன்றவை மக்களிடையே மிகவும் பிரபலமான திருவிழாக்களாக இங்கு அமைகின்றன.
மதுரை பிரதான பேருந்து நிலையம், சுமார் 23 கி.மீ.
மதுரை விமான நிலையம், சுமார் 38 கி.மீ.
மதுரை ரயில் நிலையம், சுமார் 22 கி.மீ.
அக்டோபர் - மார்ச்